துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019
அன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.தங்களது ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 6 ஆம் இடம் 8 ஆம் இடம் மற்றும் 1௦ ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 6 ஆம் இடம் ரோகத்தையும் சத்ருக்களையும் குறிக்கும். 8 ஆம் இடம் இடையூறுகள் மற்றும் சிரமங்களையும் 1௦ ஆம் இடம் தொழிலையும் கவுரவத்தையும் குறிக்கும்.
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
துலாம் ராசி - தொழிலும் வியாபராமும்:
தொழிலில் முன்னுயர்வு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். வியாபார நடவடிக்கைகள் ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும். புதிய திட்டங்கள், புதிய முதலீடுகள் ஆகியவற்றிற்கு இடமுண்டு.
துலாம் ராசி - பொருளாதாரம்:
வருமானம் உயரும். முதலீடுகளை கூட்டி கொண்டு செல்லலாம். நீண்ட கால முதலீடுகள் நற்பலன் அளிக்கும் காலமிது. பொருளாதாரம் வலுக்கும்.
துலாம் ராசி - குடும்பம்:
குடும்ப சூழல் திருப்தி அளிக்கும். குடும்பப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.குடும்ப நபர்களுக்கு தங்களால் ஆலோசனைகளை வழங்க முடியும். அவர்களும் கேட்கும் நிலயில் இருப்பர்.குழந்தைகளால் சந்தோஷம் உண்டு.
துலாம் ராசி - கல்வி:
மேற்படிப்பிற்கான பிரயாணங்கள் உண்டு.கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பிரயத்தனங்களுக்கு நற்பலன் உண்டு.
துலாம் ராசி - காதலும் திருமணமும்:
உறவில் பரஸ்பர அன்பு உண்டு. திருமண பந்தங்கள் வலுக்கும். கேளிக்கைகளுக்கு இடமுண்டு. தகவல் பரிமாற்றத்தால் பிறரின் அன்பினைப் பெற முடியும்.
துலாம் ராசி - ஆரோக்கியம்:
நீண்ட நாட்களாக இருந்து வந்த உபாதைகளிலிருந்து விடுதலை உண்டு. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மையால் ஆரோக்கியம் கெடாது. பழ வகைகள் அதிகம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்க்கவும்.
மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- வருமான உயர்வு
- உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம்
- புதிய முதலீடுகள்
- உறவுகளில் அனுசரணை
பரிகாரம்:
ஓம் நமோ வாசஸ்பதியே என 108 முறை ஜெபிக்கவும்.
ஏழை எளியவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்.
No comments:
Post a Comment