ஜோதிடர் பதில்கள்
1. மேஷ லக்னம், குரு திசை நடந்தால் என்ன பலன்?
உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.
ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும்.
வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
2. கன்னி லக்னம், 3ல் குரு மற்றும் மாந்தி இருந்தால் என்ன பலன்?
கல்வி வேள்விகளில் திறமை உடையவர்கள்.
எதிலும் சிக்கனமானவர்கள்.
சகோதரர்களால் ஆதரவு கிடைக்கும்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. என் வீட்டிற்கு அருகில் இருக்கும் மின்கம்பத்தில் தீப்பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
உத்தியோகத்தில் சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான சு+ழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. இளநீர் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இளநீர் குடிப்பது போல் கனவு கண்டால் மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் என்பதைக் குறிக்கின்றது.
5. மிதுன லக்னம், 4ல் சனி இருந்தால் என்ன பலன்?
நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.
வாகனங்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
ஆரோக்கியத்தில் சிறு சிறு இன்னல்கள் ஏற்பட்டு மறையும்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. 5ல் சனி இருந்தால் என்ன பலன்?
அலைபாயும் மனநிலையை உடையவர்கள்.
புதியதை தேடி செல்லக்கூடியவர்கள்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. ஒருவர் கத்தியுடன் என்னை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பிறரின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்வதை தவிர்க்கவும் என்பதைக் குறிக்கின்றது.
8. அம்மை போட்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
9. பெருவெள்ளம் வருவது போலவும், நான் அதில் சிக்கி கொள்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் சற்று விழிப்புணர்வு வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
No comments:
Post a Comment