முற்பிறவி தீவினைகள் அகன்று... குழந்தை பாக்கியம் கிடைக்க பெறும்... ஏகாதசி..!!
குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி...!!

🙏 நாம் செய்கின்ற செயலில் இருந்துதான் பாவம் மற்றும் புண்ணியங்கள் கணக்கிடப்படுகின்றன.
🙏 அந்த வகையில் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தினை போக்கும், ஒரு சிறந்த வழிபாட்டினை பார்க்கலாம் வாங்க...
🙏 அனைவருக்கும் பிடித்த பருவம் என்றால் அது குழந்தை பருவம் தான். நாம் குழந்தையாக இருக்கும் போது செய்த சேட்டைகள் ஏராளம்.
🙏 ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் ஏகாதசி திதி வரும். இந்த ஏகாதசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது.
🙏 தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு "புத்ரதா" ஏகாதசி என்று பெயர். இது குழந்தை செல்வத்தை அளிக்கும். வம்சாவளியைப் பெருகச் செய்யும் சந்தான ஏகாதசி ஆகும்.
புத்ரதா ஏகாதசி உருவான கதை :
👼 மஹிஜித் என்ற மன்னன் மஹிஷமதிபூரி என்ற நாட்டை ஆண்டு கொண்டிருந்தான்.
👼 அங்கு செல்வத்திற்கும், உணவிற்கும் குறையில்லாமல் அனைத்து உயிர்களும், மன நிறைவுடன் வாழ்ந்து வந்தன.
👼 நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்வுடன் வாழ, மன்னனுக்கு மட்டும் சந்தோஷம் இல்லை. மன்னனின் மனதில் ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது. ஏனெனில் தனக்குப் பின் நல்வழியில் இந்த நாட்டை ஆட்சி செய்ய, அவனுக்கு ஒரு வாரிசு இல்லை என்பது தான்.
👼 இதனால் மன்னன் பல தான, தருமங்களை செய்து வந்தான். அதன் பிறகும் தனக்கு எதற்காக இந்த நிலை வந்தது என்று, தன் நாட்டு அறிஞர்கள் பலரையும் அழைத்துக் கேட்டான்.
👼 அதற்கான பதிலை அறிஞர்களால் கூற முடியவில்லை. ஆனால் ஒரு ஆலோசனையை மன்னனுக்கு வழங்கினார்கள். அதாவது "நாட்டின் எல்லைக்குட்பட்ட வனத்தில் வசிக்கும் லோசமர் முனிவரை சந்தித்தால் இதற்கான விடை கிடைக்கும்" என்றனர்.
👼 மன்னனும், "உடனடியாக முனிவரை சந்தித்து என்ன செய்யலாம் என்று அறிந்து வாருங்கள்" என்று கூறி அமைச்சர்களை அனுப்பி வைத்தான்.
👼 லோசமர் முனிவர் சாதாரணமானவர் அல்ல. அவர் பிரம்மதேவனுக்கு நிகரான ஞானமும், சக்தியும் படைத்தவர்.
👼 அவரை சந்தித்த அமைச்சர்கள், தங்கள் மன்னனின் நிலையை எடுத்துக்கூறி, அதற்கு நல்ல தீர்வு இருந்தால் சொல்லும்படி வேண்டினர்.
👼 லோசமர் முனிவர் அவர்களுக்கு பதிலளித்தார். "உங்கள் மன்னன் இந்த பிறப்பில் நல்வினைகளை பலவாறு சேர்த்திருந்தாலும், கடந்த பிறவியில் செய்த தீவினையால் இந்த சாபம் ஏற்பட்டுள்ளது.
👼 அந்த தீவினை நீங்கிவிட்டால், அவன் வேண்டும் குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். அதற்கு உங்கள் மன்னன் சரணடைய வேண்டியது பகவான் கிருஷ்ணரைத்தான்.
👼 தை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் கிருஷ்ணரை நினைத்து விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவருந்தாமல், மகாவிஷ்ணுவின் நாமங்களை மட்டும் உச்சரிக்க வேண்டும்.
👼 இரவில் கண்விழித்து, கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளைப் பாடியும், வாசித்தும், ஹரி கதைகளைக் கேட்டும் பொழுதை கழிக்க வேண்டும்.
👼 பின்னர் மறுநாள் துவாதசி அன்று விரதம் முடித்தால், முற்பிறவி தீவினைகள் அகன்று குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும்" என்றார்.
👼 லோசமர் கூறிய அறிவுரையின்படியே தை மாத வளர்பிறை ஏகாதசியில் விரதம் இருந்த மன்னன் மஹிஜித்துக்கு, விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்தது.
👼 எனவே குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள், இந்த ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால், அதற்கான பலன் விரைவிலேயே கிடைக்கப்பெறுவீர்கள்.
No comments:
Post a Comment