கோவிலில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் !
🌟 திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருப்போம். திருமணத்தில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள ஒரு வாழ்க்கை ஒப்பந்தத்தை மேற்கொள்கின்றனர்.
🌟 இரண்டு நபர்கள் மனமும் ஒன்றாக கலந்து இல்வாழ்க்கையில் ஒன்றிணைந்து சமுதாயத்திற்கும், மக்களுக்கும் எந்தவித தீமையும் செய்யாமல் வாழும் காலம்வரை நன்மைகள் புரிந்து, இறை சக்தியின் அருளால் வாழும் காலத்திலும், வாழ்க்கைக்கு பிறகும் எந்தவித கெடுதலும் வராமல், வசதி வாய்ப்புடன் வாழ முயற்சிக்கும் ஒருவித சடங்காக திருமணத்தை நமது முன்னோர்கள் வகுத்தனர்.
🌟 ஆதி காலத்தில் அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் திருக்கோவில்களில் இறைவனின் சன்னதி முன்பு நின்று தங்களது வாழ்க்கைத்துணையின் கரம் பற்றினர்.
🌟 இறைவன் சாட்சியாக ஒருவருக்கொருவர் அன்பு, பண்பு, சுகம், துக்கம் போன்றவற்றை பகிர்ந்து வாழ்க்கையை நடத்துவோம், நீதி, நேர்மை, உண்மை, பக்தி போன்றவற்றை தவறாது கடைபிடித்து எங்கள் கால இறுதியில் இறை பாத கமலங்களை சரணடைவோம், என்று இறைவனின் முன்நின்று மாலை மாற்றி இறைவன் முன் வாக்குறுதி அளித்து தங்கள் வாழ்க்கையைத் துவங்கினார்கள்.
🌟 இறை நம்பிக்கையும், இறை பக்தியும் அவர்கள் மனத்தில் ஆழ பதிந்ததால், தங்களது வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செய்யாமலும், விட்டுக்கொடுத்தும் வாழ்க்கையை நடத்திவந்தனர்.
கோவில்களில் திருமணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:
🌟 வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. ஒரு சில ஜாதகர்களுக்கு கோவிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
🌟 திருமணத்திற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நு}ற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.
🌟 அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். எனவே அக்காலத்தில் கணவன் - மனைவி பிரிவு என்பது மிகவும் குறைவாக இருந்தது. அதற்கு இறைவன் மீதுள்ள பக்தியும், பயமும் தான் காரணம்.
🌟 மேலும், கோவிலில் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜெபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள் போன்ற தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு நிரம்பி இருக்கும். எனவே அங்கு திருமணம் செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.
🌟 மேற்கண்ட காரணங்களால் தான், நம் முன்னோர்கள் வசதி இருந்த போதிலும் திருமணத்தை திருக்கோயில்களில் நடத்தினர்.
No comments:
Post a Comment