அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

சனி பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்


திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.


வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார்.


கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.


சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..


குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை

குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை

குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை

குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை

சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி

ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை

ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை

ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை

சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி

குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை

குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை

குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை

குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை

சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி

ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை

ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை

ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது.


இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.


ரிஷபம்


(கிருத்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம்)


சுக்கிரன் ஆட்சி பெறும் ரிஷப ராசியில் பிறந்த அன்பர்களே 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரை) உங்கள் ராசிக்கு 10 ஆம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வார்.


இதனால் அனைத்து விதங்களிலும் நீங்கள் எதிர் நீச்சல் போட்டே முன்னேறும் படியாக இருக்கும். தொழில் அல்லது வியாபார ரீதியாக சிந்தித்து நீங்கள் செயல்பட வேண்டி இருக்கும். கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.


எனினும், பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தரும். கேட்ட இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். அதிகப்படியான அலைச்சல் என்பதை தவிர்க்க முடியாது.


உங்கள் ஓய்வு நேரத்தில் கூட நீங்கள் உழைக்கும் படியாக இருக்கும். மொத்தத்தில், தொழில் அல்லது வியாபாரத்தில் பல விதமான எதிர்ப்புகளை கடந்து தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும்.


தொழில் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளை நன்கு ஆலோசித்து திட்டமிட்டு செய்வது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு குறையலாம். உத்யோகத்தில் பிறர் வேலையை சேர்த்தும் நீங்களே பார்க்க வேண்டிய நிர்பந்தம் வரலாம். திடீர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.


அலைச்சல் எங்கும், எதிலும் தவிர்க்க முடியாது தான். வேலை மாறுவதாக இருந்தால் கூட இந்தக் கால கட்டத்தில் திட்டமிட்டு மிகவும் யோசித்து மாறுங்கள். செலவுகள் அதிகரிக்கும் கால கட்டம் இது.


சிலருக்கு வீடு, மனை சம்மந்தமாக விரய செலவுகள் ஏற்படலாம். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்.


குடும்பத்தில் அவ்வப்போது சிறு, சிறு வாக்கு வாதங்கள் வந்து போக இடம் உண்டு. மொத்தத்தில் சோதனைகளை கடந்தே சாதனை படைக்க வேண்டிய தருணம் இது.


உடல் ஆரோக்கியம்


உங்களது உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போக இடம் உண்டு. பிரயாணங்களை திட்டமிட்டு செய்யப் பாருங்கள்.


காரணம் இந்தக் கால கட்டத்தில் தேவை இல்லாத அலைச்சல் எல்லாம் உங்களுக்கு ஏற்பட இடம் உண்டு. நீங்களாக மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு அவ்வப்போது ஒவ்வாமை சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம்.


எனினும் மற்ற படி கோச்சார ரீதியாக பெரிய அளவில் எல்லாம் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு குறைவே. தசா புத்தி மோசமாக இருக்கும் அன்பர்கள் மட்டும் சாந்தி செய்து கொள்ளவும்.


குடும்பம், பொருளாதார நிலை:


கணவன்- மனைவி இடையே சின்னச், சின்ன அவிப்பிராய பேதங்கள் வந்து போகலாம். முடிந்த வரையில் பிரச்சனைகளை அந்நிய நபர்கள் தலையீடு இல்லாமல் நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பொருளாதார நிலையானது ஓரளவே திருப்தி தரும்.


ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளப் பாருங்கள். வெகு சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமாக புதிய கடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


கொடுக்கல்-வாங்கல்:


பணப்பரிமாற்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை பார்த்து அவ்வப்போது பரிசல் செய்து கொள்ளுங்கள்.


ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தை பறிகொடுக்காமல் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சில ஏஜென்ட் கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப கமிஷன் காசுக்காக தேவை இல்லாத திட்டங்களில் உங்களை மாட்டி விட நினைக்கலாம்.


த்தத்தில் பண விவகாரங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து கொள்ளுங்கள்.


தொழில், வியாபாரம்


தொழில், வியாபாரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் போட்டிகள் அதிகரித்தே காணப்படும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். ஓயாமல் உழைக்க வேண்டி இருக்கும். எனினும் உங்களுடைய உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் போகாது.


வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டி இருக்கும். இதனால் லாபம் சற்று குறையலாம்.


எதிர்பார்க்கும் லாபத்தை அடைய சற்று கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும். பொறுமை மிக, மிக அவசியமான கால கட்டம் இது.


உத்யோகம்:


பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலுமே உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிக பணிச் சுமை காரணமாக நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். ஓய்வு நேரம் குறைவதால் அடிக்கடி உடல் சோர்வு காணப்படும்.


உயர் அதிகாரிகள் அவ்வப்போது நீங்கள் சொல்வதை புரிந்து கொள்வதில்லையே என்கிற ஆதங்கம் அவ்வப்போது தோன்றி மறையலாம்.


உத்யோகத்தில் பெரும்பாலும் சலுகைகள் தாமதம் ஆகி அதன் பின்னர் தான் கிடைக்கப்பெறும். முடிந்த வரையில் பிறருக்கு உதவுவதை விட உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தப் பாருங்கள்.


அரசியல்


அரசியல் வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நிருபர்களிடம் பேசும் சமயத்தில் கூட வார்த்தையை நிதானமாக பார்த்துப் பேசவும். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்.


மக்களிடம் செல்வாக்கு சரியாமல் பார்த்து கொள்ளுங்கள். வாக்குறுதிகளை யோசித்து கொடுங்கள். மேலிடத்திடம் தேவை இல்லாத வாக்குவாதங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம்.


அதனால் எதிலும் நிதானமான போக்கை கடைபிடியுங்கள். அது பிற்காலத்தில் உங்களுக்கு நன்மை தரும்.


விவசாயிகள்


விளைச்சல் சாதகமாக இருந்தாலும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். புழு, பூச்சிகள் மற்றும் வேலை ஆட்கள் காரணமாக கூடுதல் செலவுகள் அதிகரித்தே காணப்படும். அரசு வகை உதவிகள் சிலருக்கு தாமதம் ஆகலாம்.


பங்காளிகளிடம் பேசும் சமயத்தில் மிகவும் பொறுமையுடன் பேசுங்கள். வம்பு, வழக்குகள் வந்து சேராமல் நிதானமாக இருந்து கொள்ளுங்கள்.


பொறுமை இந்தக் கால கட்டத்தில் மிக, மிக அவசியம். காரணம் எல்லாமே இழுபறி நிலையை அடையும். அதன் பின்பே மெல்ல, மெல்ல வேலைகள் நடந்தேறும்.


கலைஞர்கள்


உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். எனினும், திறமைக்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும் தான்.


அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். அதனால் அலைச்சல் சற்று அதிகரிக்க இடம் உண்டு.


போட்டிகள் இருக்கும் தான். ஆனால், அதை எல்லாம் கடந்து நீங்கள் சாதிப்பீர்கள்.


பெண்கள்


உடல் ஆரோக்கியம் ஓரளவே சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலுக்கு பிறகே நன்மை தரும்.


பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் கால கட்டம் இது. எனினும், அதற்கான நல்ல பலனை நீங்கள் அடைவீர்கள்.


கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பணியிடத்தில் மற்றவர்கள் பணியையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்.


அதனால் சில ஆதங்கங்கள் ஏற்பட இடம் உண்டு. மொத்தத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்.


மாணவச் செல்வங்கள்


படிப்பில் நல்ல விதத்தில் உங்களது செயல்பாடுகள் இருக்கும். உங்கள் முயற்சி வீண் போகாது. நீங்கள் முயற்சி செய்து படித்தீர்கள் என்றால், நல்ல எதிர்காலம் உண்டு. விரும்பிய பாடத்தில் கூட பலருக்கு இடம் கிடைக்கும்.


சிலர் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று படிக்க நேரிடலாம். பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். சக நண்பர்களை இனம் கண்டு தேர்வு செய்து பழகுங்கள்.


தீய நண்பர்கள் சகவாசத்தால் சிறு, சிறு பிரச்சனைகளும், அவப்பெயரும் சிலருக்கு வந்து போக இடம் உண்டு. எனினும், எதிர்நீச்சல் போட்டு கல்வியில் பலர் சாதிப்பீர்கள்.


சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் கால கட்டத்தில் அலைச்சல் சற்று அதிகம் இருக்கும் தான். எல்லா விஷயங்களிலும் எதிர்நீச்சல் போட்டு தான் முன்னேறும் படியாக இருக்கும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகத் தான் காணப்படும்.


கணவன்- மனைவி இடையே சின்னச், சின்ன அவிப்பிராய பேதங்கள் ஏற்பட இடம் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். சிலருக்கு அதன் மூலமாக சுபச் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.


வியாபாரத்தில் வேலை ஆட்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த உதவிகள் சிலருக்கு தாமதம் ஆனாலும் கூட கண்டிப்பாக வந்து சேரும்.


அதனால் கவலை கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகம் இருக்கத் தான் செய்யும். எனினும் பிற்பாடு அதற்கான பாராட்டுக்கள் உண்டு.


மேலதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகம் மாற இக்கால கட்டம் ஏற்றது இல்லை. அதனால் பொறுமையுடன் உத்தியோகத்தை பார்ப்பது நல்லது.


முடிந்த வரையில் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உடன் இருப்பவர்களை அனுசரிக்க முடியவில்லை என்றாலும் எதிர்த்துக் கொள்ளாதீர்கள். பொறுமையுடன் இருந்து காரியம் சாதிக்க வேண்டிய கால கட்டம் இந்தக் கால கட்டம்.


சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


எந்த ஒரு புதிய முயற்சிகளும் இந்தக் காலத்தில் தடைபடாமல் இருக்க விநாயகரை வேண்டிச் செய்யுங்கள். பெரிய முதலீடுகளை சிந்தித்துச் செய்யுங்கள். பணவரவுகள் ஓரளவே நன்மை தரும். எனினும் செலவுகள் திடீர், திடீர் என்று ஏற்படும் கால கட்டம். அதனால் முடிந்த வரையில் சிக்கனமாக இருக்கப் பாருங்கள்.


பணம் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் மூலமாக சிலருக்கு நன்மைகள் ஏற்பட இடம் உண்டு.


தொழில் அல்லது வியாபாரத்தில் பல விதமான நேர்முக, மறைமுகப் போட்டிகளை சந்தித்தே நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். முடிந்த வரையில் வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லுங்கள்.


சிலர் வெகு நாள் வேலை செய்த நல்ல வேலை ஆட்களை இழக்க வேண்டி வரலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள்.


உடன் வேலை செய்பவர்கள் 'ஒத்துழைக்க மறுக்கிறார்களே' என்ற ஆதங்கம் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு தேவை இல்லாத இருப்பிட மாற்றம் கூட ஏற்படலாம்.


சுப காரிய பேச்சுவார்த்தைகள் அலைச்சலை தரும் என்றாலும் பிற்பாடு அனுகூலத்தை தரும்.


சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் கால கட்டத்தில் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உங்களுக்கு ஏற்படும். எனினும், செலவுகள் அதிகரிக்கும் கால கட்டம் இது. உடல் ஆரோக்கியம் ஓரளவு நன்மை தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையும். எதையும் சுறுசுறுப்பாக செய்ய முற்படுவீர்கள்.


சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் நெருக்கடிகள் ஓரளவு குறைய இடம் உண்டு. இதனால் லாபங்கள் சற்று அதிகரிக்க இடம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.


சிலர் வேறு ஒரு நல்ல உத்யோகம் கூட மாறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட பிற்காலத்தில் அதனால் நல்ல பலன் ஏற்பட இடம் உண்டு.


மொத்தத்தில் சுமாரான கால கட்டமே. எனினும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.


சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:


தொழில் அல்லது வியாபாரத்தில் குறிப்பாக இக்கால கட்டத்தில் சில இடையூறுகளை சந்தித்தாலும் கூட இறுதியில் எதிர்நீச்சல் போட்டு நீங்கள் முன்னேறுவீர்கள். அனைத்திலும் உங்கள் தனித்திறமை வெளிப்படும்.


பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலுமே கூட எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.


பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அந்நிய நபர்களிடத்தில் குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம்.


உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தே காணப்படும். எனினும் உங்களுடைய திறமையினால் சமாளித்து முன்னேறுவீர்கள்.


சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் சம்மந்தமாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் காரணமாக பலருக்கு ஓய்வு நேரம் குறையலாம். மொத்தத்தில், எதிர்நீச்சல் போட்டு பொறுமையாக இருந்து காரியம் சாதிக்க வேண்டிய கால கட்டம் இது.


சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் கால கட்டத்திலும் கூட பொறுமையுடன் செயல்பட்டால் ஏற்றங்களை காண முடியும். தேவையற்ற அலைச்சல்கள் இருக்கத் தான் செய்யும். எனினும் சமாளித்து விடுவீர்கள். நிறைய இடையூறுகளை கடந்தே நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும்.


பொருளாதாரம் இந்தக் கால கட்டத்தில் மிகவும் ஏற்ற இறக்கமாகவே காணப்படும். சிலருக்கு புதிய கடன்கள் கூட ஏற்பட இடம் உண்டு.


குடும்பத்தில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் நெருங்கியவர்கள் மூலமாகவே தடைபடலாம். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் தேவை இல்லாத கவலைகள் வந்து போகலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும்.


உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் அசதி ஏற்படலாம். பலருக்கு ஓய்வு நேரம் கூட குறைய இடம் உண்டு. தேவை இல்லாத வீண் வாக்குவாதங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களுடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.


பல விதமான அனுபவங்கள் ஏற்படும் காலம். மொத்தத்தில் கோபத்தை குறைத்து முன்னேறப் பாருங்கள். குல தெய்வ வழிபாடு வெற்றியைத் தரும்.


சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நீங்கள் ஏற்றம் பெரும் காலம் இது. எதிலும் எதிர்நீச்சல் போட்டு நீங்கள் முன்னேறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் வெற்றி கிடைக்கப்பெறும்.


குடும்பத்தில் சில மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். உடல் ஆரோக்கியத்தில் கூட சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும்


இதனால் மருத்துவ செலவுகள் குறையும். பூர்வீக சொத்து விவகாரங்களில் பங்காளிகளுடன் பேசும் சமயத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். தொழில் அல்லது வியாபார ரீதியாக அலைச்சல் அல்லது உடல் சோர்வு ஏற்பட்டாலும் கூட எதிர்பார்த்த லாபத்தை போராடிப் பெறுவீர்கள்.


உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகம் இருக்கும் தான். எனினும் சமாளித்து விடுவீர்கள். மொத்தத்தில் போராடி நன்மை அடைவீர்கள். எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.


சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் கால கட்டத்தில் பொருளாதார ரீதியாக சில நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்.


பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகம் காணப்படும்.


வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே கூட சமயோசிதமாக யோசித்து நன்மையை பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சின்னச் சின்ன இடையூறுகள் ஏற்பட இடம் உண்டு.


உத்யோக ரீதியாக பல காலங்களாக எதிர்பார்த்த சலுகைகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கப்பெறும். மொத்தத்தில் உத்யோக ரீதியாக புதிய பொறுப்புகள் தேடி வரும். அதனால் ஆதாயம் ஏற்படவும் இடம் உண்டு. பெண்களுக்கு சுப செலவுகள் ஏற்படும்.


சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் காலத்தில் உங்களது பொறுமையை சோதிக்கும் படியான சம்பவங்கள் நடந்தேற வாய்ப்பு உண்டு. அதனால் பொறுமையை இழந்து விடாதீர்கள். கோபத்தை குறைத்து முன்னேறப் பாருங்கள்.


கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். அந்த வகையில் சிலருக்கு சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு.


தொழில் அல்லது வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலுமே கூட நிச்சயம் அடைய வேண்டிய லாபத்தை நீங்கள் அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் வேலை ஆட்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.


சிலர் தொழில் அல்லது வியாபார ரீதியாக புதிய கிளைகளை திறப்பீர்கள். வேலைப்பளு அதிகம் இருக்கும் தான். குறிப்பாக உத்யோகஸ்தர்களுக்கு நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை ஏற்படும்.


முடிந்த வரையில் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.


உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.


சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:


இந்தக் கால கட்டத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள்.


குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலுமே கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட இடம் இல்லை. எனினும், தசா புத்தி மோசமாக இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருந்து கொள்ளுங்கள்.


பூர்வீக சொத்து விஷயங்களில் சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சந்தித்து தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.


உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்படலாம். எனினும் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இறுதியில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.


முடிந்தவரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை மட்டும் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.


அதிர்ஷ்டம் அளிப்பவை


ராசியான எண்

6, 15, 24

ராசியான நிறம்

நல்ல வெள்ளை

ராசியான கிழமை

வெள்ளி, சனி

ராசியான கல்

வைரம்

ராசியான திசை

தெற்கு

ராசியான தெய்வம்

மகா லக்ஷ்மி

No comments:

Post a Comment