(பகலில் காணும் சொப்பனத்திற்கு பலன் இல்லை)
இரவில் முதல் ஜாமத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8.24 க்குள் கண்ட சொப்பனம் ஒரு வருஷத்திலும், 2 ஆம் ஜாமத்தில் இரவு 8.48 முதல் 1.12 க்குள் கண்ட சொப்பனம் ஒரு மாதத்திலும், 4 ஆம் ஜாமத்தில் இரவு 1.12 முதல் 3.36 க்குள் கண்ட சொப்பனம் 10 தினங்களிலும், 5 - ஆம் ஜாமத்தில் அருணோதயத்தில் அதாவது விடியற் காலையில் 3.36 முதல் 6.00 க்குள் கண்ட சொப்பனம் உடனேயும் பலிதம் ஆகும். நல்ல சொப்பனத்தை கண்டால் மறு படியும் நித்திரை செய்யக்கூடாது. அதுவே தீய கனவைக் கண்டால் தண்ணீர் குடித்து விட்டு கடவுளை வணங்கி விட்டு மீண்டும் நித்திரை செய்யலாம்.
சுப சொப்பனங்கள் : பசு, எருது, தேவாலயங்கள், அரண்மனை, மலை உச்சி, மரம் ஆகிய இவற்றில் ஏறுதல். மாமிச பக்ஷணம், மலஜலம் , தயிர் அன்னம் புசித்தல், வெள்ளை வஸ்திரம் தரித்தல், இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள். சந்தானம் பூசிக் கொள்ளுதல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் ஆகிய இவைகளைக் கண்டாலும் நன்மை தான். சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுத்தல் ஆகிய இவைகளைக் கண்டாலும் நன்மை தான்.
No comments:
Post a Comment