தாராபலன் என்றால் என்ன?
🌟 தாரை, தாரா போன்ற சொற்கள் யாவும் சந்திரன் பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நட்சத்திரத்தை குறிக்கக்கூடியதாகும். சந்திரன் கோச்சார ரீதியாக தன்னுடைய பலாபலன்களை தாரை மூலமாக அவர் வழங்கிக் கொண்டே இருக்கின்றார்.
🌟 பொதுவாக ஒருவர் பிறக்கும் பொழுது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் பயணம் செய்கின்றாரோ அந்த நட்சத்திரமே அவருடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். ஜென்ம நட்சத்திரம் என்பது எப்பொழுதும் மாறக்கூடியது அல்ல. இப்பிறவியில் ஜென்ம நட்சத்திரம் என்பது ஒன்றேயாகும்.
🌟 ஆனால், மனோகாரகனான சந்திரன் தினம் தினம் வெவ்வேறு நட்சத்திரங்களில் பயணம் செய்துகொண்டே இருப்பார்.
🌟 நமது வாழ்நாளில் முக்கியமான செயல்களை மேற்கொள்ளும்போது அந்த நாளில் அவரவர்களின் ஜென்ம நட்சத்திரத்திற்கு சந்திரன் பயணம் செய்து கொண்டிருக்கக்கூடிய நட்சத்திரம் நட்பா? சாதகமா? சேமமா? அல்லது வதையா? விபத்தா? என்பதை அறிந்து செயல்படுவதே தாராபலன் ஆகும்.
🌟 ஒருவரின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து அன்றைய தினத்தின் நட்சத்திரம் வரை எண்ணும் பொழுது வருகின்ற 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ள எண்களுக்கு பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 9க்கு மேல் வந்தால் 9ஆல் வகுக்க வரும் மீதியை கொண்டு பலன்களை காண வேண்டும்.
தாரைகளின் பெயர்களும், பலன்களும்
1. ஜென்ம தாரை
- மனக்குழப்பம் மற்றும் பதற்றத்தை தரும்.
2. சம்பத்து தாரை
- பொருள்வரவு, காரிய சித்தி, சுபகாரியம் தொடர்பான செயல்களை மேற்கொள்ளலாம்.
3. விபத்து தாரை
- கோபத்தால் காரிய இழப்பு, வாய்ப்புகள் தவறுதல் போன்றவை உண்டாகும்.
4. சேமத் தாரை
- ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான நாள்.
5. பிரத்தயக்கு தாரை
- சிக்கல்கள், கவனச்சிதறல், வீண் அலைச்சல் போன்றவை உண்டாகும்.
6. சாதக தாரை
- எண்ணம் ஈடேறுதல், முயற்சிகள் பலிதமாகுதல் மற்றும் செயல்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
7. வதை தாரை
- உடலில் சோர்வு, மனதில் இனம் புரியாத கவலைகள், பணிகளில் நாட்டமில்லாமல் இருப்பது போன்றவை உண்டாகும்.
8. மைத்திர தாரை
- தெய்வகாரியம் செய்தல், புதிய முயற்சி, புதிய செயல்கள் செய்யலாம்.
9. பரம மைத்திர தாரை
- அனைத்து சுபச்செயல்களுக்கும் உகந்தது.
No comments:
Post a Comment