கடன், பில்லி, சூனியம், கண்டு பிடிக்க முடியாத வியாதி போன்ற அமானுஷ விஷயங்களுக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவரை தேர்ந்தெடுக்கலாம். கீழ்கண்ட மந்திரத்தை தினம் 108 முறை சொல்ல வேண்டும். மந்திரம் சொல்லும் காலத்தில் அசைவம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் பெண்கள் நுழைய அனுமதி இல்லாத இடமாக இருப்பின் நல்லது. சில ஆச்சார வீடுகளில் பூஜை அறை இருக்கும். அது போன்ற இடத்தை தேர்ந்தெடுத்து கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”
மேற்கண்ட மந்திரத்தை சொல்லும் போது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து சொல்ல சனி பகவானின் அருளும் கிடைக்கும். காரணம் சனி பகவானின் மானசீக குருவே பைரவர் தான்.
No comments:
Post a Comment