குரு வார வழிபாடு !

வியாழக்கிழமை விரதம் எனப்படும் குரு வார வழிபாட்டை கடைபிடித்தால் குரு பகவானின் அருளால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறலாம்.
ஏழ்மையில் இருப்பவர்களும், திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கின்றன நமது சாஸ்திரங்கள்.
புனர்பு+சம், விசாகம், பு+ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும், ஆங்கில தேதிகளான 3, 12, 21, 30 ஆகியவற்றிலும், தனுசு, மீன ராசிகளிலும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குரு அம்சத்தை பிறவியிலேயே பெற்றவர்கள் ஆவார்கள்.
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். குருவின் பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பு+ஜையும் செய்வது நல்லது. குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார்.
ஜாதகத்தில் குரு கெட்டிருந்தால் வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை பு+ஜிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
புனர்பு+சம், விசாகம், பு+ரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு குரு திசையே ஆரம்பமாக நடக்கும். மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னக்காரர்களுக்கு குரு சுப ஸ்தானங்களில் வலுப்பெற்றிருந்து திசை நடைமுறைக்கு வருமானால் யோகமான பலன்களை அளிப்பார்.
குரு திசை நடக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க அதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவேண்டும்.
மஞ்சள் நிற உடைகளை அணிவதாலும், புஷ்பராக மணியை தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வதாலும், கொண்டைக்கடலை தானம் கொடுப்பதாலும், குரு வார விரதம் இருப்பதாலும் குருதோஷம் நிவர்த்தியாகும்.
விரத முறை :
குரு வார விரத வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் தொடங்கி செய்வது சிறப்பானது. தட்சிணாமூர்த்தியின் திருவுருவப்படம் அல்லது தங்களது ஆன்மீக குருவின் படங்களை பு+ஜைக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் தெய்வ படங்களை மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து, ஆறு தீபங்களை அகல் விளக்காக ஏற்றி வைக்க வேண்டும். முல்லை மலர்கள், இனிப்புகள், சர்க்கரை பொங்கல், கற்கண்டு, கொண்டைக்கடலை போன்றவற்றை படைத்து குரு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்தபடி பு+ஜையை நிறைவு செய்ய வேண்டும்.
குரு வார விரதம் இருக்கும் போது ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும் மற்றும் நாள் முழுவதும் மௌவுன விரதம் இருப்பது நல்லது. குருவின் ஆசீர்வாதம் பரிபு+ரணமாக கிடைக்கும்.
முக்கியமாக வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், பிரியமுடனும் இருப்பது பிரகஸ்பதியான, குருவான, பொன்னன் எனப்படும் வியாழனுக்கு உகந்ததாகும். அதன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாத பலன் விலைமதிப்பற்ற சொத்தாகும்.
குரு பகவானால் பாதிப்பு உள்ளவர்கள் இந்த குரு வார விரதம் மேற்கொள்வது சிறப்பு. குரு வார விரதம் இருக்கும் தினங்களில் ராகவேந்திரர், சாய் பாபா வழிபாடு செய்வது விசேஷமானது. இதனால் பலன் இரட்டிப்பாகும்.
No comments:
Post a Comment