ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும்
இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்து இருப்போம் என்பது விதியாகும். ஒவ்வொருவரும் மொத்தமுள்ள 27 நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருப்போம். ஆனால், அதன் அதிதேவதை எது என்பது நம் அனைவருக்கும் தெரியாத ஒன்று. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய நட்சத்திர தேவதையை அறிந்து அல்லது தெய்வத்தை அறிந்து அதை வழிபட்டாலே நம்முடைய சகல காரியங்களும் எளிதில் நிறைவடையும். ஏனெனில், ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் பொழுது அவனின் ஜென்ம நட்சத்திரமே முதன்மை மற்றும் முக்கியமானது ஆகும். அதனால்தான் நாம் கோவில்களுக்குச் சென்று நம் பெயருக்கு அர்ச்சனை செய்யும் பொது நம்முடைய பெயர், கோத்திரம், நட்சத்திரம் ஆகியவற்றைக் கூறி அர்ச்சனை செய்கிறோம்.
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் வரை அவன் பிறந்த “ஜென்ம நட்சத்திரமே” கோயிலில் அர்ச்சனைக்கும், வழிபாட்டிற்கும் உகந்தது. அவன் இறந்த பிறகு, அவன் இறந்த நாளின் “திதி” யே கணக்கில் எடுக்கப்பட்டு, வருடா வருடம் அந்தத் திதியைக் கணக்கில் வைத்தே அவர் நினைவாகத் திதி கொடுக்கப்படுகிறது.
எனவேதான் ஒரு மனிதன் இப்பூவுலகில் உயிருடன் இருக்கும் வரை அவரின் “ஜென்ம நட்சத்திரமும் அவரது ஆன்மா பிரிந்த பிறகு அந்த நாளின் “திதியே” முக்கியமாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் அவரவர் நட்சத்திரத்துக்குரிய “அதிதேவதை” எது என்று தெரிந்து அதையும் வணங்கித் தொழுது வருவோமானால் சகல நலங்களும் இவ்வுலகில் வாழும்வரை அனுபவிக்க இறையருள் கிட்டும். இங்கு எந்தெந்த நட்சத்திரத்திற்கு என்ன தெய்வம் என்று, பழைய கிரந்தங்களிலும், மூலநூல்களிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து “ அதிதேவதைகள் ” யார் – என்று கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அந்தந்த தேவதைகளையும் வணங்கி சகல நலங்களையும் அடைய இறையருள் கிட்டட்டும். அதிதேவதைகள் விவரம் கீழே ; -

எண் | நட்சத்திரம் | தேவதைகள் (வணங்க வேண்டிய தெய்வம்) |
1. | அசுவனி | சரஸ்வதி தேவி |
2. | பரணி | துர்கா தேவி |
3. | கார்த்திகை | அக்னி பகவான் |
4. | ரோகிணி | பிரம்மன் |
5. | மிருகசிரீடம் | சந்திர பகவான் |
6. | திருவாதிரை | சிவன் என்ற ருத்ரன் |
7. | புனர்பூசம் | தேவர்கள் |
8. | பூசம் | பிரகஸ்பதி என்ற குரு பகவான் |
9. | ஆயில்யம் | ஆதிசேஷன் என்ற சர்ப்பம் |
10. | மகம் | சுக்ர பகவான் |
11. | பூரம் | பார்வதி தேவி |
12. | உத்தரம் | சூரிய பகவான் |
13. | ஹஸ்தம் | சாஸ்தா |
14. | சித்திரை | விஸ்வகர்மா |
15. | சுவாதி | வாயு பகவான் |
16. | விசாகம் | முருகன் என்ற குமரன். |
17. | அனுஷம் | மகாலெட்சுமி |
18. | கேட்டை | இந்திரன் என்ற தேவேந்திரன் |
19. | மூலம் | அசுரர்கள் |
20. | பூராடம் | வருண பகவான் |
21. | உத்திராடம் | மகாகணபதி |
22. | திருவோணம் | மகாவிஷ்ணு |
23. | அவிட்டம் | அஷ்டவசுக்கள் |
24. | சதயம் | எமதருமர் |
25. | பூரட்டாதி | குபேரன் |
26. | உத்திரட்டாதி | காமதேனு |
27. | ரேவதி | ஶ்ரீ சனி பகவான் |
No comments:
Post a Comment