பொதுவாக லக்கினம் அல்லது இரண்டாம் இடத்தில் ராகுவோ/ கேதுவோ இருந்தால் அதனை ராகு/ கேது தோஷமாக கருதலாம். இதனை சர்ப்ப தோஷம் என்றும் அழைப்பார்கள். ராகு/ கேது தோஷம் உள்ள ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் தடைபடலாம்.
எந்த வயதில் திருமணம் நடக்கும் என்பதை ஏழாம் அதிபதியின் பலத்தை அல்லது ஏழுடன் சம்மந்தமான கிரக திசையை வைத்து சொல்லலாம். ஏழாம் அதிபதியும் நீச்சம், வக்கிரம் பெற்று இருந்தால் திருமணம் என்பது குதிரைக் கொம்பு தான். அதே போல ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டு, ராகு / கேது தோஷம் இருந்தால் திருமண வாழ்க்கை போராட்டமாக இருக்கும். அதிலும் இரண்டாம் இடத்தில் ராகு/ கேது பெண்களுக்கு இருந்தால் மாங்கல்ய பாவத்தை கெடுத்து விடும் வாய்ப்பு அதிகம். இந்த ராகு/ கேது தோஷத்தால் தான் நிறைய திருமணம் அண்மைக் காலங்களில் விவகாரத்தை கொடுக்கின்றன.
இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான வரன்களுக்கு இந்த ராகு/ கேது தோஷம் உள்ளது. பலர் இதனால் 35 வயதையும் தாண்டி திருமணம் ஆகாமல் உள்ளனர். ராகு/ கேது தோஷம் உள்ளவர்கள் பொதுவாக காளகஸ்தி, இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று தோஷம் கழித்துக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment