மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை
விரதங்கள் பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. திருமணத்தின் போது மணமக்கள் இருவரும் அக்னி சாட்சியாக உன் அனைத்து சுக துக்கங்களிலும் நான் பங்கு கொள்வேன் என உறுதிமொழி எடுக்கின்றனர்.
பொதுவாக கணவனின் ஆயுளை அதிகரிக்க மனைவிமார்கள் பல பு+ஜைகள் செய்வதும், விரதங்கள் இருப்பதும் வழக்கம். அதுபோல மனைவிக்கு ஆயுள் பலன் அதிகரிக்க கணவன்மார்களும் சில பூஜைகளை செய்யலாம்.
கணவன் செய்யவேண்டிய பூஜை :
திருமணத்தில் மணமக்கள் ஒருவருக்கொருவர் 'நீண்ட ஆயுளுடன் வாழ ஹோமம் செய்கிறேன்" என மந்திரம் சொல்லி ஹோமம் செய்ததை அனைவரும் உணர வேண்டும்.
மனைவிக்காக கணவர் திங்கட்கிழமையும், கணவனுக்காக மனைவி வெள்ளிக்கிழமையும் இஷ்ட தெய்வத்திற்கு விரதமிருக்க அன்பும், ஆயுளும் அதிகரிக்கும்.
கணவன்மார்கள் வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் செய்யும் பூஜையால் குடும்ப பலம் சீராகும். தனிப்பட்ட வேண்டுதல்கள் பலன் தரும். மகப்பேறு கிட்டும். மனைவி ஆயுள் பலம் கூடும். வாரிசுகள் வாழ்வில் தடைகள் நீங்கும். பொன், பொருள் சேரும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
தன் உடலில் சரிபாதியை தேவி பார்வதிக்கு அளித்தவர் சிவபெருமான். திங்கட்கிழமை அன்று கணவன்மார்கள் சிவனை நினைத்து அன்று முழுமனதுடன் விரதம் இருந்து பின் சிவனுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் மனைவியின் ஆயுள் பலம் கூடும்.
பொதுவாக திருமணத்தன்று மணமக்கள் இருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ஹோமம் வளர்ப்பது வழக்கத்தில் உள்ளது.
அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சிவனுக்கு இருக்கும் இந்த விரதம் விளங்குகிறது. இந்த விரதத்தை மனைவி கடைபிடித்தால் கணவனின் ஆயுள் பலம் கூடும்.
No comments:
Post a Comment