திருமணமானவர்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது?
நமது முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி, திருமணமான ஆண்கள், பெண்கள் ஒருசில விஷயங்களை மட்டும் செய்ய கூடாது என்று கூறியுள்ளனர்.
✘ திருமணம் முடிந்த பெண்கள் எப்போதுமே மஞ்சள் கயிற்றில் மட்டுமே தாலியை அணிய வேண்டும். மேலும் பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டப்படி நடக்கக் கூடாது.
✘ திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண் ஏதேனும் திருமண விழா, வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளுக்கு சென்று வந்த உடனேயே குளிக்கக் கூடாது.
✘ திருமணம் முடிந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு தாய், தந்தை இருந்தால், அவர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஷேவிங் செய்யக் கூடாது. உதிர்ந்த முடி, வெட்டிய நகத்தை வீட்டில் வைக்க கூடாது.
✘ ஆண் மற்றும் பெண்கள் எப்போதுமே இரண்டு கைகளை கன்னத்தில் வைத்தப்படி அமரவோ அல்லது நிற்கவோ கூடாது.
✘ ஆண் மற்றும் பெண்கள் உடுத்திய உடைகளை துவைக்காமல் கதவின் மேல் போடக் கூடாது. ஈரத்துணியை உடுத்தியபடியே சுற்றக் கூடாது.
✘ அன்றாடம் சாப்பிடும்போது, உணவை, உள்ளங்கையில் படும்படியோ அல்லது உருட்டியோ சாப்பிடக் கூடாது.
✘ கோவிலில் விழுந்து வணங்கும்போது, அங்கப்ரதக்ஷிணம் செய்யும் போது மார்பு பூமியில் படும்படி வணங்க கூடாது.
✘ திருமணமான பெண்கள் காலில் ஒருவிரலில் மட்டுமே மெட்டி அணிதல் வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று விரல்களில் மெட்டி அணிதல் மற்றும் தெற்கே பார்த்து நின்றபடி கோலம் போடக் கூடாது.
✘ அமாவசை மற்றும் தவசம் போன்ற நாட்களில் வீட்டு வாசலில் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.
✘ கடவுளை வணங்கும் போது பின்னங்கால் இரண்டையும் சேர்த்து மண்டியிட்டு, நெற்றி, பூமியில் படும்படி கும்பிட வேண்டும். மேலும் கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ள கூடாது.
No comments:
Post a Comment