நாகதோஷம்
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். ராகு, கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும். பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். இவ்விரண்டு கிரகங்களையும் சாயாகிரகங்கள் என்று ஜோதிட நு}ல்கள் கூற்கின்றன.
ராகு கேது தோஷம் - எளிய பரிகாரங்கள் :
சர்ப்ப தோஷம் பலவித நோய்களை உண்டாக்குகிறது மற்றும் குழுந்தை பாக்கியம் கிடைக்காமல் போக வழி செய்யும். ராகு தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீகாளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. ராகு கேது ஆகிய இரண்டும் இருக்கும் தலம் திருப்பேரை ஆகும்.
கேதுவைத் திருப்திப்படுத்த மொச்சைப் பயிரைத் தானமாக அளிக்கலாம். கருகிப் போன ஆகாரங்களை உண்ணக் கூடாது. ஆடி மாதம் சுக்கில பட்சத்தில் கேது உதித்தார். ருத்திரனுடைய நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமையாகும். இந்த விசேஷ நாட்களில் கேதுவை வழிபடுவது சிறப்புடையதாகும்.
உரிய காலகட்டங்களில் பரிகாரங்களை செய்வதனால் நன்மைகளை நிச்சயமாக அடையலாம்.
அரசமரமும், வேப்பமரமும் உள்ள இடத்தில் சர்ப்பக் கிரகத்தை பிரதிஷ்டை செய்துள்ள இடத்திற்கு சென்று வழிபட தோஷ நிவர்த்தியாகும்.
கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.
காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தர் ஆலயம் சென்று வழிபட கேதுவினால் ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும்.
No comments:
Post a Comment