- வைகாசி
- ஆவணி
- ஐப்பசி
- கார்த்திகை
- தை
ஆகிய மாதங்களில் வீடு கட்டுவது விசேஷம்.
சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ஆரம்பிக்கலாம்.
எனினும் இந்த நாளில் சந்திராஷ்டமம், கரிநாள் குறுக்கிடக்கூடாது.
கிணறு தோண்ட உகந்த திக்குகள்
வட கிழக்கு திசையில் கிணறு தோண்டினால் நன்மை. அங்கு தோண்டுவதற்கு வசதி இல்லை என்றால் வட மேற்கு திசையில் தோண்டலாம். தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு மனையின் நடுபகுதி ஆகியவற்றில் கிணறு தோண்டக்கூடாது.
கட்டும் வீட்டில் அறைகள் அமைக்கும் விதம்
வடகிழக்கு அல்லது ஈசான்யம் தானியங்கள் சேமித்து வைப்பதற்கு உகந்த இடம். தென்மேற்கு அல்லது நைருதி மூலை (தென் மேற்கு) படிக்கும் அறை, பாத்திர சாமான்கள் வைப்பதற்கு உகந்த இடம். தெற்கு மூலையில் சாப்பாடு அறை வைக்க வேண்டும். வட மேற்கில் பூஜை அறை வைக்க நல்லது. வடக்கில் பொன் நகை வைப்பதற்கு உகந்த இடம். வீட்டின் தெற்கு திக்கில் குப்பை கொட்டும் இடம் அமைப்பது சிறந்த இடமாகும்.
No comments:
Post a Comment