கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019
அன்பார்ந்த கும்ப ராசி நேயர்களே!
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.
தங்களது ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 1௦ ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் பிணிகளையும் எதிரிகளையும் குறிக்கும்..
இக்கோட்சாரத்தினால் வரும் பலன்களை சற்று பார்ப்போம்.
கும்ப ராசி - தொழிலும் வியாபராமும்:
பணிகளை கவனமாக மேற்கொள்வது நல்லது. கவனச் சிதறலினால் பணிகளில் சிரமங்களை சந்திக்க நேரலாம். உடன் பணிபுரிவோருடன் தர்க்கங்களை தவிர்க்கவும். தானுண்டு தன வேலையுண்டு என்று இருப்பது நன்று. அவ்வாறு இருந்தால் தான் உறப்த்தித் திறன் காண முடியும்.
கும்ப ராசி - பொருளாதாரம்:
ரொக்கப் பரிமாற்றங்களில் முன் ஜாக்கிரதையாக இருக்கவும். செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும். அதிகமாக மருத்தவ செலவுகள் காணப்படுகின்றது. அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். மொத்தத்தில் பொருளாதாரம் சுமார்.
கும்ப ராசி - குடும்பம்:
குடும்ப உறவுகளில் அதிருப்தி நிலவலாம். வீண் சண்டை சச்சரவுகளுக்கு இடமுண்டு. குழந்தைகளைப் பற்றிய விசாரம் ஏற்படலாம். தாயாரின் உடல் நலம் பற்றிய கவலை காணப்படும். அதிகமாக விட்டுக் கொடுத்து உறவுகளை பராமரிக்க நேரும்.
கும்ப ராசி - கல்வி:
கல்வியில் வெற்றி பெற அதிக பிரயத்தனங்கள் தேவை. மேற்கல்வி வாய்ப்புகள் தென்படுகின்றது. சுய முடிவு எடுப்பது சிறந்தது. நண்பர்களை கல்ந்தலோசிப்பதால் சற்று தடுமாற்றம் ஏற்படலாம்.
கும்ப ராசி - காதலும் திருமணமும்:
வாழ்க்கைத் துணை சதா ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து சண்டை சச்சரவுகளை துவக்கலாம். எனவே கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்க்கவும். உறவுகளை பராமரிக்க அதிக பொறுமை தேவை. திருமண வாய்ப்புகள் வலுவாக இல்லை.
கும்ப ராசி - ஆரோக்கியம்:
அஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி தென்படுகின்றது. உணவு விஷயத்தில் முன் ஜாக்கிரதையாக இருக்கவும். உடல் உபாதைகளை தவிர்க்க முன் ஜாக்கிரதையாக இருத்தலும் கவனமாக இருத்தலும் மிகவும் முக்கியம் ஆகும்.
மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:
- வேலையில் கவனச் சிதறல்
- கடும் முயற்சி
- உறவில் உரசல்
- அனாவசிய செலவுகள்
- மருத்துவ செலவுகள்
முன்னெச்சரிக்கை:
கவனமாக பணிகளை மேற்கொள்ளவும்தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை
அதிக பிரயத்தனங்கள் தேவைப்படும்.
அபிப்பிராய பேதத்தின் போது தர்க்கங்களை தவிர்க்கவும்.
பரிகாரம்:
ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குருஹோமம் செய்யவும்.
No comments:
Post a Comment