சனிப்பெயர்ச்சி 2023 ஓர் கண்ணோட்டம்..!!
நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக கருதப்படுவது சனி கிரகம் ஆகும். சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. அவரவர்களின் கர்மவினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகமாக கருதப்படக்கூடியவர் சனிதேவர் ஆவார்.
அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய எடுத்து கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த இரண்டரை வருடம் முழுவதும் சனிதேவர் தான் நின்ற ராசியில் இருந்து, தனது சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடியவர் ஆவார்.
சனிபகவான் ஒருவரின் ஜென்ம ராசிக்கு 3, 5, 6, 9, 10, 11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் காலக்கட்டத்தில் இன்னல்கள் இல்லாத இன்பங்களை அளிப்பார்.
ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரைய சனி, ஜென்ம சனி, பாதச்சனி என்ற நிலைகளில் இருந்து அந்தந்த ராசிகளுக்கு புதுவிதமான அனுபவத்தையும், படிப்பினையும் அளிப்பார்.
அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி காலத்தில் பலவிதமான இன்னல்களை உருவாக்கினாலும் கடைசியில் நன்மையான பலன்களை கொடுப்பார். மனதில் எதையும் ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் புதுவிதமான புரிதல்களையும் உருவாக்குவார்.
இன்று பெயர்ச்சியாகும் சனி பகவான் :
2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி (இன்று மாலை 06.04 மணிக்கு) திருக்கணித பஞ்சாங்கப்படி, சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படி, சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
2023-2025 சனிப்பெயர்ச்சியில் நன்மை பெறும் ராசிகள் :
ரிஷப ராசி
கன்னி ராசி
துலாம் ராசி
தனுசு ராசி
2023-2025 சனிப்பெயர்ச்சியில் கவனம் வேண்டிய ராசிகள் :
கடக ராசி
சிம்ம ராசி
விருச்சிக ராசி
கும்ப ராசி
மீன ராசி
12 ராசிகளுக்கும் 2023-2025ஆம் ஆண்டிற்கான சனிப்பெயர்ச்சி பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
ஏழரை சனி எந்தெந்த ராசிக்கு?
ஒருவரின் ஜாதக கட்டத்தில் ஜெனன சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் கடந்து செல்லும் காலமானது ஏழரை சனி என்று அழைக்கப்படுகின்றது. இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியின் தாக்கத்திற்கு உட்படும் ராசிகள் பின்வருமாறு..
மகர ராசிக்கு ஜென்ம சனி முடிந்து பாதச்சனி ஆரம்பிக்கிறது.
கும்ப ராசிக்கு விரைய சனி முடிந்து ஜென்ம சனி ஆரம்பிக்கிறது.
மீன ராசிக்கு லாப சனி முடிந்து விரைய சனி ஆரம்பிக்கிறது.
அஷ்டம சனி எந்தெந்த ராசிக்கு?
இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் அஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து மிதுன ராசியினர் விடுபடுகின்றனர். கடக ராசியினருக்கு அஷ்டம சனி தொடங்குகிறது.
அஷ்டம சனியின் பொதுவான பலன்கள் என்பது நெருக்கமானவர்களை பற்றிய புதிய புரிதலை உருவாக்கும். எதிர்பாராத சில இழப்புகள் மூலம் புதிய அத்தியாயம் பிறக்கும். சிந்தனைகளில் எதிர்காலம் சார்ந்த கனவுகளும், செயல்பாடுகளை பற்றிய சிந்தனைகளும் அதிகரிக்கும்.
கண்டச்சனி எந்தெந்த ராசிக்கு?
இன்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சியில் கண்டச்சனியின் தாக்கத்தில் இருந்து கடக ராசியினர் விடுபடுகின்றனர். சிம்ம ராசியினருக்கு கண்டச்சனி தொடங்குகிறது.
No comments:
Post a Comment