அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2026

🌌 குரு பெயர்ச்சி 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் ஜூன் 2, 2026 அன்று குரு பகவான் மிதுன ராசியிலிருந்து விலகி, தனத...

குரு தோஷம்

குரு தோஷம் !!
நவகிரகங்களில் பெருமை பெற்ற ஒரே கிரகம் பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குருபகவான். தனத்திற்கும், புத்திர பாக்கியத்திற்கும் அதிபதி குருபகவான். நம் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால்தான் இந்த இரண்டும் தங்குதடையின்றி கிடைக்கும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு விருத்தி அளிப்பார் என்ற கூற்றின்படி இவரது பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா அம்சங்களும் தேடிவரும். ஒரு மனிதனின் நற்குணங்களுக்கும், நீதி வழுவா தன்மைக்கும், பிறருக்கு போதனை செய்யும் நிலைக்கும், உயர் பதவிகளுக்கும் குரு பகவான் காரகனாகிறார்.
ஒருவரின் ஜாதகத்தில் அவர் பிறந்த நேரத்தில் குரு கிரகம் தனது சொந்த ராசிகளிலோ அல்லது உச்சம் பெறக்கூடிய ராசிகளிலோ இருந்தால் அந்த நபருக்கு குரு பகவானின் திசை நடக்கும் காலத்தில் அனைத்தும் நல்ல பலன்களாகவே ஏற்படும். அப்படி இல்லாத பட்சத்தில் குரு பகவானின் திசை காலத்தில் சுமாரான அல்லது கெடுதலான பலன்களே ஏற்படும். ஒரு சிலருக்கு வியாழன் தோஷம் அல்லது குரு தோஷம் ஏற்படுகிறது. இந்த குரு தோஷத்தை நீக்கும் குரு பரிகார முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
பரிகார முறைகள் :
வியாழக்கிழமைதோறும் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று நவகிரகங்களில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலையை நிவேதனமாக வைத்து படைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.
வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலேயே தட்சிணாமூர்த்தியின் படத்திற்கு மஞ்சள் நிற பு+க்களை சமர்ப்பித்து, மஞ்சள் நிற உணவையோ அல்லது இனிப்பையோ நிவேதனமாக வைத்து வணங்கி வர வேண்டும்.
ஆறுமாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று அங்கு குருபகவானின் அம்சமாக கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவராகிய முருகப்பெருமானை வணங்க குரு பகவானால் ஏற்படவேண்டிய நற்பலன்கள் அனைத்தும் நிச்சயம் ஏற்படும்.
குரு காயத்ரி மந்திரம் :
ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
க்ருணி அஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் குறைந்தது 36 முறை கூறி வந்தால் வாழ்வில் உள்ள இன்னல்கள் அனைத்தும் விலகி நன்மை வந்து சேரும்.

No comments:

Post a Comment