அஷ்டமத்தில் சனி வந்தால் என்ன செய்யும்? ராகு/ கேது தோஷம் என்றால் என்ன? 27 தேவதைகள் காயத்ரி மந்திரம் 27 நக்ஷத்திரங்களில் செய்யும் சுப காரியங்கள் விவரம் 27 நட்சத்திர காயத்ரி மந்திரம் Birthday Numerology Calculator Nakshatra Names Starting Letter Numerology Calculator ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...? எண் கணித அடிப்படையில் எந்தெந்த கிரகங்களுக்கு எந்தெந்த எண்கள் எந்த கிரகத்துடன் எந்தக் கிரகம் சேர்ந்தால் நன்மை? தீமை? எப்போது எதை தரக்கூடாது கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி? கனவு பலன்கள் கால சர்ப்ப தோஷம் கிரகங்களின் தேவதைகள் கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது ? கிழமைகளுக்குமான நல்ல நேரங்கள் கீழ்நோக்கு குரு தோஷம் குரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 குழந்தை வரம் அருளும் ஆதி மூலப் பெருமாள குழந்தைக்கு பெயர் வைக்கும் முறை கைரேகை எந்தக் கையில் எப்படி பார்க்க வேண்டும்? சமநோக்கு நாட்கள் சொப்பன பலன் ஜென்ம நட்சத்திரமும் அதன் அதிதேவதைகளும் ஜோதிடர் பதில்கள் தமிழ் புத்தாண்டு - விகாரி வருடம்பெண்களுக்கு எப்படி இருக்கப் போகிறது? திருமணத்தடை திருமணத்தில் வைக்கப்படும் 7 அடிகள் திருமணம் அல்லது விவாஹப் பொருத்தம் என்றால் என்ன? தீய ஆற்றலை அழித்திடும் வாராகி வழிபாடு நட்சத்திர பெயர்கள் பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். வெற்றி அடைவது இல்லை? மனைவியின் ஆயுள் பலம் அதிகரிக்க கணவன் செய்யவேண்டிய பூஜை மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் மேல்நோக்கு ரஜ்ஜு பொருத்தம் ராகு தோஷம் போக்கும் ஸ்லோகம் ராகு-கேது அருளைப்பெற எளிய பரிகாரங்கள் ராசி பலன் 2019: Rasi Palan 2019 வாஸ்து அமைப்பு முறை விளக்கு ஏற்றும் முறை வீடு கட்ட சாதகமான மாதங்கள்

ஆலயங்களுக்கு செல்லும் சமயத்தில் செய்யக்கூடாதவை

'ஆலயம்' என்பது இறைவனின் உறைவிடம் ஆகும். இங்கு சென்று இறைவனை வழிபடுவதற்கு என்று சில நியதிகள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு உள்ளது. அந்த வகையில் ஒருவர் ஆலயங்களுக்கு செல்லும் சமயத்தில் செய்யக் கூடாதவை என்னென்ன வாருங்கள் அது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். 
ஆலயங்களுக்குச் செல்லும் சமயத்தில் செய்யக் கூடாதவை என்று பார்த்தால்.
1. கோபம், பழி உணர்வு, வெறுப்பு போன்ற இவற்றை மனதில் சுமந்த படி ஆலயம் செல்லுதல் மகா பாவம்.  
2. குளித்து, தூய உடை அணியாமல் செல்லுதல் அதை விடப் பாவம்.
3. நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணியாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
4. அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கோவிலுக்குச் செல்லுதல் மகா பாவம். 
5. சுவாமி சந்நிதிகளை அவசர, அவசரமாக வலம் வருதல் கூடாது. 
6. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குச் செல்லக்கூடாது.
7. சட்டை அணிந்து கொண்டோ அல்லது போர்த்திக் கொண்டோ கோயிலுக்குள் செல்லக்கூடாது. ஒருவேளை, சட்டை அணியாமல் சென்றால், இறைவனின் ஈர்ப்பு அலைகளை நம் உடம்பு முழுமையாகப் பெற முடியும். இதனை கேரளத்து கோயில்களில் பின்பற்றுகின்றனர்.
8. சிவன் கோயில்களில் சண்டிகேசுவரர் சிவ சிந்தனையில் இருப்பவர். எனவே அவர் முன் நின்று கை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது. அவர் மீது நூலினை போடுவதும், விபூதி, குங்குமத்தை போடுவதும் அபசாரம் ஆகும். சிலர் இப்படியெல்லாம் கூட செய்கின்றனர். 
9. விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக்கூடாது. அது சம்பிரதாயம். ரொம்ப பேருக்கு இது தெரிவதில்லை.
10. கோவிலின் உள்ளேயோ, மதில் சுவர்களிலோ எச்சில் துப்புதல் கூடாது. அது மகா பாவம்.
11. கோவிலின் உள்ளே சண்டை போடுதல், தலை வாரி முடித்தல், சூதாடுதல், சிரித்தல், காலை நீட்டிப் படுத்துக் கொள்ளுதல் கூடாது.
12. இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும் போது பார்க்கக்கூடாது.
13. குறிப்பாகச் சிவன் கோயில்களில் சுவாமிக்கும், நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது. சிவ மூலவ, ரூபங்களை வாய்ப்புக் கிடைத்தால் தொடுதல் அல்லது மிதித்தல் கூடாது.
14. கோபுரம், கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.
15. காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
16. வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோயிலுக்குச் செல்லக்கூடாது. அதனால் பிரயோஜனம் இல்லை. 
17. மரணத்தீட்டு உள்ளவர்களை தொட்ட பின் குளிக்காமல் கோவிலுக்குச் செல்லக்கூடாது.
18. பிரகாரங்களை வலம் வரும் சமயத்தில் தவறுதலாகக் கூட, இறைவனுக்குச் சாத்தப்பட்ட திருநீறு, வில்வம் மற்றும் மலர்களை மிதித்து விடக்கூடாது.
19. ஈர உடையுடனோ அல்லது தூய்மைக் குறைவான உடையுடனோ கோவிலுக்குச் செல்லக்கூடாது.
20. கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக்கூடாது.
21. சுவாமி சிலைகளைத் தொடுவதோ அல்லது நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
22. கோவிலில் உள்ள விளக்குகளைக் கையால் தூண்டவோ, தூண்டிய கையில் உள்ள எண்ணெய் கறையை சுவரில் துடைக்கவோ கூடாது.
23. ஆலயத்துக்குள் யார் காலிலும் விழுந்து வணங்கக் கூடாது. காரணம் அங்கு இறைவன் ஒருவரே மகா பெரியவர்
24. ஆலய வழிபாட்டுக்கு குடும்பத்தோடு சென்று வருவது நல்லது. பரிகார தலத்துக்கு சென்றால் வேறு யார் வீட்டுக்கும் செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். இது சாஸ்திர நியதி.  
25. எந்த ஒரு வெளியூர் ஆலயத்துக்கு செல்லும் முன்பும் குல தெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.
26. பொழுது போக்கை மனதில் வைத்துக் கொண்டு ஒரு போதும் ஆலயத்துக்குச் செல்லாதீர்கள்.
27. ஆலயங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் ஒரு நாளும் இறந்தவர் வீட்டுக்குச் செல்லாதீர்கள்.
28. ஆலயத்தில் தெய்வ சந்நிதியில் திரை போட்ட பிறகு பிரதட்சணம் செய்யக் கூடாது. அதே போல, ஆலய சந்நிதி பூட்டி இருக்கும் சமயத்திலும் பிரதட்சணம் செய்யாதீர்கள். 
29. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரம் சொல்லும் போது, மற்றவர்களின் அமைதி கெடாதபடி மனதுக்குள் உச்சரிப்பது நல்லது.
30. மூலவருக்கு தீபாராதனை நடக்கும் போது கண்ணை மூடி வணங்காதீர்கள். இறைவனை கண் குளிர தரிசித்து வழிபடுங்கள். காலையில் விஷ்ணுவையும் மாலையில் சிவனையும் வழிபடுவது மிகுந்த நல்ல பலனைத் தரவல்லது.
31. பொதுவாக ஆலயங்களில், சன்னதிக்குப் பின்புறம் அமர்ந்து தியானம் செய்வது மிகவும் தவறு. அதை செய்யாதீர்கள்.
32. ஆலயத்துக்குள் இருந்து கொண்டு மற்றவர்களிடம் தற்பெருமை பேசுதல் கூடாது. ஆலயத்துக்குள் வந்து விட்டால் மனம் முழுவதும் இறைவனிடமே இருக்க வேண்டும்.
33. ஆலயத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக வெளியே அமர்ந்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு காசை தானமாக வழங்குங்கள். அப்படியாக தானம் செய்த பலனுடன் இறைவனை சென்று பார்ப்பது விசேஷம். மாறாகக், கோயிலில் இருந்து வெளியே வரும் போது தானம் செய்யாதீர்கள்.
34. காலை நேரத்தில் கோயிலை சுற்றும் போது உடல் நலம் விருத்தியாகும். மாலை நேரத்தில் கோயிலை வலம் வருவதால் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும். இரவு நேரத்தில் சுற்றுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.
35. ஆலயத்தின் பிரதான வாயில் தவிர மற்ற வாயிலில் கோவிலுக்குள்ளே செல்லக்கூடாது. அது தவறு.
36. கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் போது தெய்வத்தை வணங்கக் கூடாது.
37. இரு சக்கர வாகனங்களில் மற்றும் காரில் பயணம் செய்யும் போது வண்டியில் இருந்து இறங்கி பவ்யமாக கோவிலுக்கு உள்ளே செல்லாமல் வெளியே இருந்து பெயருக்கு தெய்வத்தை கும்பிடுவது உகந்ததல்ல. இம்மாதிரியான செய்கை தெய்வத்தை அவமதிப்பதாகும். 
இப்படியாக ஆலயங்களுக்குச் செல்லும் சமயத்தில் இதை எல்லாம் செய்யக் கூடாது. 

No comments:

Post a Comment