அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

நெற்றியில் பொட்டு வைப்பதன் ரகசியம்

நெற்றியில் பொட்டு வைப்பதன் ரகசியம்..!
நம்முடைய பாரம்பரியத்தில் பெண்கள் பொட்டு வைத்தல் மரபாகும். பெண்கள் வட்டமாக வைப்பது பொட்டு என்றும், ஆண்கள் நேர்கோடாக வைப்பது திலகம் என்றும் அழைக்கப்படுகின்றது.

திருமணமான இந்திய பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கள சின்னமாக கருதப்படுகிறது. சுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என நம்பப்படுகிறது.

நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண்கள் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.

திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும். மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

வகிடு நேராக எடுத்து உச்சியில் குங்குமம் வைப்பதால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என்பது நம்பிக்கை. முன் நெற்றி மற்றும் நெற்றிப்பொட்டு இரண்டும் மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணரலாம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.

மேலும், நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் நம்மில் எழாமல் காக்கிறது.

உடலில் ஏழு சக்கரங்கள் சக்தி நிலைகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. பிறர் காணும் வகையில் வெளியில் தெரியும்படியாக அமைந்திருப்பது புருவ மத்தியில் அமைந்துள்ள ஆறாவது சக்கரம் மட்டுமே. இந்த சக்கரம் மூளை, நரம்புமண்டலம், காதுகள், நாசி, இடது கண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதாகவும், புத்திக்கூர்மை, மனம், புத்தி, ஆன்மசக்தி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்த புருவ மத்தியைப் பாதுகாப்பதும், அதன் சக்தியை அதிகரிக்கச் செய்யவும் புருவ மத்தியில் பொட்டு வைக்கப்படுகிறது.

குங்குமம் அணிவதன் பயன்கள் :

ஆண்கள் :

குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

கட்டை விரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்து துணிவைக் கொடுக்கும். குருவிரல் எனப்படும் ஆள்காட்டி விரலால் குங்குமம் அணிவது முன்னணித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

சனிவிரல் எனப்படும் நடுவிரலில் குங்குமம் இட்டு கொள்வது தீர்க்காயுளைக் கொடுக்கும். மோதிர விரலால் குங்குமம் தரிப்பது துணிவு, நேர்மையுடன் செயல்படும் பண்பைத் தரும்.

பெண்கள் :

சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். இந்த இடம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் ஆகும். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில்தான் உள்ளது.

வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

பெண்கள், தலை வகிடிலும், மாங்கல்யத்திலும், நெற்றியிலும் பொட்டு வைக்கிறார்கள். இந்த மூன்று இடங்களிலுமே லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.

கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து, இடது கையில் போட்டு கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பது கூடாது. வீட்டில் யாராவது ஒருவரை வலது உள்ளங்கையில் சிறிதளவே போட சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.


No comments:

Post a Comment