கணப் பொருத்தம்
👫 உலகில் பிறந்த மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே வித குணங்கள் இருப்பதில்லை. கணப் பொருத்தம் என்றால் இனப் பொருத்தம் என பொருள் கொள்ள வேண்டும். கணப் பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலனை அடைவார்கள்.
👫 மூன்று வகை கணங்களாக அல்லது கூட்டமாக 27 நட்சத்திரங்களாக பிரிவினை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இருவரின் இல்லற சுகமும், ஒற்றுமையும் தீர்மானிக்கப்படும். தேவ கணம், மனுஷ கணம், ராட்சஸ கணம் என மூன்று வகை கணங்களாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
👫 தேவ கணத்தோர் மனோபலம் உடையவர். ராட்சஸ கணத்தோர் உடல் பலம் மிக்கவர். மனுஷ கணம் உள்ளவர்களுக்கு இருபலமும் உண்டு.
தேவ கணம் :
👫 அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பு+சம், பு+சம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், ரேவதி போன்றதாகும். இவை சாத்வீக குணமுடையவை ஆகும்.
மனுஷ கணம் :
👫 பரணி, ரோகிணி, திருவாதிரை, பு+ரம், உத்திரம், பு+ராடம், உத்திராடம், பு+ரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவையாகும். இவை தமோ குணத்தை உடையவை.
ராட்சஸ கணம் :
👫 கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் ஆகியவை. இவை ராஷய குணத்தை உடையது.
இத்தகைய நட்சத்திரங்களில் ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே கணமாக அமைந்திருந்தால் அதனை மிகவும் மேலான பொருத்தமாக கருத வேண்டும்.
👫 ஆண் தேவ கணமும், பெண் மனித கணமுமாக இருந்தாலும் உத்தமம், இதுவும் மிக நல்ல கணப்பொருத்தம்.
👫 பெண் தேவ கணமாகவும், ஆண் மனித கணமாகவும் இருந்தால் மத்திமப் பொருத்தமாகும். பெண் மனித கணமும், ஆண் ராட்சஸகணமும் ஆனால் அது அதமம். அது பொருந்தாது.
👫 பெண் நட்சத்திரம் ராட்சஸ கணமாகவும், ஆண் நட்சத்திரம் மனித கணமாகவும் இருக்கும்போது பெண்ணின் நட்சத்திரம் ஆண் நட்சத்திரத்திற்கு 14-க்கு மேற்பட்ட நட்சத்திரமாக இருந்தால் அந்தப் பெண் ராட்சஸ கணமானாலும் தோஷமில்லை. திருமணம் செய்யலாம்.
👫 இது போலவே பெண்ணின் நட்சத்திர இராசியாதிபதியும், ஆணின் நட்சத்திர இராசியாதிபதியும் நட்பு, ஆட்சி, உச்சம் பெற்றவர்களாக அவர்களது ஜாதகத்தில் இருப்பார்களானால் பெண் ராட்சஸ கணமானால் தவறில்லை.
கணப் பொருத்தம் பார்க்கும்போது கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள் :
👫 பெண்ணின் நட்சத்திர, இராசியும் ஆணின் நட்சத்திர இராசியும் ஒரே இராசியாக அமையுமானால் அவர்களுடைய தனித்தனி நட்சத்திரத்தைக் கொண்டு, கணப்பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
👫 இது ஒரு விதிவிலக்கு ஏனென்றால், ஆணும் பெண்ணும் ஒரே இராசி என்றதுமே அவர்களுக்கு ஜாதகரீதியாக இராசிப் பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். எனவே, கணப் பொருத்தமும் இருக்கிறது என்று தீர்மானித்து விடலாம். பெண்ணின் இராசியும் ஆணின் இராசியும் ஒன்றுக் கொன்று சமசப்தம இராசிகளானால், அதாவது ஒன்றுக்கு மற்றொன்று ஏழாவது இராசியாக இருந்தால், கணப்பொருத்தமும் உண்டு என்று கூறலாம்.
👫 ஆனால், கடகம் - மகரம், சிம்மம் - கும்பம் போன்றவை சமசப்தம் இராசிகள் தான். ஆனால் இப்படிப் பெண், ஆண் இராசிகள் அமைந்தால், கணப் பொருத்தத்தை தனித்தனியாகப் பார்க்க வேண்டும். மற்றைய சமசப்தம இராசிகளைப் பொறுத்தவரையில், மேஷம் - துலாம், ரிஷபம் - விருச்சிகம், மிதுனம் - தனுசு, கன்னி - மீனம் என்ற இராசிகளைப் பொருத்தவரை ஒன்று பெண் இராசியாகவும் மற்றொன்று ஆண் இராசியாகவும் அமைந்தால், அதுவே இராசிப்பொருத்தம் ஆகிவிடுவதால், கணப் பொருத்தத்தைத் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
No comments:
Post a Comment