அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

ரஜ்ஜு பொருத்தம்


ரஜ்ஜு பொருத்தம்
திருமண வாழ்வின் நீண்ட மற்றும் குறுகிய ஆயுளை ரஜ்ஜு பொருத்தம் தீர்மானிக்கிறது. இதை நாட்டுபுற வழக்கில் சரடு பொருத்தம் என்றும் கூறுவார்கள். ஏனைய பொருத்தம் அமைந்து இந்த ரஜ்ஜு எனும் மாங்கல்ய சரடு பொருத்தம் இல்லையெனில் நன்மையில்லை. ஏனைய பொருத்தம் அதிகம் இல்லாமல் ரஜ்ஜு மட்டுமே பலமாக அமைந்தால் கூட சுகவாழ்வில் சிக்கல் வந்தாலும் திருமண வாழ்வின் ஆயுள் நீண்டு அமையும்.
நட்சத்திரங்கள் ஐந்து வகை ரஜ்ஜு என பிரிக்கப்பட்டு உள்ளன.
அவை
பாதம்
தொடை
உதரம்
கண்டம்
சிரசு
நட்சத்திர மண்டலத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்திக் கொண்டு அவன் பாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தையும், தொடையில் பரணி, வயிற்றில் கார்த்திகை, கழுத்தில் ரோகிணி, தலையில் மிருகசீரிடம் என நட்சத்திரங்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேல் நோக்கி செல்பவைகளை ஆரோகணம் என்றும், கீழ்நோக்கி வருபவைகளை அவரோகணம் என்றும் சொல்வார்கள்.
சிரசு ரஜ்ஜு - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரஜ்ஜு - ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
உதரம் ரஜ்ஜு : கிருத்திகை, புனர்பு+சம், உத்திரம், விசாகம், உத்திராடம், பு+ரட்டாதி
தொடை ரஜ்ஜு - பரணி, பு+சம், பு+ரம், அனுஷம், பு+ராடம், உத்திரட்டாதி
பாதம் ரஜ்ஜு - அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி
இரண்டில் ஒன்று ஏறுமுகமாகவும் மற்றொன்று இறங்கு முகமாகவும் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் அமைந்தால் உத்தமமான பொருத்தம்.
ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இரண்டும் ஏறுமுக ரஜ்ஜுவாக அமைந்தாலும் ஓரளவு நன்மையே.
இரண்டும் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் இறங்கு முக ரஜ்ஜு எனில் மத்திமமான பலன்கள் உண்டு.
இதில் ஆண், பெண் ஒரே ரஜ்ஜுவாக இருந்தால் இணைக்கக்கூடாது.
ஆண், பெண் ஒரே ரஜ்ஜுவாக அமைந்து அதில்,
1. பாத ரஜ்ஜு எனில் ஒரே ஊரில் ஒரே இடத்தில் வாழ விடாமல் அலைய வைக்கும். ஒரே இடத்தில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் மாற்றம், இடமாற்றம், என பல பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும்.
2. தொடை ரஜ்ஜு எனில் தாம்பத்ய உறவில் சுகமான மனநிறைவை உண்டாக்காது. பண நஷ்டம் உண்டாகும். அதனால் மன வேற்றுமைகள் உண்டாகலாம்.
3. உதரம் ரஜ்ஜு எனில் புத்திர பாக்கியத்தில் சிக்கலை உண்டாக்கும்.
4. கண்டம் ரஜ்ஜு எனில் குறுகிய கால மனவாழ்வு அமையலாம்.
5. சிரசு ரஜ்ஜு எனில் கணவரின் ஆயுள் பலம் குறைவாக அமையலாம்.
சில விதி விலக்காக, ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றாலும், மாங்கல்ய ஸ்தானம் நன்றாக இருந்தது என்றால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். 7ஆம் இடம், 8ஆம் இடங்களில் சுப கிரகங்கள் இருந்தாலோ, சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலோ அல்லது 7, 8ஆம் இடங்களை சுப கிரகங்கள் பார்வையிட்டாலோ ரஜ்ஜு பொருத்தமே இல்லையென்றாலும் துணிந்து திருமணம் முடிக்கலாம். ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment