விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019
அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே! 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். குரு பகவான் 5ஆம் இடம் 7 ஆம் இடம் மற்றும் 9 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 5 ஆம் இடம் புத்திர ஸ்தான பாக்கியத்தையும் 7 ஆம் இடம் திருமண உறவுகளையும் 9 ஆம். இடம் சகல பாக்கியங்களையும் குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
விருச்சிக ராசி - தொழிலும் வியாபராமும்:
வேலையில் கூடுதல் பிரயத்தனம் தேவைப்படுகின்றது. வியாபரம் சுமாராக செல்லும். இடமாற்றமும் தென்படுகின்றது. விருச்சிக ராசி - பொருளாதாரம்: சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து பண வரவு உண்டு. நிதி திட்டங்களை தீட்டி, செலவுகளை மேற்கொள்ளவும்.
விருச்சிக ராசி - கல்வி: கூட்டாகக் கல்வி பயில்வதில் ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் சந்தேகங்களை தீர்க்கக் கூடிய திறன் இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். விரும்பிய பாட திட்டத்தில் சேர முடியும்.
விருச்சிக ராசி - ஆரோக்கியம்: சிறு சிறு பிரச்சினைகளுக்கு கவலைப் பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும். தேகத்திற்கு அவ்வப்போது ஒய்வு தேவை என்று உணரவும். உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். தியானம் யோகா போன்ற பயிற்சிகள் மன நலன் காக்கும். மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:கூடுதல் பிரயத்தனம்
பரிகாரம்:
- குடும்ப நபர்களுடன் அனுசரணை
- நிதி உதவி
- விரும்பிய பாட திட்டத்தில் சேருதல்
ஓம் பிரகஸ்பதியே நமஹ என்று 108 முறை ஜெபிக்கவும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.
No comments:
Post a Comment