அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் 2025 முதல் 2027 வரை

  சனிப்பெயர்ச்சி 2025 மார்ச் 30 இரவு 9.41 மணிக்கு சனிபகவான் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .  2027 ஜுன் 3 ஆம் தேதி வரை...

முன்னோர்களின் ஆசி பெற உதவும் மந்தாரை மரம்... வீட்டில் வளர்க்கலாமா?


 
மந்தாரை மரம் வீட்டில் வளர்க்கலாமா?

🌳 மலையாத்தி அல்லது மந்தாரை (Bauhinia variegata) பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளை தாயகமாகக் கொண்டது.

🌳 திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம் இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

🌳 சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம்மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலைகள் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும்.

🌳 வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 ச.மீ விட்டம் கொண்டவை. 15-30 ச.மீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.

🌳 இது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது.

🌳 உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது.

🌳 "மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது" என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை.

🌳 இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின் போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.

🌳 தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மந்தாரை மரமும், நடுவில் அலரிச் செடிகளும் நடப்பட்டு இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சூரிய வெப்பத்தை தார் ரோடு உறிஞ்சிக் கொள்ளும் போது, அலரிச் செடியும், மந்தாரைச் செடியும் அதைக் குளிர்ச்சியாக மாற்றி காற்றில் பரப்பி விடுகிறது என்று நிரூபணமாகியிருக்கிறது.

மந்தாரை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

🏡 வீட்டில் மந்தாரை மரங்களை வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும், வியாபாரம் பெருகும்.

மந்தாரை மரத்தை வீட்டின் எந்த திசையில் வளர்க்கலாம்?

🏡 தெற்கு, மேற்கு பகுதிகளில் மந்தாரை மரத்தை வளர்க்கலாம்.

 

No comments:

Post a Comment