தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்
பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?
மேஷம் :
மேஷம் :
பெண்களுக்கு குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவுகளால் மகிழ்ச்சியான சு+ழல் உண்டாகும். எதிர்பார்த்த வரன்கள் காலதாமதத்திற்கு பின்பு அமையும். உத்தியோகத்தில் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம் :
பெண்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நன்மையளிக்கும். புத்திரர்களால் சில மனவருத்தங்கள் நேரிடலாம். பெரியோர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
மிதுனம் :
கணவன், மனைவி இடையே புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குழந்தைகளிடம் சற்று கனிவுடன் நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் எண்ணங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ளவும். குடும்ப பெரியோர்களால் ஆதரவான சு+ழல் உண்டாகும்.
கடகம் :
மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வாகன வசதிகள் மேம்படும். புத்திரர்களிடம் கனிவுடன் பழகவும். தம்பதிகளுக்கிடையே அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
சிம்மம் :
தாய் வீட்டுவழி உறவினர்களின் மூலம் அனுகூலமான சு+ழல் உண்டாகும். கணவன், மனைவி விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. புத்திரர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் சில தடைக்கு பின்பு நற்பலன் ஏற்படும்.
கன்னி :
பொருளாதார நிலையில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நன்மையளிக்கும்.
துலாம் :
பெண்களுக்கு பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் சாதகமாக அமையும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எந்த விஷயத்தையும் செயல்படுத்தும்போது சற்று நிதானத்துடன் செயல்படுத்துவது நன்மையளிக்கும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் மேம்படும்.
விருச்சிகம் :
குடும்ப நபர்களுக்கிடையே அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரித்தாலும் ஆதரவான சு+ழல் உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் அலைச்சலுக்கு பின் ஈடேறும்.
தனுசு :
பெண்களுக்கு உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தம்பதிகளுக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
மகரம் :
மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கும். குடும்ப பெரியோர்களின் அறிவுரைகள் முன்னேற்றமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
கும்பம் :
கணவன், மனைவியிடையே இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். குடும்ப பெரியவர்களுடன் சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகிழ்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாமன் வகை உறவுகளில் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
மீனம் :
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியத்தில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களுடன் அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் சாதகமாக அமையும்.
No comments:
Post a Comment