அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ?

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? சந்திர கிரகண நாளில் ஏழை ஒருவருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் செய்யவும். பசு மாட்டிற்கு வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழங்கள் அளித்தால் தோஷங்கள் நீங்கும். சந்திர கிரகணம் திருக்கணித பஞ்சாங்க முறைப்படி இன்று மாலை 6.18 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் துவங்குகிறது. கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், மகம். இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்ய வேண்டும். ஆயில்யம் நட்சத்திரத்தில் நிகழும் கிரகணம் மாலை 8.41 மணிக்கு முடிவடைகிறது. கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு அருகில் உள்ள கோவில்கள் திறந்து இருந்தால் பின்வரும் சாந்தி பரிகாரங்களை முன்னால் சொல்லப்பட்ட 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செய்யலாம். அல்லது அடுத்த நாள்(வியாழன்) அன்று செய்யலாம். கிரகணம் முடிந்தபின் குளித்துவிட்டு வீட்டில் பூஜை செய்தபின், அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரக சன்னதியில் சந்திர பகவானுக்கு அர்ச்சனை செய்யவும். பின்னர் கோவில் அர்ச்சகருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் அளிக்கவும். ஏழை அல்லது குறைந்த வருமானம் உள்ள ஒருவருக்கு பச்சை அரிசி 2 கிலோ, வெள்ளை துண்டு தானம் செய்யவும். பசு மாட்டிற்கு வெல்லம் கலந்த பச்சை அரிசி மற்றும் பழங்கள் அளிக்கவும். உங்கள் ஊரில் உள்ள புராதனமான பெருமாள் (மகாவிஷ்ணு) கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு அர்ச்சனை செய்யவும். சிவன் கோவில் சென்று ஸ்ரீ சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யவும். சாந்தி பரிகாரங்களைச் செய்தால் கிரகண தோஷம் பாதிக்காது. நல்லது நடக்கும். புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி உட்பட மற்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கிரகண தோஷம் கிடையாது. அனைத்து ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண நேரத்தில் பின்வருவனற்றை செய்வது நல்லது. அதிகமான சுப பலன்கள் கிடைக்கும். கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்கவும். வீட்டில் கிரகண காலத்தில் செய்யப்படும் தெய்வ வழிபாடு அதிக சக்தி உள்ளது. வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்யவும். ஆன்மிக புத்தகங்கள் மற்றும் மந்திரங்கள் படிக்கவும். தேவாரம், திருவாசகம், கந்த ஷஷ்டி கவசம், விஷ்ணு புராணம், சிவ புராணம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்கலாம். கிரகண காலத்தில் பின்வரும் ஸ்ரீ ராம நாமம், சிவ நாமம் மற்றும் பெருமாள் நாமங்களைச் சொல்வது சிறப்பான பலன்களை அளிக்கும். உங்கள் வாழ்கை மற்றும் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

உணவு 

கிரகண காலத்தில் சந்திரனின் கதிர் வீச்சுக்கள் நம்மீது விழும். இதனால் நமது உடல் மற்றும் உணவில் பாதிப்பை தரும். இதனால் கிரகணம் ஏற்படும் போது உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.


கிரகணம் 

இன்று நிகழும் சந்திர கிரகணம் அதிக நேரம் நீடிக்கிறது என்பதால், அது ஜோதிட ரீதியாக சில பாதிப்புகளையும் மற்றும் நன்மைகளையும் உருவாக்கும். குறிப்பிட்ட கிரகங்கப் பலன்களை கொண்ட நட்சத்திரங்கள் கிரகண பாதிப்பை பெறும். 

மரபு 

கிரகணம் ஏற்படும் போது அதை பார்க்கக்கூடாது என்பது மரபு. சந்திரன் நம்முடைய மனது மற்றும் உடலுக்கும் காரணகர்த்தாவாக இருப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றனர். 

யாரெல்லாம் வெளியில் செல்லக்கூடாது? 

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், நோய்க்காக சிகிச்சை பெறுபவர்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள் உள்ளிட்டோர் கிரகணத்தின் போது வெளியில் வரக்கூடாது என்பது மரபு. 

மீறி வெளியில் வந்தால் என்ன செய்யலாம் 

கிரகணம் நிகழும் போது வெளியே சென்று தான் ஆகவேண்டும் என்றால் மேலாடையின் நுனிப்பகுதியில் சிறிது நெல் அல்லது பச்சரிசியை முடிந்து வைத்துக் கொண்டு செல்லுங்கள். அவற்றை கிரகணம் விட்ட பின்பு நீர் நிலைகள் ஏதாவது ஒன்றில் கொட்டி விட வேண்டும். 

செய்ய வேண்டிய காரியம் 

கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க, இல்லத்தில் இருக்கும் தண்ணீர் மற்றும் திரவ வடிவிலான உணவுகளின் மீது தர்ப்பைப் புல்லை சிறிது போட்டு வைக்க வேண்டும். 

வெளியில் சாப்பிடக்கூடாது 

கிரகணம் ஏற்படும் போது யாரும் வீட்டை விட்டு வெளியில் சாப்பிடக்கூடாது. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்ற பின், கடல் அல்லது குளத்தில் இறங்காமல், கரையில் நின்று கொண்டு, ஏதாவது பாத்திரத்தில் நீரை எடுத்து கரையில் நின்று தான் குறிக்க வேண்டும். 

வழிபாடு 

கிரகணத்தின் போது வழிபாடு நடத்த வேண்டும் என விரும்புபவர்கள், குளித்துவிட்டு பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து கடவுளை வழிபட வேண்டும். அதற்கு பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம். 

செய்யக்கூடாதவை 

முன்னோர்களுக்கு தரப்பணம் கொடுக்கூடாது, ரத்த காரியங்கள் ஏற்படாமல் இருப்பது, கணவன் மனைவி உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றை கிரகண காலத்தில் செய்யக்கூடாது. 


No comments:

Post a Comment