கால சர்ப்ப தோஷம்
ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப தோஷம் எனப்படும். இதில் ராகு என்பது காலனையும், கேது சர்ப்பத்தையும் குறிக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். இப்படி ராகு கேதுவுக்கு இடையில் ஏழு கோள்களும் இருக்கக்கூடிய காலத்தை சர்ப்ப காலம் என்று குறிப்பிடுகிறார்கள். அப்போது பிறக்கிற குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.
உங்கள் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ராகுவுக்கும் கேதுவுக்கும் இடையில் இருந்து மற்ற கட்டங்கள் காலியாக இருந்தால் மட்டுமே அவை நாக சர்ப்ப தோஷமாகும். எதாவது ஒரு கிரகம் விலகியிருந்தால் கூட அவை நாக சர்ப்ப தோஷம் ஆகாது. இவற்றில் கிரகங்கள் அமையும் தன்மை பொருத்து கால சர்ப்ப தோஷம் பல வகைகளாக பிரிக்கிறார்கள். இதற்கேற்ற பலன்களும் இருக்கிறது.
அனந்த கால சர்ப்ப தோஷம், ராகு முதல் வீட்டிலும் கேது ஏழாம் வீட்டிலும் இருப்பர். மற்ற கிரகங்கள் இவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும். அதாவது முதலாவதும் கடைசியுமாக ராகு கேது இருந்தால் அதற்கு பெயர் அனந்த கால சர்ப்ப தோஷம். இந்த தோஷம் இருப்பவர்களுக்கு இளமை காலம் மிகவும் சிரமமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். சிலருக்கு திருமணத்தடை இருக்கும். அதன் பிறகு வாழ்க்கை அமைதியாய் அமைந்திடும்.
ஐந்தாம் வீட்டில் ராகு மற்றும் பதினோராம் வீட்டில் கேது இருப்பவர்களுக்கு பத்ம கால சர்ப்ப தோஷம் இருக்கும். இது தான் சற்று மோசமான தோஷமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இது புத்திர தோஷத்தை கொடுக்கக்கூடியது. குழந்தை கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இதனால் கணவன் மனைவிக்கு இடையே உறவில் விரிசல் விழும். 48வயதுக்கு பிறகு இவர்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரியும்.
ஏழாம் வீட்டில் ராகுவின் லக்னத்தில் கேது இருந்தால் அது கால மிருத்யு சர்ப்ப தோஷம். இவர்களுக்கு 27வயதுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னால் செய்து கொண்டால் அது நிலைக்காது.
No comments:
Post a Comment