அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை

  சனிப்பெயர்ச்சி 2025 மார்ச் 30 இரவு 9.41 மணிக்கு சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .  2027 ஜுன் 3 ஆம் தேதி வரை...

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள்

திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள்
 திருமணத்தின்போது மணமகனும், மணமகளும் அக்னியை சுற்றி வலம் வருவார்கள். இந்த வலமானது 7 அடிகள் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே நியதி. ஆகவே, திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் எதற்காக என்பதைப் பற்றி பார்ப்போம்.
 திருமணத்தின் போது மணமகனும், மணமகளும் அக்னியை வலம் வருவதை, வடமொழியில் சப்தபதி என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மணமகனும், மணமகளும் சேர்ந்து நடந்து வருவதைக் குறிக்கும் சொல் அது. அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும்போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்க்கண்டவாறு தனது பிரார்த்தனையைச் சொல்கிறார்.
முதல் அடி :
 பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.
இரண்டாவது அடி :
 ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
மூன்றாவது அடி :
 நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.
நான்காவது அடி :
 சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.
ஐந்தாவது அடி :
 லட்சுமி கடாட்சம் பெற வேண்டும்.
ஆறாவது அடி :
 நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.
ஏழாவது அடி :
 தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
 இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சு+சகமான மனோவியல் விஷயத்தை உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
 இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சிநேகிதம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். உதாரணமாக நாம் சாலையில் நடக்கும்போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும்போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள்.
 ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களை முன்னே போகவிட்டு விடுவோம். முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம்.
 இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும்போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குள்ளாக நடந்துவிடும் என்பது ஒரு சு+சகமான விஷயம்.
 இதை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும்.

No comments:

Post a Comment