சூரியனும் அஸ்தங்க தோஷமும்
அஸ்தாங்க தோசம் என்றால் என்ன?
நவக்கிரகங்களில் மிகவும் உஷ்ணமான கிரகம், சு+ரியன் ஆகும். பொதுவாக சு+ரியன், ஒரு ராசியில் சஞ்சரிக்கும்போது, இதர கிரகங்கள் சு+ரியனுக்கு மிக அருகில் சம்பந்தம் பெற்றாலோ இணைந்து நின்றாலோ, அந்த கிரகத்திற்கு அஸ்தங்க தோஷம் உண்டாகிறது. சு+ரியன் தனது உஷ்ண தன்மையால் தன்னுடன் இணையும் கிரகங்களை சக்தி இழக்க வைக்கிறாh;.
சந்திர அஸ்தாங்கம்
👉 சு+ரியனுக்கு 12 டிகிரிக்குள் சந்திரன் வரும் போது அஸ்தங்கம் அடைந்து அமாவாசை உண்டாகிறது. இவ்வாறு அமையப்பெற்றால் மன நோய், நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகிறது.
புத அஸ்தாங்கம்
👉 புதன், சு+ரியனுக்கு 14 டிகிரிக்குள் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு நரம்பு தளா;ச்சி, தாய் மாமனுக்கு தோஷம் உண்டாகிறது. புதன் சு+ரியன் சேர்க்கை புதாதித்திய யோகத்தை தரும் என்பதால் கல்வி சிறப்பாக இருக்கும். பொதுவாக புதன் அஸ்தங்கம் அதிக கெடுதலை தருவதில்லை.
செவ்வாய் அஸ்தாங்கம்
👉 செவ்வாய் ஆனது சு+ரியனுக்கு 17 டிகிரிக்குள் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். இக்காலத்தில் பிறப்பவர்களுக்கு சகோதரதோஷம், ரத்த சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள் உண்டாகிறது.
குரு அஸ்தாங்கம்
👉 சு+ரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு அமையப்பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு புத்திர தோஷம், பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.
சனி அஸ்தாங்கம்
👉 சு+ரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அமையப் பெற்றால் அஸ்தங்கம் உண்டாகிறது. இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு ஆரோக்கிய பாதிப்பு, தந்தைக்கு கண்டம் உண்டாகும்.
சுக்கிர அஸ்தாங்கம்
👉 சுக்கிரன், சு+ரியனுக்கு 8 டிகிரிக்குள் அமையப் பெற்றால் சுக்கிரன் அஸ்தங்கம் அடைவார். இக்காலத்தில் பிறந்தவர்களுக்கு பால்வினை நோய், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும். கோட்சாரத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்ற காலத்தில் திருமண சுபகாரியங்களை செய்யக்கூடாது.
சூரிய அஸ்தாங்கம்
👉 எல்லா கிரகங்களையும் செயல் இழக்க வைக்கும் சு+ரியன் ராகுவுக்கு அருகில் வரும்போது தானே பலமிழக்கிறார். இதனால் சு+ரிய கிரகணம் உண்டாகிறது. பெரியோர்களிடம், ஒத்துபோவாமை, தந்தையிடம் கருத்துவேறுபாடு, சட்டத்திற்கு புறம்பான வழியில் செல்லுதல் போன்றவை நடைபெறும்.
அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தங்களின் காரகத்துவ ரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்றாலும் ஜெனன ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.
No comments:
Post a Comment