ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள்
ராகு-கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் அதற்காக எளிய பரிகாரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ராகு-கேது என்னும் சர்ப்ப கிரகங்களுக்கு இடையில் இதர அனைத்து கிரகங்களும் இருந்தால் அதற்காக எளிய பரிகாரங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள், வரும் நாட்களில் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஷ்வரம் என்னும் ராகு பகவான் குடிகொண்டிருக்கும் திருக்கோவிலுக்கு சென்று ராகு பகவானுக்குப் பால் அபிஷேகம் செய்து வணங்கி வழிபட்டு வருவது முதல் பரிகாரம் ஆகும். அதனால் திருமணத்தடைகள் அகலும். துன்பங்கள் குறையும்.
கேதுவை வழிபடக் காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று கேதுவினுடைய நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் ஒன்றாக இருந்தால் நல்லது.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் காளஹஸ்தி என்கின்ற திருத்தலமும், இதற்கு உகந்ததாகும். அதுபோல ராமேஸ்வரமும் தோஷ பரிகாரத்திற்கு மிகவும் உகந்த ஸ்தலமாகும்.
சுவாதி நட்சத்திரத்தன்று, திருவாலங்காட்டுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டால், களத்திரதோஷம், புத்திர தோஷம் நீங்கும். மந்திரபாதிப்பு எனப்படும் அபிசாரப்பிரயோகம் நீங்கிவிடும்.
ராகு-கேது அருளைப்பெற பச்சை கற்பு+ரம் கலந்த பன்னீர் அபிஷேகம் செய்யலாம். நவகிரகங்களில் உள்ள ராகு-கேதுவுக்கும் செய்யலாம். நாகநாதர் என்ற பெயருடைய சிவனுக்கும் செய்யலாம். காளஹஸ்தியில் காளஹஸ்தீஸ்வரருக்கு பச்சைக் கற்பு+ரம் கலந்த பன்னீர் அபிஷேகம்தான் செய்வார்கள். ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட பெருமாளை வணங்கி ராகு-கேது அருளைப் பெறலாம்.
திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
No comments:
Post a Comment