கல்யாணத்தை நிர்ணயிக்கும் கட்டங்கள் எவை?
🌟 திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. மணவாழ்க்கை சிலருக்கு மிக எளிதாக கூடி வந்து விடும். ஒரு சிலருக்கு சிறிது முயற்சிகளின் மூலம் நடக்கிறது. பலருக்கு கிரகதோஷ அம்சங்களால் பல ஜாதகங்களை பார்த்து பிரம்மப் பிரயத்தனம் செய்த பிறகு தான் திருமண பந்தம் கூடி வருகிறது. சிலருக்கு திருமண பிராப்தம் கூடிவராமலும், முதிர் கன்னிகளாகவும், பல முறை குருபலன் வந்தும், பல கோவில்கள் சுற்றியும், பரிகார பூஜைகள் செய்தும் கல்யாண யோகம் இன்னும் கூடி வரவில்லை என எத்தனையோ பேர் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரம் கூறும் தீர்வு என்ன?
🌟 ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞானமும், மெய் ஞானமும் கலந்த ஓர் கலவையாகும். நம் முன்னோர்கள் பல நு}ற்றாண்டுகளாக பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்கள். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள்தான் அவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றது.
பிராரப்தம் கர்மா :
🌟 ஜாதகம் என்பது ஒருவர் பிறக்கும்போது நவகிரகங்கள், ராசி கட்டத்தில் இருக்கின்றன நிலையை நமக்கு தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இதன் மூலம் நம்முடைய கர்ம வினைப்படி நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள முடியும். ஜாதகப்படி அனைவருக்கும் அனைத்து யோகம் உண்டு என்று கணித்து சொல்கிறோம். ஆனால் அவைகளின் நிலைகளை இவ்வளவுதான் என்று உறுதியிட்டு சொல்ல முடியாது.
திருமண அமைப்பு தோஷம் யோகம் பொருத்தம் :
🌟 திருமண அமைப்பில் ஜாதக பலம் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. இதில் பிரதானமாக முதலில் லக்னம், இதிலிருந்துதான் நாம் மற்ற அமைப்புகளை கணக்கிடுகின்றோம். இதில் 2,4,5,7,8 ஆகிய வீடுகளில் இருந்துதான் கல்யாண யோகமும், தோஷமும் அறியப்படுகிறது.
ஜாதக தோஷங்கள் :
🌟 செவ்வாய், ராகுகேது, மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் போன்றவைகள் ஜாதக தோஷங்கள் ஆகும். இந்த தோஷங்கள் ஜாதகத்தில் நட்சத்திரங்களின் அமைப்புகளை பொறுத்து அமையும்.
நட்சத்திர விஷயங்கள் :
🌟 ஒரு காலத்தில் வெறும் நட்சத்திர பொருத்தம், பெயர் ராசிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தார்கள். தற்பொழுது வெறும் நட்சத்திர பொருத்தம் பார்த்து ஜாதகப் பொருத்தமும், யோகமும் சம தோஷமும் பார்த்து திருமணம் செய்யப்படுகிறது. ஜோதிடத்தில் பல விஷயங்கள் ஆதாரம் இல்லாமல் மக்களிடையே பரப்பப்பட்டு விட்டன. அவரவர்கள் ஜாதக அமைப்புப்படி யோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். அதேபோல் அவயோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். ஆகையால் ஜாதக கிரக அமைப்புக்களை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகங்களை சேர்ப்பதே சிறந்த வழியாகும்.
கோச்சார கிரக அமைப்பு :
🌟 கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாறுதல்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி போன்றவையாகும். கோச்சாரத்தில் குருபலன் பற்றி எல்லோரும் அறிவார்கள். குருபலன் வந்துவிட்டதா என்று கேட்பார்கள். எனினும் இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை.
🌟 குருபலன் இல்லாதபோதும் திருமணம் கூடி வரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுத்தி அந்தர யோக நேரமே நமக்கு சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தருகின்றன. ஆகையால், குருபலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். எட்டாமிடத்தில் கோச்சாரத்தில் குரு இருந்தாலும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் படுவதால் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதால் திருமண யோகத்தை கொடுப்பார்.
No comments:
Post a Comment