1. குத்து விளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் உண்டாகும்.
2. மேற்கு முகமாக ஏற்றினால் கிரக தோஷம் பங்காளி பகை உண்டாகும்.
3. வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் விலகும்.திரண்ட செல்வம் உண்டாகும்.
4. தெற்கு முகமாக ஏற்றினால் நல்லதல்ல.அபசகுணங்கள் தென்படும்.வீட்டுக்கு எம தூதர்களை விருந்தாளிகலாக்கும் அதனால் மரணங்கள் சம்பவிக்கும்.
விளக்குத் திரியின் பலன்கள்
1. தாமரைத் தண்டில் திரி போட்டால் ஜென்ம பாவங்கள் போகும்.
2. வாழைத் தண்டு நூல் திரி போட்டால் குலதெய்வ குற்றம் நீங்கும்.
3. புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகராறு நீங்கும்.
4. புது வெள்ளை வஸ்த்திரத்தில் பன்னீரை விட்டு உலர வைத்துத் திரி போட்டால் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் வந்து மூதேவி அகன்று விடுவாள்.
No comments:
Post a Comment