அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

 சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம்


திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.


வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார்.


கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.


சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..


குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை

குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை

குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை

குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை

சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி

ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை

ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை

ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை

சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி

குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை

குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை

குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை

குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை

சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி

ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை

ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை

ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது.


இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.


மேஷம்


(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசி அன்பர்களே திருக்கணித அடிப்படையில் சனி பகவான் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரை) உங்கள் ராசிக்கு லாபஸ்தானம் என்னும் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட இருக்கிறது.


குறிப்பாக உத்யோக ரீதியாக இது வரையில் இருந்த தேவை இல்லாத இடர்பாடுகள் எல்லாம் விலகி ஏற்றம் ஏற்பட இருக்கிறது. எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.


ஆரோக்கியம் கூட வர இருக்கும் நாட்களில் படிப்படியாக தேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்பெறும். பழைய கடன்கள் கூட அடைபடும்.


சிலர் பெரிய முதலீடுகளை செய்து வளமான வாழ்க்கையை பெறுவீர்கள். உத்யோக ரீதியாக விரும்பிய இடமாற்றம் மற்றும் சலுகைகள் கிடைக்கப்பெறும்.


சிலருக்கு வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கூட ஏற்படும். சேமிப்பு கூட கணிசமாக உயரும்.


திடீர் லாபங்கள் மகிழ்ச்சி தரும். 1.5.2024 முதல் 14.5.2025 வரையில் குரு பகவானின் அருளால் அனைத்து விதங்களிலும் நல்ல அனுகூலமான பலன்கள் ஏற்படும்.


மேற்படி கால கட்டத்தில் திருமணம் போன்ற சுப காரிய பேச்சுக்கள் கூட நன்மை தரும். 30.10.2023 முதல் 18.5.2025 வரையிலான கால கட்டத்தில் கேதுவின் சஞ்சாரம் கூட உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.


உடல் ஆரோக்கியம்


இது வரையில் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குணம் காணும். பலருக்கு உடல் நிலை தேறும். இதனால் நெடு நாள் நோயாளிகளுக்கும் கூட மருத்துவ செலவுகள் குறையும்.


இதனால், இனிமேல் வரும் காலங்களில் நீங்கள் சேமிக்க முடியும். உங்கள் கடமைகளை நல்ல விதங்களில் நிறைவேற்றுவீர்கள்.


குடும்பம், பொருளாதார நிலை:


குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். திடீர் உதவிகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். கணவன் மனைவி இடையே மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்.


மற்றபடி, இனி வரும் காலங்களில் பலருக்கு பொருளாதார நிலை மேம்படும். வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் சிலருக்கு அமையப்பெறும். ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இதனால் சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.


கொடுக்கல்-வாங்கல்:


கொடுக்கல்-வாங்கலில் இது நாள் வரையில் இருந்த நெருக்கடிகள் பலருக்கு குறையும். சிலருக்கு வராது என்று இருந்த பணம் கூட வசூல் ஆகும். எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கும். கடன்கள் குறையும் அல்லது சிலருக்குத் தீரும்.


சில விஷயங்களில் அலைச்சல் இருந்தாலுமே கூட உங்களது முயற்சி வீண் போகாது. எண்ணியது எண்ணியபடி நடந்தேறும். அதனால் கவலை வேண்டாம்.


தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இது நாள் வரையில் இருந்த நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அதிக முதலீடுகளை செய்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி காணுவீர்கள்.


சிலர் வேலையை விட்டு புதிய தொழில் தொடங்குவீர்கள். பலருக்கு நல்ல வேலை ஆட்கள் அமைவார்கள். எனினும் அவர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள்.


சிலருக்கு புதிய கூட்டாளிகள் கூட அறிமுகம் ஆவார்கள். மொத்தத்தில் பெரும்பாலும் தொழில் அல்லது வியாபார ரீதியாக நல்ல பலன்கள் தான் ஏற்படும்.


உத்யோகம்:


உத்யோகத்தில் நீங்கள் இது நாள் வரையில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறந்து விட்டது. உங்கள் உழைப்பிற்கான நல்ல வெகுமானம் கிடைக்கப்போகிறது. பலருக்கு இதை விட நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உற்சாகமாக இருப்பீர்கள்.


அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய அதிகாரிகளின் தயவு கிடைக்கப்பெறும். பதவி உயர்வுகள், எதிர்பார்த்த இடமாற்றம் கூட பலருக்கு கிடைக்கப்பெறும்.


சிலருக்கு வசூல் ஆக வேண்டிய சம்பள பாக்கிகள் வசூலாகும். உங்கள் கனவுகள் எல்லாம் நல்ல படியாக நிறைவேறும் காலம் இந்தக் காலம்.


அரசியல்


உங்களது பெயர் புகழ் மேலோங்கும். மக்களிடையே உங்களுக்கான மதிப்பு, மரியாதை உயரும். மேலிடத்தின் ஆதரவு கூட உங்களுக்கு மகிழ்ச்சி தரும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நல்ல பெயரை எடுப்பீர்கள்.


அதிகாரிகள் ஆதரவு கூட உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும் காலம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் கூட வெற்றி அடையும்.


விவசாயிகள்


பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறும். நீங்கள் வாங்கிய கடன் கூட அடைபடும். புதிய விளை நிலங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.


அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த மானிய உதவிகள் கூட கிடைக்கப்பெறும். நவீன யுத்திகளை பின்பற்றி நல்ல மகசூலை காண்பீர்கள். மொத்தத்தில், விவசாயத் தொழிலில் நல்ல முறையில் அபிவிருத்தி காணுவீர்கள்.


கலைஞர்கள்


பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த வகையில் மனம் மகிழும் இனிய சம்பவங்கள் நடந்தேறும். மக்கள் மத்தியில் நல்ல பெயர், புகழ் உங்களுக்கு கிடைக்கும்.


சிறந்த கதா பாத்திரங்களை தேர்வு செய்து வெற்றியை பெறுவீர்கள். நடிப்பில் உங்களுடைய செயல்பாடு திறன் அதிகரிக்கும் காலம் என்றே சொல்ல வேண்டும்.


பலருக்கு விருதுகள் கூட கிடைக்கப்பெறும். கலைத்துறையில் உன்னத சாதனைகளை நிகழ்த்த இருக்கிறீர்கள்.


பெண்கள்


தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். ஆடை, அணிகலன் வாங்கும் யோகம் கிடைக்கப்பெறும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.


கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். திறமைகளை நல்ல முறையில் வெளிக்காட்டுவீர்கள்.


மாணவச் செல்வங்கள்


உங்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களை புரிந்து படிப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர் ஆதரவு மகிழ்ச்சி தரும். நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கூட கிடைக்கப்பெறும்.


போட்டிகளில் கூட பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். பல மோசமான நண்பர்கள் உங்களை விட்டு விலகி நல்ல நண்பர்களின் ஸ்நேகம் அல்லது நட்பு கிடைக்கப்பெறும். அதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் நன்மை அடைவீர்கள்.


சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


சகல விதங்களிலும் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு இக்கால கட்டத்தில் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும் அல்லது நீங்கும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும். பணவரவுகள் கணிசமாக அதிகரிக்கும்.


கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்து பொறுமையை கடைபிடியுங்கள்.


வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் கூட படிப்படியாக குறையும். வேலை ஆட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைக்கப்பெறும்.


சிலர் உத்தியோகத்தை விட்டு, விட்டு சொந்தத் தொழிலை ஆரம்பிப்பீர்கள்.


உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கூட ஏற்படும்.


வேலைக்கு செல்லும் பெண்களின் கௌரவம், மதிப்பு குடும்பத்தில் உயரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கூட கிடைக்கப்பெறும். பெரும்பாலும் நல்லதே நடக்கும். அதனால் உற்சாகமாக இருங்கள்.


சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


அலைச்சல் இருந்தாலுமே கூட நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடித்து நீங்கள் நல்ல பெயரை எடுப்பீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும்.


கடந்த காலத்தில் இருந்து வந்த வம்பு, வழக்குகள் எல்லாம் கூட ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மட்டும் இந்தக் காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.


நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெறும்.


இதனால் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள்.


ணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மற்றபடி பெரும்பாலும் நல்லதே நடக்கும்.


சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் கால கட்டத்தில் சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் சில இடையூறுகளை திடீர் என்று சந்திக்க நேரிடலாம். எனினும், பொருளாதார நிலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது. அதே சமயத்தில், சில விமர்சனங்களை கடந்து தான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி இருக்கும்.


குடும்பத்தில் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் கூட குடும்ப ஒற்றுமை பாதிக்காது. மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும்.


ணவர்கள் கல்வியில் நல்ல விதத்தில் தேர்ச்சி பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் உங்களது தனித்திறமையை காணுவீர்கள். எதையும் எதிர்கொண்டு ஏற்றம் பெறுவீர்கள்.


உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும்.


சமூகத்தில் உங்கள் புகழ், பெருமை ஓங்கும். சிறு, சிறு சோதனைகள் வந்தாலும், இறுதியில் அவை அனைத்தும் சாதனையாக மாறும்.


சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் சிலருக்கு சுபச் செலவுகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.


திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்கு வெற்றி அடையும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கப்பெறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.


தொழில் அல்லது வியாபாரத்தில் நவீன யுத்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சிலருக்கு நல்ல பலன்கள் ஏற்படும். சிலர் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.


வெளிநாடு செல்லக் கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். தந்தை வழியில் கூட சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்துமே கிடைக்கப்பெறும்.


இழந்ததை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதிப்பார்கள். கணவன்- மனைவி இடையே மட்டும் முன்கோபத்தை குறைத்து விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.


சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


எதிர்பாராத திடீர் உதவிகள் மற்றும் நன்மைகள் எல்லாம் இக்கால கட்டத்தில் ஏற்படும். ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும்.


கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் சிலருக்குத் தேடி வரும். தொழில் அல்லது வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும்.


சிலர் தொழிலை நல்ல முறையில் அபிவிருத்தி செய்து லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். உத்யோக ரீதியாக எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறும்.


அற்புதமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் இறுதியில் நல்ல படியாக நிறைவேறும்.


சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நெருக்கடிகள் குறையும். ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். சுப காரியங்கள் சிலருக்கு கைகூடும். 1.5.2024 முதல் குரு பகவான் 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால் திருமணம் பலருக்கு கைகூடும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் சிலருக்கு நடந்தேறும்.


தொழில் அல்லது வியாபாரத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள்.


நல்ல வாய்ப்புகள் பலரைத் தேடி வரும். தசா புத்தியும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அற்புதமான நல்ல பலன்களை எல்லாம் நீங்கள் பெறுவீர்கள்.


சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அது அளிக்கும்.


சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்தாலுமே மற்ற மாத கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால், உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.


தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறும். தொழில் நல்ல முறையில் வளர்ச்சி காணும். எனினும், வேலை ஆட்களை மட்டும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றபடி தொழில் அல்லது வியாபாரத்தில் சாதிப்பீர்கள்.


உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் மட்டும் பணிச்சுமை சற்று அதிகரித்துக் காணப்படலாம். எனினும், அதிகாரிகள் ஆதரவு நன்மை தரும். விரும்பிய பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கப்பெறும்.


நீண்ட நாட்களாக வர வேண்டிய பண வரவுகள் சிலருக்கு இந்தக் கால கட்டத்தில் வந்து சேர இடம் உண்டு. பயணங்களை மட்டும் திட்டமிட்டு செய்யுங்கள்.


இல்லையேல், தேவை இல்லாத அலைச்சலை சந்திக்க நேரிடும். அதே சமயத்தில், சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். சிலர் பழைய கடனை அடைப்பார்கள்.


தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். சிலர் புதிய கிளைகளை கூட ஆரம்பிக்க இடம் உண்டு. மொத்தத்தில், சிறு, சிறு சோதனைகள் வந்தாலும் கூட இறுதியில் அனைத்தும் சாதனையாக மாறும்.


சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலையை எல்லாம் அடைவீர்கள். நினைத்த காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடந்தேறும். எதிர்பாராத பணவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும்.


சிலருக்கு புதிய சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும் போட்டிகளை கடந்தே லாபம் அடைய வேண்டி இருக்கும்.


எனினும், உங்களது முயற்சி வீண் போகாது. அதனால், கவலை வேண்டாம். உத்யோகத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளிடம் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள்.


எனினும் வேலை பளு சற்று இருக்கத்தான் செய்யும். அதே சமயத்தில் மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார்.


மாணவர்கள் இந்தத் தருணத்தை பயன்படுத்தி முயற்சி செய்து கொஞ்சம் படித்தாலுமே எதிர்காலத்தில் வியத்தகு நல்ல மாற்றங்களை பெறுவீர்கள்.


பெண்களுக்கு சுப செலவுகள் தேடி வரும். சிலருக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலுக்குப் பிறகு நன்மை தரும்.


சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:


கணவன், மனைவி இடையே மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எனினும், பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் தான். கொடுத்த வாக்குறுதிகளை நல்ல படியாக முடிப்பீர்கள்.


வராது என்று நினைத்த பணம் வரும். தொழில் அல்லது வியாபாரத்தில் எந்த விதமான போட்டிகளையும் சமாளித்து வெற்றி பெறும் விதத்தில் உங்களது தைரியம் காணப்படும்.


உடல் உபாதைகள் விலகி எதிலும் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையும்.


தசா புத்தி சொந்த ஜாதகத்தில் மோசமாக இருந்தாலுமே இந்தக் கால கட்டத்தில் ஒரு சில நன்மைகளை அடைவீர்கள். பயணங்கள் ஆரம்பத்தில் அலைச்சல் தந்தாலுமே கூட இறுதியில் எல்லாம் அனுகூலமான பலனை செய்யும்.


வீடு, வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். இதனால் சுப செலவுகளுக்கு இடம் உண்டு. பெண்கள் நலம் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்கு நன்மை தரும்.


அதிர்ஷ்ட


ராசியான எண்

1,2,3,9,10,11,12

ராசியான நிறம்

ஆழ்சிவப்பு

ராசியான கிழமை

செவ்வாய்

ராசியான கல்

பவளம்

ராசியான திசை

தெற்கு

ராசியான தெய்வம்

முருகப்பெருமான்

No comments:

Post a Comment