எண் கணிதம் என்பது ஒன்று முதல் ஒன்பது எண்களைக் கொண்டு வாழ்வின் பலன்களை அறியும் ஒரு சாஸ்திர முறை ஆகும். இதனை எண் ஜோதிடம் என்றும் கூறுவர். இது வெளிநாட்டை சேர்ந்த சாஸ்திர முறை ஆகும். ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களுக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டு அதன் படி ஒரு பெயரின் கூட்டுத் தொகை கணக்கிடப்படுகிறது. இதன் அடிப்படையில் எழுத்துக்களும் அதற்கு உரிய மதிப்பும் பின்வருமாறு.
A -1, B - 2, C - 3,D - 4, E - 5, F - 8, G - 3, H - 5, I -1, J - 1,K - 2,L - 3, M - 4, N - 5, O - 7, P - 8, Q - 1, R - 2, S - 3, T - 4, U - 6, V - 6, W - 6, X - 5, Y -1, Z - 7
மேலும் மேற்கண்ட ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் ஒரு கிரகம் கொடுக்கப்பட்டு அந்த கிரகத்தின் அடிப்படையில் பலன்கள் மேற்கொண்டு பார்க்கப்பட்டு பலன் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு எண்களும் அதற்கு உண்டான கிரகங்களும் வருமாறு.
1 - சூரியன், 2 - சந்திரன், 3 - குரு, 4 - ராகு, 5 - புதன், 6 - சுக்கிரன், 7 - கேது, 8 - சனி, 9 - செவ்வாய்.
No comments:
Post a Comment