அனைத்துப் பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு. நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நக்ஷத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள். ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது. காரணம் மேற்கண்ட அமைப்பு இருந்தால் அது ராகு/ கேது தோஷம். இந்த மாதிரி ஆட்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும். அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம். இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது (ஆண், பெண் இருவருக்கும்). அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள் இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம். இதே போல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும். ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.
No comments:
Post a Comment