அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

அனுமன் வாலின் சிறப்புக்களும் அதன் வழிபாட்டு முறைகளும்

சூரியனிடம் பாடம் கற்று, அனுமன் சூரியனை வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனுடன் அனுமனையும் சேர்த்து வலம் வந்தன.

இதனால் அனுமனின் வாலிற்குப் பின்புதான் நவக்கிரகங்கள் இருக்க வேண்டியதாகி விட்டது. இதன் மூலம் அனுமனை வழிபடுபவர்கள் அனைவருக்கும் நவக்கிரகங்களின் பாதிப்புகள் எதுவும் இருக்காது.
 
இராவணன் அனுமனின் வாலுக்கு தீ வைத்த போது, சீதை வேண்டியதால் வெம்மையும் குளிர்ச்சியாகவே இருந்தது. நெருப்பினால் ஏற்படும் காயங்களிலிருந்து குணம் அடைய அனுமனை வழிபடலாம்.
 
இராவணனின் சபையில் அனுமன் தன் வாலால் ஏற்படுத்திய சிம்மாசனத்தில் அமர்ந்து பேசி, இராவணின் கர்வத்தை அடக்கினார். இதன் மூலம் அனுமனின் வாலுக்குத் தனிப்பெருமை கிடைத்தது.
 
அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாகக் கருதப்படுவதால், ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். இந்த வழிபாடு நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாகக் கருதப்படுகிறது.
 
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன்தான் அனுமனுக்கு முதன் முதலாக வால் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. பீமன் அலட்சியத்தோடு அனுமனின் வாலை அகற்ற முயற்சித்தான். ஆனால், அவனால் அந்த வாலைச் சிறிதுகூட அசைக்க முடியவில்லை. அவன் பலமுறை கடுமையாக முயற்சித்தும் வாலை நகர்த்த முடியாமல், தவித்து நின்றான்.
 
வாயுகுமாரனின் புதல்வனான அனுமன் அப்போது அனுமனே, தன்னுடைய வாலை நகர்த்திக் கொண்டு, ‘நான் சாதாரணக் குரங்கல்ல, நான் வாயுகுமாரனின் புதல்வனான அனுமன்” என்று கூறினார். அதனைக் கேட்ட பீமன், தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். பின்னர் அவன் அனுமனின் வலிமையை வியந்து பாராட்டினான்.
 
அனுமனையும் அனுமனின் வாலையும் வணங்கிய அவன், எனக்கு அனைத்து சக்திகளையும் அளித்து வாழ்த்தியது போல், தங்கள் வாலைத் தொட்டு வணங்கி வழிபடுபவர்களுக்கு அனைத்து நலன்களையும் தந்தருள வேண்டும் என்று வரம் வேண்டினான். அனுமனும் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்தார். அதன் பிறகு, அனுமனின் வாலை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. அனுமன் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு, அவர்கள் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும்.

No comments:

Post a Comment