விரும்பிய மணவாழ்க்கை கிடைக்க இக்கோவிலுக்கு செல்லுங்கள் !
திருமணம் என்பது நம் எல்லோர் வாழ்விலும் ஓர் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் எப்போது அமையும் என்று பலர் பல தெய்வங்களை வேண்டி பரிகாரங்களும் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். திருமணத் தடை நீங்க பல பரிகாரங்களும், பரிகார தலங்களும் உள்ளன. அத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் திருமணத் தடை நீங்குவதாக ஐதீகம். அந்த தலங்களில் ஒன்று தான் கோதண்டராமர் கோவில்.
அரி என்பது விஷ்ணுவைக் குறிக்கும். அரி குடிகொண்ட ஊர் எனும் பொருளில் அரி+இல்+ஊர் என்பது அரியலு}ர் ஆனது.
அரியலு}ருக்கு பெருமை சேர்க்கும் தலமாக உள்ளது கோதண்டராமர் கோவில். கோதண்டராமரை தரிசித்தால் குறையில்லாத மணவாழ்வு அமையும் என்பதற்கு சாட்சி முகூர்த்த நாட்களில் இக்கோவிலில் நடக்கும் திருமணங்களின் எண்ணிக்கையே.
வரலாறு :
பெருமாள் பு+மிக்கடியில் புதையுண்ட இக்கோவிலை தூக்கி நிறுத்தினார் என்று ஒரு கதையுண்டு. அதை எடுத்துக்காட்டும் விதமாக ஆலயக்கருவறை தேர் போன்ற வடிவில் உள்ளது.
ஒரே பீடத்திலமைந்த கோதண்டராமர், சீதாதேவி, லட்சுமணன், அனுமன் சிலைகள் விக்கிரமங்கலம் எனும் ஊரில் பு+மிக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
சாபவிமோசனம் அளித்த தலம் :
அம்பரீஷ முனிவர் பெருமாளின் பத்து அவதாரங்களையும் ஒருசேரக் கண்டாலே அவரது சாபம் நீங்கும் என்று துர்வாசரால் சபிக்கப்பட்டார். எனவே அம்பரீஷர் தெற்கு நோக்கிப் புறப்பட்டு அரியலு}ரில் வந்து கடும்தவத்தில் ஈடுபட்டார். முனிவரின் தவத்தை மெச்சிய பகவான் தசாவதாரக் கோலத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் அளித்தார்.
இக்கோவில் தூண்களில், சிறப்புமிக்க தசாவதாரக் காட்சிகள் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு காட்சிகளையும் தரிசிப்பதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. அவற்றுள் நரசிம்ம அவதாரக் கோலத்தை தரிசனம் செய்து வழிபடுவோருக்கு, எதிரிகளை வெல்லும் சக்தியும், செய்யும் செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.
அரியலு}ர் கோதண்டராமர் கோவிலுக்கு சென்று தன்னிகரில்லா தசாவதாரப் பெருமாள்களையும் ஒரே இடத்தில் கண்டு வணங்கி மனம் போல் மாங்கல்யம் கிடைக்க இறைவனின் அருளை பெறுவோம்.
இக்கோவிலுக்குச் சென்று பெருமாலை தரிசிப்பதால் மனக்குறைகள் நீங்குவதோடு, திருமண வாழ்வும் அமைகிறது.
No comments:
Post a Comment