ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019
அன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே! 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.தங்களது ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 7 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 11 ஆம் இடம் 1 ஆம் இடம் மற்றும் 3 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 11 ஆம் இடம் விருப்பங்கள் நிறைவேறுவதையும் லாபத்தையும் குறிக்கும். 1 ஆம் இடம் தேக நலனையும் மன நலனையும் வெற்றி தோல்வியையும் குறிக்கும் 3 ஆம் இடம் தகவல் பரிமாற்றம் சிறு தூரப் பிராயணம் இவற்றை குறிக்கும். இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
ரிஷப ராசி - தொழிலும் வியாபராமும்:
வெகு நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு இக் காலக் கட்டத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடன் பணி புரிவோரிடம் சுமுக உறவு மேற்கொள்ள முடியும். தங்கள் திறமைகளை வைத்துக் கொண்டு உபரி வருமானம் சம்பாதிக்க வழி உண்டு. வியாபாரத்தில் முன்னுயர்வு தெரிகிறது. வியாபார விரிவாக்கத்திற்கு இடமுண்டு. கூட்டு முயற்சிகளுக்கு சரியான கூட்டாளியை கண்டுபிடித்து கூட்டு சேர்வது நல்லது.
ரிஷப ராசி - பொருளாதாரம்:
பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரத்தில் இக்காலக் கட்டத்தில் கூடுதல் செலவுகளும் தென்படுகின்றது. வரிகளை காலா காலத்தில் செலுத்துவது நல்லது. ஏனென்றால் அபராத கட்டணங்கள் கண்ணுக்கு தென்படுகின்றது. மருத்துவக் காப்பீடுகள் மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.
ரிஷப ராசி - குடும்பம்:
குடும்ப உறவில் சுமுகம் தெரிகின்றது. தங்களது சிறப்பு முயற்சியால் வாழ்க்கைத் துணையின் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒவ்வொருவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள பிரத்தியேக முயற்சி உங்களிடம் உண்டு.
ரிஷப ராசி - கல்வி:
இது மேற் படிப்பிற்கு உகந்த காலம் ஆகும். தங்களது நண்பர்கள் தங்களது வழ்காட்டுதல்களை எதிர்பார்க்கலாம். குழுவாகப் படிப்பதன் மூலம் பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார மேலாண்மை, அயல் நாட்டு வர்த்தகம், விஞ்ஞானம் போன்ற பாடங்களைப் பயில்வோர் ஏற்றம் காணுவர்.
ரிஷப ராசி - காதலும் திருமணமும்:
வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யமுண்டு. வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு சிறந்த முறையில் இருக்கும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும்.
ரிஷப ராசி - ஆரோக்கியம்:
இக் காலக்கட்டத்தில் உடல் ஆரோக்கியம் பராமரிக்க முடியும். சிறு சிறு உபாதைகள் இருந்தாலும் சுலபமாக மீள முடியும். தீராப் பிணிகளுக்கு கூட இக் காலகட்டத்தில் ஒரு தீர்வு காண முடியும். மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- காதலில் வெற்றி
- திருமணம்
- பதவி உயர்வு
- பிணிகளிலிருந்து விடுதலை
- பொருளாதார முன்னேற்றம்
பரிகாரம்:
“ஓம் குரவே நமஹ” என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கலாம். ஏழை எளியவர்களுக்கு பொருளாதார உதவி செய்யவும்.
No comments:
Post a Comment