இந்த வாரம்... எந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்?
வார ராசிபலன்கள்
30.01.2023 முதல் 05.02.2023 வரை

இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம்
சந்திரன் இந்த வாரம் ரிஷபம், மிதுனம் மற்றும் கடக ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
இந்த வார கிரக மாற்றம் :
04.02.2023 (தை 21) சனிக்கிழமை - புதன், தனுசில் இருந்து மகரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
மேஷம் :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் ராகுவும்,
குடும்ப ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
களத்திர ஸ்தானத்தில் கேதுவும்,
பாக்கிய ஸ்தானத்தில் புதனும்,
தொழில் ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
லாப ஸ்தானத்தில் சுக்கிரனும்,
போக ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
தனவரவில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனையுடன் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பலதரப்பட்ட எண்ணங்களின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதமும், சோர்வும் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுதந்திரத்தன்மை வெளிப்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் வேலையாட்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் சிலருக்குச் சாதகமாக அமையும்.
வழிபாடு :
முருகப்பெருமானை வழிபடுவது மனத்தெளிவை ஏற்படுத்தும்.
ரிஷபம் :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
சத்ரு ஸ்தானத்தில் கேதுவும்,
அஷ்டம ஸ்தானத்தில் புதனும்,
பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
தொழில் ஸ்தானத்தில் சுக்கிரனும்,
லாப ஸ்தானத்தில் குருவும்,
போக ஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
மறைமுகமான திறமைகள் வெளிப்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
வழிபாடு :
சிவபெருமானை வழிபட்டு வர இன்னல்கள் குறையும்.
மிதுனம் :
கிரக அமைப்புகள் :
புத்திர ஸ்தானத்தில் கேதுவும்,
களத்திர ஸ்தானத்தில் புதனும்,
அஷ்டம ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரனும்,
தொழில் ஸ்தானத்தில் குருவும்,
லாப ஸ்தானத்தில் ராகுவும்,
சுக ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் நேரிடும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கணிப்பொறி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்குப் புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
வழிபாடு :
ஆஞ்சநேயரை வழிபடுவது செயல்பாடுகளில் உள்ள தடைகளை விலக்கும்.
கடகம் :
கிரக அமைப்புகள் :
சுக ஸ்தானத்தில் கேதுவும்,
சத்ரு ஸ்தானத்தில் புதனும்,
களத்திர ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரனும்,
பாக்கிய ஸ்தானத்தில் குருவும்,
தொழில் ஸ்தானத்தில் ராகுவும்,
லாப ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நிலுவையில் இருந்துவந்த பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு சார்ந்த செயல்பாடுகளில் முயற்சிக்கு ஏற்ப ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் தடைபட்ட சில பொறுப்புகள் மற்றும் உரிமைகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
வழிபாடு :
சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர முயற்சிகள் ஈடேறும்.
சிம்மம் :
கிரக அமைப்புகள் :
சகோதர ஸ்தானத்தில் கேதுவும்,
புத்திர ஸ்தானத்தில் புதனும்,
சத்ரு ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனும்,
அஷ்டம ஸ்தானத்தில் குருவும்,
பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும்,
தொழில் ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
வழிபாடு :
பைரவரை வழிபாடு செய்துவர சங்கடங்கள் குறையும்.
கன்னி :
கிரக அமைப்புகள் :
குடும்ப ஸ்தானத்தில் கேதுவும்,
சுக ஸ்தானத்தில் புதனும்,
புத்திர ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
சத்ரு ஸ்தானத்தில் சுக்கிரனும்,
களத்திர ஸ்தானத்தில் குருவும்,
அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும்,
பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
சொத்து பிரிவினைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் சில விரயங்கள் நேரிடலாம். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
வழிபாடு :
அம்பிகையை வழிபாடு செய்துவர துன்பங்கள் குறையும்.
துலாம் :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் கேதுவும்,
சகோதர ஸ்தானத்தில் புதனும்,
சுக ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
புத்திர ஸ்தானத்தில் சுக்கிரனும்,
சத்ரு ஸ்தானத்தில் குருவும்,
களத்திர ஸ்தானத்தில் ராகுவும்,
அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சற்று கவனம் வேண்டும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கலை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில், பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்.
வழிபாடு :
விநாயகப்பெருமானை வழிபாடு செய்துவர தடைகள் விலகும்.
விருச்சிகம் :
கிரக அமைப்புகள் :
குடும்ப ஸ்தானத்தில் புதனும்,
சகோதர ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
சுக ஸ்தானத்தில் சுக்கிரனும்,
புத்திர ஸ்தானத்தில் குருவும்,
சத்ரு ஸ்தானத்தில் ராகுவும்,
களத்திர ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
போக ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகளின் மூலம் தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவில் புதுவிதமான மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மற்றும் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர விருப்பங்கள் நிறைவேறும்.
தனுசு :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் புதனும்,
குடும்ப ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
சகோதர ஸ்தானத்தில் சுக்கிரனும்,
சுக ஸ்தானத்தில் குருவும்,
புத்திர ஸ்தானத்தில் ராகுவும்,
சத்ரு ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். மாணவர்களுக்குக் கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் சார்ந்த முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கான திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
வழிபாடு :
குருமார்களை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மகரம் :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனும்,
சகோதர ஸ்தானத்தில் குருவும்,
சுக ஸ்தானத்தில் ராகுவும்,
புத்திர ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
தொழில் ஸ்தானத்தில் கேதுவும்,
போக ஸ்தானத்தில் புதனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெளிவான சிந்தைகளுடன் காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். இழுபறியான சில உதவிகள் கிடைக்கும்.
வழிபாடு :
சிவபெருமானை வழிபட குழப்பங்களில் இருந்து தெளிவுகள் கிடைக்கும்.
கும்பம் :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் சுக்கிரனும்,
குடும்ப ஸ்தானத்தில் குருவும்,
சகோதர ஸ்தானத்தில் ராகுவும்,
சுக ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும்,
லாப ஸ்தானத்தில் புதனும்,
போக ஸ்தானத்தில் சூரியனும், சனியும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
உத்தியோக பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் படிப்படியாகக் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். மனதிற்குப் பிடித்த செயல்களைச் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களைப் பற்றிய பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும்.
வழிபாடு :
மகாலட்சுமியை வழிபட உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம் :
கிரக அமைப்புகள் :
ராசி ஸ்தானத்தில் குருவும்,
குடும்ப ஸ்தானத்தில் ராகுவும்,
சகோதர ஸ்தானத்தில் செவ்வாயும், சந்திரனும்,
அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும்,
தொழில் ஸ்தானத்தில் புதனும்,
லாப ஸ்தானத்தில் சூரியனும், சனியும்,
போக ஸ்தானத்தில் சுக்கிரனும் இருக்கிறார்கள்.
பலன்கள் :
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட அறிமுகத்தின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தனவரவும், சேமிப்பும் அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடைபட்ட செயல்களைச் செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும்.
வழிபாடு :
கன்னிமார்களை வழிபட்டு வர உதவிகள் கிடைக்கும்.
No comments:
Post a Comment