இந்தக் கேள்வி சில சமயங்களில் எல்லோர் மனதிலும் கூட தோன்றி இருந்திருக்கலாம். இந்நிலையில், வாங்க இதற்கான பதிலை கட்டுரையாக இப்போது காண்போம்.
சில சமயங்களில் சிலருக்கு சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலுமே.. வாரிசு இல்லாமல் போய்விடுவது உண்டு அல்லது வாரிசு இருக்கும்.. ஆனால், அந்த வாரிசானது 'அந்த சொத்துக்கள் தனது மூதாதையர்கள் சேர்த்தது என்றே தெரியாமல், 'மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும்'. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால்..
முதலில் சாபங்கள் காரணமாக அமையலாம். இதில் எல்லா சாபங்களும் அடங்கும். அதாவது, பூர்வ ஜென்ம சாபம், குரு, பெண், அந்தண சாபம், மாத்ரு சாபம், பித்ரு சாபம், கோ சாபம், சர்ப்ப சாபம் போன்ற அனைத்தும் இதில் அடங்கி விடும். அடுத்ததாக, மூதாதையர் சொத்துக்களை அனுபவிப்பார்கள்… ஆனால் அவர்களுக்கு சரியாகத் திதி கொடுக்காமல் போவார்கள். இதனால் அவர்களின் சொத்துக்களை அனுபவிக்க இயலாமல் இருக்கும். இந்நிலையில், அந்த குடும்பத்தில் சந்ததியினர் யாருக்குமே சுப காரியங்கள் நடக்காமல் இருக்கலாம். நடந்தாலுமே அது நிலைக்காமல் போகலாம். குல தெய்வத்தை கண்டு கொள்ளாமல் இருப்பது கூட சாபம் தரும் தான்.
No comments:
Post a Comment