சனி பெயர்ச்சி பலன்கள் 2023- 2026
பணவரவு தடையின்றி கிடைக்க செய்யும் வெட்டிவேர் விநாயகர்...!
இந்த வாரம்... எந்த ராசிக்காரர்களுக்கு திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்?
முற்பிறவி தீவினைகள் அகன்று... குழந்தை பாக்கியம் கிடைக்க பெறும்... ஏகாதசி..!!
முன்னோர்களின் ஆசி பெற உதவும் மந்தாரை மரம்... வீட்டில் வளர்க்கலாமா?
தை கிருத்திகை விரத பலன்கள்
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023
சனி பெயர்ச்சி பலன்கள் - மேஷம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ஆம் பாதம்)
செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த மேஷ ராசி அன்பர்களே திருக்கணித அடிப்படையில் சனி பகவான் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரை) உங்கள் ராசிக்கு லாபஸ்தானம் என்னும் 11 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட இருக்கிறது. குறிப்பாக உத்யோக ரீதியாக இது வரையில் இருந்த தேவை இல்லாத இடர்பாடுகள் எல்லாம் விலகி ஏற்றம் ஏற்பட இருக்கிறது. எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் கூட வர இருக்கும் நாட்களில் படிப்படியாக தேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப்பெறும். பழைய கடன்கள் கூட அடைபடும். சிலர் பெரிய முதலீடுகளை செய்து வளமான வாழ்க்கையை பெறுவீர்கள். உத்யோக ரீதியாக விரும்பிய இடமாற்றம் மற்றும் சலுகைகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கூட ஏற்படும். சேமிப்பு கூட கணிசமாக உயரும். திடீர் லாபங்கள் மகிழ்ச்சி தரும். 1.5.2024 முதல் 14.5.2025 வரையில் குரு பகவானின் அருளால் அனைத்து விதங்களிலும் நல்ல அனுகூலமான பலன்கள் ஏற்படும். மேற்படி கால கட்டத்தில் திருமணம் போன்ற சுப காரிய பேச்சுக்கள் கூட நன்மை தரும். 30.10.2023 முதல் 18.5.2025 வரையிலான கால கட்டத்தில் கேதுவின் சஞ்சாரம் கூட உங்களுக்கு நல்ல பலன்களை தரும்.
உடல் ஆரோக்கியம்
இது வரையில் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் படிப்படியாக குணம் காணும். பலருக்கு உடல் நிலை தேறும். இதனால் நெடு நாள் நோயாளிகளுக்கும் கூட மருத்துவ செலவுகள் குறையும். இதனால், இனிமேல் வரும் காலங்களில் நீங்கள் சேமிக்க முடியும். உங்கள் கடமைகளை நல்ல விதங்களில் நிறைவேற்றுவீர்கள்.
குடும்பம், பொருளாதார நிலை:
குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். திடீர் உதவிகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். கணவன் மனைவி இடையே மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மற்றபடி, இனி வரும் காலங்களில் பலருக்கு பொருளாதார நிலை மேம்படும். வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் சிலருக்கு அமையப்பெறும். ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இதனால் சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
கொடுக்கல்-வாங்கல்:
கொடுக்கல்-வாங்கலில் இது நாள் வரையில் இருந்த நெருக்கடிகள் பலருக்கு குறையும். சிலருக்கு வராது என்று இருந்த பணம் கூட வசூல் ஆகும். எதிர்ப்புகள் அனைத்தும் அடங்கும். கடன்கள் குறையும் அல்லது சிலருக்குத் தீரும். சில விஷயங்களில் அலைச்சல் இருந்தாலுமே கூட உங்களது முயற்சி வீண் போகாது. எண்ணியது எண்ணியபடி நடந்தேறும். அதனால் கவலை வேண்டாம்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இது நாள் வரையில் இருந்த நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். அதிக முதலீடுகளை செய்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி காணுவீர்கள். சிலர் வேலையை விட்டு புதிய தொழில் தொடங்குவீர்கள். பலருக்கு நல்ல வேலை ஆட்கள் அமைவார்கள். எனினும் அவர்களை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள். சிலருக்கு புதிய கூட்டாளிகள் கூட அறிமுகம் ஆவார்கள். மொத்தத்தில் பெரும்பாலும் தொழில் அல்லது வியாபார ரீதியாக நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
உத்யோகம்:
உத்யோகத்தில் நீங்கள் இது நாள் வரையில் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறந்து விட்டது. உங்கள் உழைப்பிற்கான நல்ல வெகுமானம் கிடைக்கப்போகிறது. பலருக்கு இதை விட நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உற்சாகமாக இருப்பீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய அதிகாரிகளின் தயவு கிடைக்கப்பெறும். பதவி உயர்வுகள், எதிர்பார்த்த இடமாற்றம் கூட பலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு வசூல் ஆக வேண்டிய சம்பள பாக்கிகள் வசூலாகும். உங்கள் கனவுகள் எல்லாம் நல்ல படியாக நிறைவேறும் காலம் இந்தக் காலம்.
அரசியல்
உங்களது பெயர் புகழ் மேலோங்கும். மக்களிடையே உங்களுக்கான மதிப்பு, மரியாதை உயரும். மேலிடத்தின் ஆதரவு கூட உங்களுக்கு மகிழ்ச்சி தரும். பல்வேறு பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நல்ல பெயரை எடுப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவு கூட உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும் காலம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. பல்வேறு மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் கூட வெற்றி அடையும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறும். நீங்கள் வாங்கிய கடன் கூட அடைபடும். புதிய விளை நிலங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்த்த மானிய உதவிகள் கூட கிடைக்கப்பெறும். நவீன யுத்திகளை பின்பற்றி நல்ல மகசூலை காண்பீர்கள். மொத்தத்தில், விவசாயத் தொழிலில் நல்ல முறையில் அபிவிருத்தி காணுவீர்கள்.
கலைஞர்கள்
பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த வகையில் மனம் மகிழும் இனிய சம்பவங்கள் நடந்தேறும். மக்கள் மத்தியில் நல்ல பெயர், புகழ் உங்களுக்கு கிடைக்கும். சிறந்த கதா பாத்திரங்களை தேர்வு செய்து வெற்றியை பெறுவீர்கள். நடிப்பில் உங்களுடைய செயல்பாடு திறன் அதிகரிக்கும் காலம் என்றே சொல்ல வேண்டும். பலருக்கு விருதுகள் கூட கிடைக்கப்பெறும். கலைத்துறையில் உன்னத சாதனைகளை நிகழ்த்த இருக்கிறீர்கள்.
பெண்கள்
தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். ஆடை, அணிகலன் வாங்கும் யோகம் கிடைக்கப்பெறும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். பணி புரியும் பெண்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். திறமைகளை நல்ல முறையில் வெளிக்காட்டுவீர்கள்.
மாணவச் செல்வங்கள்
உங்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களை புரிந்து படிப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர் ஆதரவு மகிழ்ச்சி தரும். நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கூட கிடைக்கப்பெறும். போட்டிகளில் கூட பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். பல மோசமான நண்பர்கள் உங்களை விட்டு விலகி நல்ல நண்பர்களின் ஸ்நேகம் அல்லது நட்பு கிடைக்கப்பெறும். அதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் நன்மை அடைவீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
சகல விதங்களிலும் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு இக்கால கட்டத்தில் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும் அல்லது நீங்கும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும். பணவரவுகள் கணிசமாக அதிகரிக்கும். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்து பொறுமையை கடைபிடியுங்கள். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் கூட படிப்படியாக குறையும். வேலை ஆட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைக்கப்பெறும். சிலர் உத்தியோகத்தை விட்டு, விட்டு சொந்தத் தொழிலை ஆரம்பிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கூட ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களின் கௌரவம், மதிப்பு குடும்பத்தில் உயரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கூட கிடைக்கப்பெறும். பெரும்பாலும் நல்லதே நடக்கும். அதனால் உற்சாகமாக இருங்கள்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
அலைச்சல் இருந்தாலுமே கூட நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் முடித்து நீங்கள் நல்ல பெயரை எடுப்பீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த வம்பு, வழக்குகள் எல்லாம் கூட ஒரு முடிவுக்கு வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் மட்டும் இந்தக் காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கப்பெறும். இதனால் பிரிந்து இருந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மற்றபடி பெரும்பாலும் நல்லதே நடக்கும்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் சில இடையூறுகளை திடீர் என்று சந்திக்க நேரிடலாம். எனினும், பொருளாதார நிலையில் பெரிய பாதிப்புகள் இருக்காது. அதே சமயத்தில், சில விமர்சனங்களை கடந்து தான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி இருக்கும். குடும்பத்தில் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் கூட குடும்ப ஒற்றுமை பாதிக்காது. மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியில் சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல விதத்தில் தேர்ச்சி பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் உங்களது தனித்திறமையை காணுவீர்கள். எதையும் எதிர்கொண்டு ஏற்றம் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். சமூகத்தில் உங்கள் புகழ், பெருமை ஓங்கும். சிறு, சிறு சோதனைகள் வந்தாலும், இறுதியில் அவை அனைத்தும் சாதனையாக மாறும்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். பொருளாதாரம் மேம்படும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் சிலருக்கு சுபச் செலவுகளாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்கு வெற்றி அடையும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கப்பெறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் நவீன யுத்திகளை பயன்படுத்தி லாபம் அடைவீர்கள். பிள்ளைகள் வழியில் சிலருக்கு நல்ல பலன்கள் ஏற்படும். சிலர் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வெளிநாடு செல்லக் கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். தந்தை வழியில் கூட சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்துமே கிடைக்கப்பெறும். இழந்ததை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதிப்பார்கள். கணவன்- மனைவி இடையே மட்டும் முன்கோபத்தை குறைத்து விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எதிர்பாராத திடீர் உதவிகள் மற்றும் நன்மைகள் எல்லாம் இக்கால கட்டத்தில் ஏற்படும். ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் சிலருக்குத் தேடி வரும். தொழில் அல்லது வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சிலர் தொழிலை நல்ல முறையில் அபிவிருத்தி செய்து லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். உத்யோக ரீதியாக எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறும். அற்புதமாக இருப்பீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் இறுதியில் நல்ல படியாக நிறைவேறும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நெருக்கடிகள் குறையும். ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். சுப காரியங்கள் சிலருக்கு கைகூடும். 1.5.2024 முதல் குரு பகவான் 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால் திருமணம் பலருக்கு கைகூடும். மறக்க முடியாத இனிய சம்பவங்கள் சிலருக்கு நடந்தேறும். தொழில் அல்லது வியாபாரத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். நல்ல வாய்ப்புகள் பலரைத் தேடி வரும். தசா புத்தியும் நன்றாக இருக்கும் பட்சத்தில் அற்புதமான நல்ல பலன்களை எல்லாம் நீங்கள் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அது அளிக்கும்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சாரம் செய்தாலுமே மற்ற மாத கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால், உங்களின் பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கப்பெறும். தொழில் நல்ல முறையில் வளர்ச்சி காணும். எனினும், வேலை ஆட்களை மட்டும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மற்றபடி தொழில் அல்லது வியாபாரத்தில் சாதிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் மட்டும் பணிச்சுமை சற்று அதிகரித்துக் காணப்படலாம். எனினும், அதிகாரிகள் ஆதரவு நன்மை தரும். விரும்பிய பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கப்பெறும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பண வரவுகள் சிலருக்கு இந்தக் கால கட்டத்தில் வந்து சேர இடம் உண்டு. பயணங்களை மட்டும் திட்டமிட்டு செய்யுங்கள். இல்லையேல், தேவை இல்லாத அலைச்சலை சந்திக்க நேரிடும். அதே சமயத்தில், சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். சிலர் பழைய கடனை அடைப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டி இருக்கும். சிலர் புதிய கிளைகளை கூட ஆரம்பிக்க இடம் உண்டு. மொத்தத்தில், சிறு, சிறு சோதனைகள் வந்தாலும் கூட இறுதியில் அனைத்தும் சாதனையாக மாறும்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலையை எல்லாம் அடைவீர்கள். நினைத்த காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடந்தேறும். எதிர்பாராத பணவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தி ஆகும். சிலருக்கு புதிய சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மட்டும் போட்டிகளை கடந்தே லாபம் அடைய வேண்டி இருக்கும். எனினும், உங்களது முயற்சி வீண் போகாது. அதனால், கவலை வேண்டாம். உத்யோகத்தில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரிகளிடம் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். எனினும் வேலை பளு சற்று இருக்கத்தான் செய்யும். அதே சமயத்தில் மேலதிகாரி உங்களை புரிந்து கொள்வார். மாணவர்கள் இந்தத் தருணத்தை பயன்படுத்தி முயற்சி செய்து கொஞ்சம் படித்தாலுமே எதிர்காலத்தில் வியத்தகு நல்ல மாற்றங்களை பெறுவீர்கள். பெண்களுக்கு சுப செலவுகள் தேடி வரும். சிலருக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலுக்குப் பிறகு நன்மை தரும்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
கணவன், மனைவி இடையே மட்டும் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எனினும், பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் தான். கொடுத்த வாக்குறுதிகளை நல்ல படியாக முடிப்பீர்கள். வராது என்று நினைத்த பணம் வரும். தொழில் அல்லது வியாபாரத்தில் எந்த விதமான போட்டிகளையும் சமாளித்து வெற்றி பெறும் விதத்தில் உங்களது தைரியம் காணப்படும். உடல் உபாதைகள் விலகி எதிலும் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையும். தசா புத்தி சொந்த ஜாதகத்தில் மோசமாக இருந்தாலுமே இந்தக் கால கட்டத்தில் ஒரு சில நன்மைகளை அடைவீர்கள். பயணங்கள் ஆரம்பத்தில் அலைச்சல் தந்தாலுமே கூட இறுதியில் எல்லாம் அனுகூலமான பலனை செய்யும். வீடு, வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். இதனால் சுப செலவுகளுக்கு இடம் உண்டு. பெண்கள் நலம் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்கு நன்மை தரும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
1,2,3,9,10,11,12
ராசியான நிறம்
ஆழ்சிவப்பு
ராசியான கிழமை
செவ்வாய்
ராசியான கல்
பவளம்
ராசியான திசை
தெற்கு
ராசியான தெய்வம்
முருகப்பெருமான்
சனி பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
ரிஷபம்
(கிருத்திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம்)
சுக்கிரன் ஆட்சி பெறும் ரிஷப ராசியில் பிறந்த அன்பர்களே 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரை) உங்கள் ராசிக்கு 10 ஆம் இடம் எனப்படும் ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வார். இதனால் அனைத்து விதங்களிலும் நீங்கள் எதிர் நீச்சல் போட்டே முன்னேறும் படியாக இருக்கும். தொழில் அல்லது வியாபார ரீதியாக சிந்தித்து நீங்கள் செயல்பட வேண்டி இருக்கும். கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எனினும், பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தரும். கேட்ட இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். அதிகப்படியான அலைச்சல் என்பதை தவிர்க்க முடியாது. உங்கள் ஓய்வு நேரத்தில் கூட நீங்கள் உழைக்கும் படியாக இருக்கும். மொத்தத்தில், தொழில் அல்லது வியாபாரத்தில் பல விதமான எதிர்ப்புகளை கடந்து தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். தொழில் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளை நன்கு ஆலோசித்து திட்டமிட்டு செய்வது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு குறையலாம். உத்யோகத்தில் பிறர் வேலையை சேர்த்தும் நீங்களே பார்க்க வேண்டிய நிர்பந்தம் வரலாம். திடீர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அலைச்சல் எங்கும், எதிலும் தவிர்க்க முடியாது தான். வேலை மாறுவதாக இருந்தால் கூட இந்தக் கால கட்டத்தில் திட்டமிட்டு மிகவும் யோசித்து மாறுங்கள். செலவுகள் அதிகரிக்கும் கால கட்டம் இது. சிலருக்கு வீடு, மனை சம்மந்தமாக விரய செலவுகள் ஏற்படலாம். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறு, சிறு வாக்கு வாதங்கள் வந்து போக இடம் உண்டு. மொத்தத்தில் சோதனைகளை கடந்தே சாதனை படைக்க வேண்டிய தருணம் இது.
உடல் ஆரோக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போக இடம் உண்டு. பிரயாணங்களை திட்டமிட்டு செய்யப் பாருங்கள். காரணம் இந்தக் கால கட்டத்தில் தேவை இல்லாத அலைச்சல் எல்லாம் உங்களுக்கு ஏற்பட இடம் உண்டு. நீங்களாக மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு அவ்வப்போது ஒவ்வாமை சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். எனினும் மற்ற படி கோச்சார ரீதியாக பெரிய அளவில் எல்லாம் ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு குறைவே. தசா புத்தி மோசமாக இருக்கும் அன்பர்கள் மட்டும் சாந்தி செய்து கொள்ளவும்.
குடும்பம், பொருளாதார நிலை:
கணவன்- மனைவி இடையே சின்னச், சின்ன அவிப்பிராய பேதங்கள் வந்து போகலாம். முடிந்த வரையில் பிரச்சனைகளை அந்நிய நபர்கள் தலையீடு இல்லாமல் நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பொருளாதார நிலையானது ஓரளவே திருப்தி தரும். ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளப் பாருங்கள். வெகு சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமாக புதிய கடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கொடுக்கல்-வாங்கல்:
பணப்பரிமாற்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை பார்த்து அவ்வப்போது பரிசல் செய்து கொள்ளுங்கள். ஏமாற்றுப் பேர்வழிகளிடம் பணத்தை பறிகொடுக்காமல் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சில ஏஜென்ட் கள் தங்களுக்கு கிடைக்கும் சொற்ப கமிஷன் காசுக்காக தேவை இல்லாத திட்டங்களில் உங்களை மாட்டி விட நினைக்கலாம். மொத்தத்தில் பண விவகாரங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் போட்டிகள் அதிகரித்தே காணப்படும். வேலை ஆட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். ஓயாமல் உழைக்க வேண்டி இருக்கும். எனினும் உங்களுடைய உழைப்பிற்கு பலன் கிடைக்காமல் போகாது. வாடிக்கையாளர்களை கவர புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டி இருக்கும். இதனால் லாபம் சற்று குறையலாம். எதிர்பார்க்கும் லாபத்தை அடைய சற்று கூடுதல் முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும். பொறுமை மிக, மிக அவசியமான கால கட்டம் இது.
உத்யோகம்:
பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலுமே உடன் வேலை செய்பவர்கள் உங்கள் மீது வீண் பழிச் சொற்களை சொல்வார்கள். அதிக பணிச் சுமை காரணமாக நீங்கள் அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். ஓய்வு நேரம் குறைவதால் அடிக்கடி உடல் சோர்வு காணப்படும். உயர் அதிகாரிகள் அவ்வப்போது நீங்கள் சொல்வதை புரிந்து கொள்வதில்லையே என்கிற ஆதங்கம் அவ்வப்போது தோன்றி மறையலாம். உத்யோகத்தில் பெரும்பாலும் சலுகைகள் தாமதம் ஆகி அதன் பின்னர் தான் கிடைக்கப்பெறும். முடிந்த வரையில் பிறருக்கு உதவுவதை விட உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தப் பாருங்கள்.
அரசியல்
அரசியல் வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நிருபர்களிடம் பேசும் சமயத்தில் கூட வார்த்தையை நிதானமாக பார்த்துப் பேசவும். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். மக்களிடம் செல்வாக்கு சரியாமல் பார்த்து கொள்ளுங்கள். வாக்குறுதிகளை யோசித்து கொடுங்கள். மேலிடத்திடம் தேவை இல்லாத வாக்குவாதங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் எதிலும் நிதானமான போக்கை கடைபிடியுங்கள். அது பிற்காலத்தில் உங்களுக்கு நன்மை தரும்.
விவசாயிகள்
விளைச்சல் சாதகமாக இருந்தாலும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். புழு, பூச்சிகள் மற்றும் வேலை ஆட்கள் காரணமாக கூடுதல் செலவுகள் அதிகரித்தே காணப்படும். அரசு வகை உதவிகள் சிலருக்கு தாமதம் ஆகலாம். பங்காளிகளிடம் பேசும் சமயத்தில் மிகவும் பொறுமையுடன் பேசுங்கள். வம்பு, வழக்குகள் வந்து சேராமல் நிதானமாக இருந்து கொள்ளுங்கள். பொறுமை இந்தக் கால கட்டத்தில் மிக, மிக அவசியம். காரணம் எல்லாமே இழுபறி நிலையை அடையும். அதன் பின்பே மெல்ல, மெல்ல வேலைகள் நடந்தேறும்.
கலைஞர்கள்
உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அதனை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். எனினும், திறமைக்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும் தான். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கலாம். அதனால் அலைச்சல் சற்று அதிகரிக்க இடம் உண்டு. போட்டிகள் இருக்கும் தான். ஆனால், அதை எல்லாம் கடந்து நீங்கள் சாதிப்பீர்கள்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் ஓரளவே சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலுக்கு பிறகே நன்மை தரும். பணிபுரியும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் கால கட்டம் இது. எனினும், அதற்கான நல்ல பலனை நீங்கள் அடைவீர்கள். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பணியிடத்தில் மற்றவர்கள் பணியையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும். அதனால் சில ஆதங்கங்கள் ஏற்பட இடம் உண்டு. மொத்தத்தில் பொறுமையுடன் இருக்க வேண்டிய காலங்கள் இந்தக் காலங்கள்.
மாணவச் செல்வங்கள்
படிப்பில் நல்ல விதத்தில் உங்களது செயல்பாடுகள் இருக்கும். உங்கள் முயற்சி வீண் போகாது. நீங்கள் முயற்சி செய்து படித்தீர்கள் என்றால், நல்ல எதிர்காலம் உண்டு. விரும்பிய பாடத்தில் கூட பலருக்கு இடம் கிடைக்கும். சிலர் குடும்பத்தை விட்டு வெளிநாடு சென்று படிக்க நேரிடலாம். பேச்சில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். சக நண்பர்களை இனம் கண்டு தேர்வு செய்து பழகுங்கள். தீய நண்பர்கள் சகவாசத்தால் சிறு, சிறு பிரச்சனைகளும், அவப்பெயரும் சிலருக்கு வந்து போக இடம் உண்டு. எனினும், எதிர்நீச்சல் போட்டு கல்வியில் பலர் சாதிப்பீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் அலைச்சல் சற்று அதிகம் இருக்கும் தான். எல்லா விஷயங்களிலும் எதிர்நீச்சல் போட்டு தான் முன்னேறும் படியாக இருக்கும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாகத் தான் காணப்படும். கணவன்- மனைவி இடையே சின்னச், சின்ன அவிப்பிராய பேதங்கள் ஏற்பட இடம் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். சிலருக்கு அதன் மூலமாக சுபச் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. வியாபாரத்தில் வேலை ஆட்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த உதவிகள் சிலருக்கு தாமதம் ஆனாலும் கூட கண்டிப்பாக வந்து சேரும். அதனால் கவலை கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகம் இருக்கத் தான் செய்யும். எனினும் பிற்பாடு அதற்கான பாராட்டுக்கள் உண்டு. மேலதிகாரிகளுடன் வாக்கு வாதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகம் மாற இக்கால கட்டம் ஏற்றது இல்லை. அதனால் பொறுமையுடன் உத்தியோகத்தை பார்ப்பது நல்லது. முடிந்த வரையில் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உடன் இருப்பவர்களை அனுசரிக்க முடியவில்லை என்றாலும் எதிர்த்துக் கொள்ளாதீர்கள். பொறுமையுடன் இருந்து காரியம் சாதிக்க வேண்டிய கால கட்டம் இந்தக் கால கட்டம்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எந்த ஒரு புதிய முயற்சிகளும் இந்தக் காலத்தில் தடைபடாமல் இருக்க விநாயகரை வேண்டிச் செய்யுங்கள். பெரிய முதலீடுகளை சிந்தித்துச் செய்யுங்கள். பணவரவுகள் ஓரளவே நன்மை தரும். எனினும் செலவுகள் திடீர், திடீர் என்று ஏற்படும் கால கட்டம். அதனால் முடிந்த வரையில் சிக்கனமாக இருக்கப் பாருங்கள். பணம் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் மூலமாக சிலருக்கு நன்மைகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் பல விதமான நேர்முக, மறைமுகப் போட்டிகளை சந்தித்தே நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். முடிந்த வரையில் வேலை ஆட்களை அனுசரித்துச் செல்லுங்கள். சிலர் வெகு நாள் வேலை செய்த நல்ல வேலை ஆட்களை இழக்க வேண்டி வரலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். உடன் வேலை செய்பவர்கள் 'ஒத்துழைக்க மறுக்கிறார்களே' என்ற ஆதங்கம் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு தேவை இல்லாத இருப்பிட மாற்றம் கூட ஏற்படலாம். சுப காரிய பேச்சுவார்த்தைகள் அலைச்சலை தரும் என்றாலும் பிற்பாடு அனுகூலத்தை தரும்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உங்களுக்கு ஏற்படும். எனினும், செலவுகள் அதிகரிக்கும் கால கட்டம் இது. உடல் ஆரோக்கியம் ஓரளவு நன்மை தரும். சிலருக்கு மருத்துவ செலவுகள் குறையும். எதையும் சுறுசுறுப்பாக செய்ய முற்படுவீர்கள். சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் நெருக்கடிகள் ஓரளவு குறைய இடம் உண்டு. இதனால் லாபங்கள் சற்று அதிகரிக்க இடம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிலர் வேறு ஒரு நல்ல உத்யோகம் கூட மாறுவீர்கள். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட பிற்காலத்தில் அதனால் நல்ல பலன் ஏற்பட இடம் உண்டு. மொத்தத்தில் சுமாரான கால கட்டமே. எனினும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
தொழில் அல்லது வியாபாரத்தில் குறிப்பாக இக்கால கட்டத்தில் சில இடையூறுகளை சந்தித்தாலும் கூட இறுதியில் எதிர்நீச்சல் போட்டு நீங்கள் முன்னேறுவீர்கள். அனைத்திலும் உங்கள் தனித்திறமை வெளிப்படும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலுமே கூட எதிர்பார்க்கும் இடத்தில் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறும். கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அந்நிய நபர்களிடத்தில் குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தே காணப்படும். எனினும் உங்களுடைய திறமையினால் சமாளித்து முன்னேறுவீர்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் சம்மந்தமாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு. அலைச்சல் காரணமாக பலருக்கு ஓய்வு நேரம் குறையலாம். மொத்தத்தில், எதிர்நீச்சல் போட்டு பொறுமையாக இருந்து காரியம் சாதிக்க வேண்டிய கால கட்டம் இது.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்திலும் கூட பொறுமையுடன் செயல்பட்டால் ஏற்றங்களை காண முடியும். தேவையற்ற அலைச்சல்கள் இருக்கத் தான் செய்யும். எனினும் சமாளித்து விடுவீர்கள். நிறைய இடையூறுகளை கடந்தே நீங்கள் முன்னேற வேண்டி இருக்கும். பொருளாதாரம் இந்தக் கால கட்டத்தில் மிகவும் ஏற்ற இறக்கமாகவே காணப்படும். சிலருக்கு புதிய கடன்கள் கூட ஏற்பட இடம் உண்டு. குடும்பத்தில் நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் நெருங்கியவர்கள் மூலமாகவே தடைபடலாம். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் தேவை இல்லாத கவலைகள் வந்து போகலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் அசதி ஏற்படலாம். பலருக்கு ஓய்வு நேரம் கூட குறைய இடம் உண்டு. தேவை இல்லாத வீண் வாக்குவாதங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் நபர்களுடன் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பல விதமான அனுபவங்கள் ஏற்படும் காலம். மொத்தத்தில் கோபத்தை குறைத்து முன்னேறப் பாருங்கள். குல தெய்வ வழிபாடு வெற்றியைத் தரும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகளையும் எதிர்கொண்டு நீங்கள் ஏற்றம் பெரும் காலம் இது. எதிலும் எதிர்நீச்சல் போட்டு நீங்கள் முன்னேறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் கூட இறுதியில் வெற்றி கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சில மகிழ்ச்சியான சம்பவங்கள் நடந்தேறும். உடல் ஆரோக்கியத்தில் கூட சிலருக்கு முன்னேற்றம் ஏற்படும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். பூர்வீக சொத்து விவகாரங்களில் பங்காளிகளுடன் பேசும் சமயத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். தொழில் அல்லது வியாபார ரீதியாக அலைச்சல் அல்லது உடல் சோர்வு ஏற்பட்டாலும் கூட எதிர்பார்த்த லாபத்தை போராடிப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகம் இருக்கும் தான். எனினும் சமாளித்து விடுவீர்கள். மொத்தத்தில் போராடி நன்மை அடைவீர்கள். எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் பொருளாதார ரீதியாக சில நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மட்டும் சற்று நிதானத்தை கடைபிடிக்கவும். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகம் காணப்படும். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே கூட சமயோசிதமாக யோசித்து நன்மையை பெறுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சின்னச் சின்ன இடையூறுகள் ஏற்பட இடம் உண்டு. உத்யோக ரீதியாக பல காலங்களாக எதிர்பார்த்த சலுகைகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கப்பெறும். மொத்தத்தில் உத்யோக ரீதியாக புதிய பொறுப்புகள் தேடி வரும். அதனால் ஆதாயம் ஏற்படவும் இடம் உண்டு. பெண்களுக்கு சுப செலவுகள் ஏற்படும்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் உங்களது பொறுமையை சோதிக்கும் படியான சம்பவங்கள் நடந்தேற வாய்ப்பு உண்டு. அதனால் பொறுமையை இழந்து விடாதீர்கள். கோபத்தை குறைத்து முன்னேறப் பாருங்கள். கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். சிலருக்கு திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். அந்த வகையில் சிலருக்கு சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலுமே கூட நிச்சயம் அடைய வேண்டிய லாபத்தை நீங்கள் அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் வேலை ஆட்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். சிலர் தொழில் அல்லது வியாபார ரீதியாக புதிய கிளைகளை திறப்பீர்கள். வேலைப்பளு அதிகம் இருக்கும் தான். குறிப்பாக உத்யோகஸ்தர்களுக்கு நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை ஏற்படும். முடிந்த வரையில் அதிகாரிகளுடன் வாக்கு வாதம் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் ஏற்பட்டாலுமே கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட இடம் இல்லை. எனினும், தசா புத்தி மோசமாக இருப்பவர்கள் சற்று கவனமுடன் இருந்து கொள்ளுங்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சந்தித்து தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்படலாம். எனினும் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு இறுதியில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். முடிந்தவரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை மட்டும் தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
6, 15, 24
ராசியான நிறம்
நல்ல வெள்ளை
ராசியான கிழமை
வெள்ளி, சனி
ராசியான கல்
வைரம்
ராசியான திசை
தெற்கு
ராசியான தெய்வம்
மகா லக்ஷ்மி
சனி பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
மிதுனம்
(மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ஆம் பாதம்)
புதனின் ஆதிக்கத்தில் பிறந்த மிதுன ராசி அன்பர்களே!.. இதுநாள் வரையில் அஷ்டம சனியாக இருந்து சனிபகவான் உங்களுக்குப் பல்வேறு இடர்பாடுகளை கொடுத்துக் கொண்டு இருந்தார். தற்போது திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) சனி பகவான் உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானம் எனப்படும் 9 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் முன் போல இனி சோதனைகள் இருக்காது. குடும்பத்தில் இனி வரும் காலங்களில் நல்ல விஷயங்கள் எல்லாம் நடந்தேறும். மனதில் உள்ள பயம், தயக்கம் நீங்கும். உற்சாகம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் படிப்படியாக ஏற்றம் உண்டு. சிலர் வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்பத் தேவைகள் நல்ல விதங்களில் பூர்த்தி ஆகும். நவீன பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டாகும். பணப் பரிவர்த்தனை விஷயங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கூட புதிய யோசனைகளை புகுத்தி எதிர்பார்க்கும் லாபத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய கிளைகள் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு அல்லது யோகம் கிடைக்கப்பெறும். சனி பகவான் 9 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆண்டுக் கோள் என்று சொல்லக்கூடிய குரு பகவான் (22.5.2023 முதல் 1.5.2024 வரையில்) லாபஸ்தானம் என்னும் 11 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதுவும் கூட உங்களுக்கு அற்புதமான பல நல்ல பலன்களை தரும். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நல்ல படியாக நிறைவேறும். சர்ப கிரகமான ராகு 30.10.2023 வரையில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது கூட உங்களுக்கு நல்ல பலன்களை தரும். இத்துடன் தற்போது ஏற்பட்டு இருக்கும் இந்த சனிப் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் நல்ல விதமான மாற்றங்களை தரும். அதனால் சந்தோஷமாக இனி வரும் காலங்களில் இருக்கப் போகிறீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு இது நாள் வரையில் இருந்து வந்த உடல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் விலகி ஏற்றமான பலன்களை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்கள் இனி வரும் காலங்களில் குணம் அடைய இடம் உண்டு. தசா புத்தி மோசமாக இருக்கும் அன்பர்களுக்கு கூட மருத்துவ செலவுகள் குறைய இடம் உண்டு. குடும்ப உறுப்பினர்கள் கூட உங்கள் ஜாதக பலனால் நன்மை அடைவார்கள். அதனால் இனி வரும் காலங்களில் சுப பலன்களே ஏற்படும். அதனால் கவலை வேண்டாம்.
குடும்பம், பொருளாதார நிலை:
பொருளாதார ரீதியாக உங்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கூட கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் இனி வரும் காலங்களில் உங்கள் ராசிப்படி மகிழ்ச்சியான சுப காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். இதனால் சுப செலவுகளுக்கு இடம் உண்டு.
கொடுக்கல்-வாங்கல்:
கொடுக்கல்- வாங்கலில் இருந்து வந்த தேக்க நிலை மாறும். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் பல நல்ல முதலீடுகளை செய்து லாபம் பார்ப்பார்கள். வராது என்று நினைத்த பணம் கூட வசூல் ஆகும். தக்க சமயத்தில் சில நல்ல உள்ளங்களிடம் இருந்து உங்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெறும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குப் பழைய கடன் கூட அடைபட இடம் உண்டு. வெளி வட்டாரத்தில் உங்களது மதிப்பு மரியாதை உயரும்.
தொழில், வியாபாரம்
தொழில் அல்லது வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலர் தொழிலை நல்ல விதத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். புதிய கிளைகளை சிலர் திறப்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை ஆட்கள் அமைவார்கள். அதன் மூலமும் பல நல்ல பலன்கள் ஏற்பட இடம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய யுத்திகளை புகுத்தி லாபம் பார்ப்பீர்கள். மொத்தத்தில் அனைத்து விதங்களிலும் நல்ல பலன்கள் ஏற்படும்.
உத்யோகம்:
இதுவரையில் நீங்கள் எதிர்பார்த்து வந்து சேராத சலுகைகள் இனி வரும் நாட்களில் வந்து சேரும். சிலருக்கு நல்ல உத்யோகம் கூட கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பாராத சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க இடம் உண்டு. நிலுவைத் தொகைகள் வசூல் ஆகும். சக ஊழியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிரயாணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் கூட இறுதியில் அனுகூலமான பலன்களுக்கும் இடமுண்டு.
அரசியல்
உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறும். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலை விலகும். சமுதாயத்தில் உங்களது பெயர், புகழ் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல மாற்றங்கள் எல்லாம் இப்போது நடந்தேறும். உங்கள் கனவுகள் நிஜம் பெறும் காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்ப்புகள் விலகி ஏற்றம் பெறுவீர்கள்.
விவசாயிகள்
விளைச்சல் சிறப்பாக இருக்கும். அதன் மூலமாக நல்ல லாபத்தையும் நீங்கள் பெறுவீர்கள். கூலி ஆட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். அதிகப்படியான பண வரவால் விளை நிலங்களை வாங்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எல்லாம் கிடைக்கப்பெறும். விவசாய நிலங்கள் தொடர்பாக இருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அதில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கூட வர இடம் உண்டு. மொத்தத்தில் பெரும்பாலும் உங்களுக்கும் கூட நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
கலைஞர்கள்
உங்கள் தகுதிக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். கடந்த காலங்களில் உங்களுக்கு ஏற்பட்டு இருந்த கவலைகள் எல்லாம் மறையும். உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தரும்படியான கதா பாத்திரங்களில் நடித்து பெயரும், புகழும் அடைவீர்கள். புதிய பல நல்ல ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடிய யோகம் கிடைக்கப்பெறும். வெளியூர் பயணங்களால் கூட சிலருக்கு நன்மைகள் உண்டு.
பெண்கள்
பொருளாதார ரீதியாக சிறப்பான நிலை ஏற்படும். ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகி ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும் அல்லது படிப்படியாகக் குறையும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக நடந்தேறும். அந்த வகையில் சிலருக்கு சுப செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. திருமணம் ஆகி இது நாள் வரையில் குழந்தை இல்லாத சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பணி புரியும் பெண்கள் உயர் பதவிகளை அடைவீர்கள்.
மாணவச் செல்வங்கள்
உடல் சோர்வுகள் விலகி படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். இதுவரையில் புரியாத பாடங்கள் கூட புரியும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று நல்ல பெயரை எடுப்பீர்கள். ஒரு சிலர் வெளிநாட்டிற்கு சென்று கூட மேற்படிப்பை தொடருவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கூட மன மகிழ்ச்சியை தரும்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் இந்தக் காலத்தில் நல்ல படியாக நடந்தேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் மறையும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பழைய கடன்கள் சிலருக்கு அடைபடும். புதிய சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு ஏற்படும். லாபகரமான தொழிலை செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கூட கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து பணியில் நிம்மதி நிலை ஏற்படும். அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். கடினமான வேலைகளைக் கூட மிகவும் சிறப்பாக செய்து நல்ல பெயரை எடுப்பீர்கள். மாணவர்கள் திறம்பட செயல்படுவீர்கள். சிலர் நல்ல வேலைக்கு மாறுவீர்கள். சிலர் வேலையை விட்டு புதிய தொழிலை சொந்தமாகத் தொடங்குவீர்கள். இப்படியாக இந்தக் கால கட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் நல்ல பலன்கள் எல்லாம் ஏற்படும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பணவரவு சிறப்பாக இருக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைபட்ட சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாக கைகூடி நன்மை தரும். வீண் மருத்துவ செலவுகள் குறையும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் பெரும்பாலும் நன்மை தரும். வீடு, வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். இதனால் சுப விரயங்கள் ஏற்படும். தொழிலை சிலர் நல்ல முறையில் அபிவிருத்தி செய்வீர்கள். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் திறமையான வேலை ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கப்பெறும். உத்யோக ரீதியாக சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல பலன்களே ஏற்படும்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் நீங்கள் எதிலும் சிக்கனத்துடன் இருந்து கொள்வது நல்லது. பொருளாதாரம் ஓரளவே நன்மை தரும். எனினும் உங்களது தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தி ஆகும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக எதிர்பார்க்கும் லாபத்தை பெறுவீர்கள். வேலை ஆட்களை முடிந்தவரையில் அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூட மேலதிகாரிகளை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். திடீர் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் அலைச்சல் ஏற்படலாம்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் அலைச்சல் இருந்தாலும் கூட உங்களது முயற்சி வீண் போகாது. எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு பலவேறு வளமான பலன்களை அடைவீர்கள். உங்கள் முயற்சிக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதாக காப்பாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் சிலருக்கு அனுகூலத்தை தரும். வியாபாரம் அல்லது தொழில் நல்ல விதத்தில் நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பதவி உதவிகள் கூட நல்ல படியாகக் கிடைக்கப்பெறும். அதே சமயத்தில் சிலருக்கு வீடு வாகனம் சம்மந்தமாக செலவுகள் ஏற்படலாம். சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமாக கடன்கள் ஏற்பட இடமுண்டு. திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்கு நன்மை தரும். திருமணம் ஆகி வெகு காலமாக குழந்தை இல்லாத அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். மொத்தத்தில் பெரும்பாலும் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்த கால கட்டத்தில் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றத்தை நீங்கள் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலைகள் படிப்படியாக குணம் ஆகும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் நன்மை தரும். பொருளாதார நிலை திருப்தி தரும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து கூட தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கப்பெறும். திருமணம் போன்ற சுப காரிய விசேஷங்கள் நன்மையை தரும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் கூட மீண்டும் குடும்பத்துடன் வந்து இணைவார்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் உன்னதமான நிலையை அடைவீர்கள். உத்யோகத்தில் கூட மேலதிகாரிகள் நல்ல விதத்தில் உதவுவார்கள். உத்யோக ரீதியாக சிலருக்கு எதிர்பாராத நன்மைகள் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிலருக்கு நல்ல திருப்பம் ஏற்படும். பெரும்பாலும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றம் மிகுந்த பலன்களே ஏற்படும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தேறும். திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு. கணவன்- மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் கூட நல்ல திருப்பு முனைகள் எல்லாம் ஏற்படும். போட்ட முதலீட்டை விட பெரிய அளவில் லாபம் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு உடன் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். சிலர் ஆடம்பரமான பொருள்களை வாங்குவீர்கள். அந்த வகையில் சுப விரயங்கள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு புதிய வீடு, வாகனம் கூட வாங்கும் யோகம் கிடைக்கப்பெறும்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் நீங்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் வந்து போக இடம் உண்டு. கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களை ஏமாற்றலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். பிறருக்கு வாக்கு கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. மற்றபடி, தொழில் அல்லது வியாபாரத்தில் அலைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். லாபங்களை எடுக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். 'வேலையை விட்டு விடலாமா?!..' என்று யோசிக்கும் படியான சூழல் எல்லாம் உருவாகும். எனினும், வேலையை விட இது உகந்த நேரம் இல்லை. மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி வரலாம். பேச்சில் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். பெண்கள் அந்நிய நபர்களிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வெளிவட்டார பழக்கவழக்கங்கள் கூட அந்த அளவிற்கு நன்மை தராமல் போகலாம். மொத்தத்தில் எதிலும் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில், இயல்பாகவே உங்களுக்கு இருக்கும் அடிப்படை பண்புகள் உங்களை வெற்றிப் படிக்கட்டில் நிறுத்தும். அலைச்சல் இருந்தாலுமே கூட அதற்கு உரிய இறுதிப் பலன் இல்லாமல் இருக்காது. பண வரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளும் அளவிற்கு பல விஷயங்களை சாதித்து காட்டுவீர்கள். எதிர்ப்புகள் அநேகம் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். அவ்வப்போது பயம், தயக்கம், மனப்போராட்டம் தவிர்க்க இயலாது தான். இந்நிலையில் குலதெய்வ வழிபாடு நன்மை தரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். யாரிடமும் அதிகம் அன்பு காட்ட வேண்டாம். முடிந்த வரையில் பிறரை நம்பாதீர்கள். இல்லையென்றால் பெரிய ஏமாற்றத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வாருங்கள். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதன் மூலமாக சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு ஆக்கபூர்வமான கடன்கள் ஏற்படும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலுமே கூட எதிர்பார்த்த உதவிகள் கூட கிடைக்கப்பெறும். மற்றபடி அனைத்துத் தரப்பினருக்குமே இக்கால கட்டத்தில் சுமாரான பலன்களே ஏற்படும்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டம் வாழ்வில் கண்டிப்பாக ஒரு படி உயரும் காலமாக இருக்கும். வாழ்க்கையில், உண்மையான நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதை சனி பகவான் தோல் உரித்துக் காட்டுவார். பல சமயங்களில் கெட்ட சொப்பனங்கள் தோன்றி உங்களை பயமுறுத்தும். வருவாயை பொறுத்தவரையில் செலவுகளை சமாளித்து நடத்துவீர்கள். சென்ற இடங்களில் எல்லாம் உங்களுக்கு வரவேற்பும், மதிப்பும் கிடைக்கப்பெறும். உறவினர்களுடன் நல்ல போக்கை கடைபிடிக்க சிரமப் பட வேண்டி இருக்கும். சிலருக்கு கடன்கள் குறையும் அல்லது அடைபடும் வாய்ப்பும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சில சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். திடீர் செலவுகள் அவ்வப்போது சேமிப்பை கரைத்தாலுமே கூட எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருந்தாலுமே கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலுமே கூட, அது பிற்காலத்தில் உங்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டை பெற்றுத் தரும். அதே சமயத்தில், உத்யோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் சற்று தாமதம் ஆகி அதன் பின்னர் நடந்தேறலாம். பெண்கள் பிரயாணம் செய்யும் சமயத்தில் நகை போன்ற உங்கள் உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
5, 14, 23
ராசியான நிறம்
பச்சை
ராசியான கிழமை
புதன், வெள்ளி
ராசியான கல்
மரகதப் பச்சை
ராசியான திசை
வடக்கு
ராசியான தெய்வம்
மகா விஷ்ணு
சனி பெயர்ச்சி பலன்கள் - கடகம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
கடகம்
(புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசி அன்பர்களே, திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 17.1.2023 முதல் 29.3.2025 வரையிலும் (வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 29.3.2023 முதல் 6.3.2026 வரையிலும்) சனி பகவான் உங்களது ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். அதாவது இக்கால கட்டங்களில் உங்களுக்கு அஷ்டம சனி ஆரம்பம் ஆகி நடந்து கொண்டு இருக்கும். அதனால் எதிலும் நீங்கள் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தசா புத்தி மோசமாக இருக்கும் கடக ராசி அன்பர்களுக்கு அறுவை சிகிச்சைகள் கூட நடக்க இடம் உண்டு. ரத்த சொந்தங்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் மிகவும் நிதானத்துடன் சென்று வாருங்கள். சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசி பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ள நேரிடலாம். எந்த ஒரு விஷயமும் உடனே முடிந்து விட வாய்ப்பு இல்லை. அதிக அலைச்சல் தரும். சிலருக்கு அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. பிரயாணங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருந்து கொள்ளுங்கள். கணவன்- மனைவி இடையே நிறைய வாக்கு வாதங்கள் வந்து போகலாம். முடிந்த வரையில் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிருங்கள். புதிய வேலை தொடங்குவதற்கு இது ஏற்ற நேரம் இல்லை. தொழில் அல்லது வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் நிலவும். அதனால் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய அதிகம் போராட வேண்டி இருக்கும். உடல் உபாதைகள் காரணமாக மருத்துவ செலவுகள் அவ்வப்போது உங்களை திக்குமுக்காட வைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம். குரு பகவான் 22.4.2023 வரையில் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் ஒரு சில நன்மைகளை நீங்கள் அடைவீர்கள். 1.5.2024 முதல் 14.5.2025 வரையில் குரு பகவான் மீண்டும் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் வருவார். மேற்படி இந்தக் கால கட்டங்களில் பல கடக ராசி அன்பர்களுக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் மகிழ்ச்சி தரும். 30.10.23 முதல் 18.5.25 வரையிலான கால கட்டத்தில் கேதுவின் சஞ்சாரம் உங்களுக்கு மன தைரியத்தை தரும் விதத்தில் உள்ளதால் எதையும் சமாளித்து விடலாம் என்ற தைரியம் அதிகரிக்கும். இப்படியாக மேற்படி காலங்கள் உங்களுக்கு காணப்படுகிறது.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டிய கால கட்டம் இது. நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூட கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு திடீர் பயணங்கள் அலைச்சலை தரலாம். அவ்வப்போது சோர்வு உற்சாகமின்மை வந்து போகலாம்.
குடும்பம், பொருளாதார நிலை:
கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் மனக் கசப்புகள் தவிர்க்க முடியாது தான். வயதானவர்களின் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. வரவும், செலவும் ஏற்ற இறக்கமாகவே காணப்படும். சில நேரங்களில் மறைமுகத் தொல்லைகள் நிழல் போல் தொடர்ந்து வரும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் நெருங்கிய உறவினர் கூட ஏதாவது ஒரு காரணத்தால் கலகம் செய்ய இடம் உண்டு. பொறுமையுடன் இருந்து சாதிக்க வேண்டிய கால கட்டம் இது. பிள்ளைகளின் வழியில் கூட சிலருக்கு கவலைகள் ஏற்பட இடம் உண்டு. பூர்வீக சொத்து விஷயங்களில் அதிக நிதானம் தேவை.
கொடுக்கல்-வாங்கல்:
கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் நியாயப்படியே நடந்து கொண்டாலும் உங்களுக்கு வர இருக்கும் பண வரவுகள் தாமதம் ஆகலாம். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்கிற நிலை காணப்படும். முடிந்த வரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். பிறரை நம்பி எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். பெரிய முதலீடுகளை ஒரு முறைக்குப் பல முறை நன்கு யோசித்துச் செய்யுங்கள். தேவை இல்லாத வம்பு வழக்குகள் காரணமாக சிலருக்கு வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
தொழில், வியாபாரம்
தொழில் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல வேலை ஆட்கள் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்ல சம்பளம் கொடுத்தாலுமே ஆட்கள் வர மறுக்கலாம். அனைத்தையும் நீங்களே பார்த்து செய்யும் படியான நிலை காணப்படும். சற்று அசதி கொண்டாலும் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட இடம் உண்டு. போட்ட முதலீட்டை எடுக்கப் போராட வேண்டி இருக்கும். ஒவ்வொரு நாளும் போர்க்களமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்கள் ஓய்வு நேரத்தில் கூட உழைக்க வேண்டி இருக்கும். சனி பகவான் உங்களை ஓட வைப்பார். அதனால் நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை காணப்படும். இதுவும் கடந்து போகும் என்று உங்களது மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.
உத்யோகம்:
உடன் இருப்பவர்களே பொறாமை கொண்டு உங்களை மேலதிகாரிகளிடம் மாட்டி விடும் காலம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதற்கு வேலை மாறுவது தீர்வு ஆகாது. ஏனெனில் அஷ்டம சனி முடியும் வரையில் நீங்கள் எங்கு சென்றாலுமே ஒரு வில்லன் இருக்கத் தான் செய்வான். நேற்று சிரித்து பேசியவர்கள் கூட இன்று உங்களிடம் காரணமே இல்லாமல் வெறுப்பை உமிழ்வார்கள். இந்த சமயத்தில் வரும் இடமாற்றம் கூட உங்களுக்கு சங்கடத்தை தான் தரும். அத்துடன் தவறே செய்யாமல் குற்றம் சுமத்தப்படலாம். அலுவலக ரகசியங்கள், கோப்புகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தை கடைப்பிடித்து முன்னேறப் பாருங்கள். பொறுமை அதிகம் தேவைப்படும் கால கட்டம் இது.
அரசியல்
பல புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். சில எதிர்ப்புகளை வாழ்வில் சமாளிக்க வேண்டிய நிலையை தரும். பெரிய மனிதர்களின் நட்பு இருந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லாத நிலை தான் இருந்து வரும். அலைச்சல் அதிகமாக இருக்கும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து தான் நீங்கள் வெற்றி பெற வேண்டி இருக்கும். சில நல்ல சந்திப்புகள் தள்ளிக் கொண்டே போகலாம். இதனால் உங்களுக்கு சில மன உளைச்சல் ஏற்பட இடமுண்டு. சுருங்க சொல்ல வேண்டும் எனில், எதிர்பார்த்த வெற்றியை அடைய நீங்கள் அதிகம் பொறுமை காக்கவேண்டிய காலம் இது. மக்கள் மத்தியில் நீங்கள் என்ன நல்லது செய்தாலுமே எதிர்மறையாக விமர்சிக்கப்படலாம்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் நன்றாக இருந்தாலுமே பராமரிப்பு செலவுகள் அதிகரித்தே காணப்படும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் குறையலாம். அரசு உதவிகள் தாமதப்படும். பங்காளிகளுடன் வீண் பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. விவசாயப் பணிகளுக்கு குறித்த நேரத்தில் வேலை ஆட்கள் கிடைக்காமல் போகலாம். எதிலும் பொறுமை நிதானத்தை கடைபிடிக்க வேண்டி வரும்.
பெண்கள்
உங்களது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் நல்லதாகவே பேசினாலும் மற்றவர்கள் அதனைத் தவறாகப் புரிந்து கொள்ளலாம். சிலருக்கு வயிறு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. முடிந்த வரையில் இயற்கை உணவுகளை உட்கொள்ளப் பாருங்கள். மற்றவர்கள் விஷயத்தில் தலை இடாமல் இருந்து கொள்ளுங்கள். திருமண விஷயங்களில் நன்கு ஆலோசித்து முடிவு செய்யுங்கள். முடிந்த வரையில் பிறருக்கு ஜாமீன், பண உதவிகள் செய்வதை தவிர்க்கவும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் போராட வேண்டி இருக்கும். நீங்கள் கடினமாக உழைத்தாலுமே அதற்கான ஊதியத்தை அடைவதில் பல விதமான இடையூறுகள் ஏற்பட இடம் உண்டு. திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட இடம் உண்டு. வீண் செலவுகள் பல வகையில் ஏற்படும். தொழில் போட்டி காரணமாக சில சமயங்களில் தேவை இல்லாத இடையூறுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். உடல் நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய ஒப்பந்தங்கள் போடும் சமயத்தில் சரத்துக்களை படித்துப் பார்த்துப் போடுங்கள்.
மாணவச் செல்வங்கள்
நீங்கள் நன்றாகவே படித்தாலும் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க அதிகாலையில் சூரிய நமஸ்காரம், யோகா போன்றவற்றை செய்யப் பாருங்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் வித்தைகள் செய்யாமல் இருங்கள். பிரயாணங்களில் பெரிய விபத்துக்களை தவிர்க்க போக்குவரத்து விதிகளை மதியுங்கள். வீண் சகவாசத்தால் பேர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை காணப்படும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்குப் பல முறை சென்று முடிக்கும் படியாக இருக்கும். வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக நிதானம் தேவை. சிலருக்கு தேவை இல்லாத விபத்துக்கள் ஏற்பட இடம் உண்டு. செலவுகள் அதிகரித்துக் காணப்பட்டாலும் கூட பொருளாதார நிலை ஓரளவே உங்களுக்கு நன்மை தரும். சுப காரியங்கள் அலைச்சலை தரலாம். திடீர் செலவுகளால் கை இருப்பு குறையலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்துக் காணப்படும். அரசு ஆதரவு ஓரளவே உங்களுக்கு நன்மை தரும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் ஏற்பட இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். திடீர், திடீர் என்று வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் ஏற்பட்டு உங்களை சற்றே கலங்க வைக்கலாம்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எந்த ஒரு காரியத்தையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்யுங்கள். எடுக்கும் முயற்சிகள் கடுமையான அலைச்சலை தரும். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர் நீச்சல் போட்டு தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். பொருளாதார நிலை கூட சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். அரசு வகையில் கூட சிலருக்கு அதிகப்படியான கெடுபிடிகள் ஏற்படலாம். அதனால், அரசு வகையில் செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை கவனமாக செலுத்தி விடுங்கள். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும் கால கட்டம். வீட்டில் திருடு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் வழியில் கூட நிறைய செலவுகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் கூட நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் அதிகரித்துக் காணப்படும். உத்யோகஸ்தர்கள் ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டி இருக்கும். முடிந்த வரையில் உங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்தப் பாருங்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
செலவுகள் அதிகரித்தாலும் கூட ஓரளவு சமாளித்து விடுவீர்கள். திடீர் என்று எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். அது உங்களுக்கு ஆறுதல் தரும். மருத்துவ செலவுகள் சிலருக்கு குறையலாம். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்களுடைய தேவைகள் ஓரளவே பூர்த்தியாகும். நெருங்கியவர்களின் உதவியால் ஒரு சில ஆதாயங்கள் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகி ஓரளவு லாபங்கள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நல்ல திருப்பங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கூட கிடைக்கப்பெறும். சிலரை உங்களது மேலதிகாரி புரிந்து கொள்வார். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கூட கிடைக்கப்பெறும். கடினமான பணிகளைக் கூட விரைந்து முடிப்பீர்கள். சிலருக்கு வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். மொத்தத்தில், ஓரளவு ஆறுதலான பலன்கள் கிடைக்கப்பெறும்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. உங்களது தேக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பிரயாணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். சிலருக்கு பங்காளிகளுடன் திடீர் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். பொறுமையாக இருந்து கொள்ளுங்கள். பெரும் மருத்துவ செலவுகள் ஏற்படும் காலம். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானத்தை மேற்கொள்ளுங்கள். கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர் நீச்சல் போட்டுத் தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். வேலை ஆட்கள் ஒத்துழைப்பு ஓரளவே உங்களுக்கு ஆறுதல் தரும். உத்யோகத்தில் முடிந்த வரையில் பணிகளை விரைந்து முடிக்கப் பாருங்கள். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். உடன் வேலை செய்பவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும். முடிந்த வரையில் எங்கும், எதிலும் பொறுமையை கடைபிடித்து முன்னேறப்பாருங்கள்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எந்த ஒரு செயலை செய்தாலும் உங்களுக்குப் பிடித்த இறைவனை மனதார வணங்கி விட்டுச் செய்யுங்கள். அப்போது தான் செய்யும் காரியங்களில் தடை, தாமதம், சிக்கல் போன்றவை ஏற்படாது. மனதில் பட்டதை எல்லாம் உடனே செய்து விடாமல். பெரிய, பெரிய விஷயங்களில் பொறுமையுடன் சிந்தித்து முடிவு செய்யுங்கள். நீங்கள் அதிகம் தனிமைப் படுத்தப்படலாம். நீங்கள் என்ன செய்தாலுமே அதில் எதிர்மறை விமர்சனங்கள் அதிகம் ஏற்பட இடம் உண்டு. வீட்டில் திருட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நெருப்பு, இயந்திரம், ஆயுதம், மின்சாரம் இவற்றை கவனமுடன் கையாளுங்கள். வீடு, வாகனம் தொடர்பாக நிறைய வீண் செலவுகள் ஏற்படும் கால கட்டம் இது. தொழில், வியாபாரத்தில் கூட வேலை ஆட்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தே காணப்படும். எனினும், மேலதிகாரி உங்களை நாளடைவில் புரிந்து கொள்வார். நிறைய வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனால் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுடனான பேச்சை குறைத்துக் கொள்ளப் பாருங்கள்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
தேவை இல்லாத அலைச்சல்கள் நிறைய ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய வேலைகளில் கூட தடைகள் அல்லது தாமதம் ஏற்பட இடம் உண்டு. பிரயாணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். அதிக அலைச்சல் காணப்படும் காலம். எனினும் ராசிக்கு 3 இல் கேது சஞ்சரிப்பதால் ஓரளவு மன தைரியம் ஏற்பட இடம் உண்டு. பணத்தேவைகள் அதிகரித்துக் காணப்படும். திடீர் செலவுகள் உங்களை திக்கு முக்காட வைக்கலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் சிலருக்கு தாமதம் ஆகலாம். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலை தந்தாலும் கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாகக் கைகூடும். முடிந்த வரையில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் மனக்கவலைகள் வரலாம். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரித்து காணப்பட்டாலும் சக ஊழியர்கள் ஓரளவு ஆறுதல் தருவார்கள். அதிகம் உணர்ச்சி வசப்படாமல் இருந்து கொள்ளுங்கள். கோபத்தை குறைத்து எதிலும் நீங்கள் நிதானமாக செயல்படுங்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் பெரும்பாலான நெருக்கடிகள் குறையும். சிலருக்கு வீடு, வாகனம் சம்மந்தமாக சுப செலவுகள் அதிகரிக்க இடம் உண்டு. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். இதனால் செலவுகளை சமாளித்து நடத்துவீர்கள். பெரும்பாலும் உங்களது அனைத்து தேவைகளுமே பூர்த்தி ஆகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தருவதற்கான வாய்ப்பும் உண்டு. சிலர் அசையும்- அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கூட ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் ஓரளவு ஏற்றமான பலன்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் இருந்தாலுமே கூட சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தாமதம் ஆகி அதன் பின்னர் கிடைக்கப்பெறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. வெளிவட்டாரத்தில் நல்ல பெயரை வாங்குவீர்கள். சிலருக்கு நல்ல வாய்ப்புகள் கூட தேடி வரும். மொத்தத்தில் நன்மைகளை அடையும் கால கட்டம் தான். எப்படிப்பட்ட சோதனைகளையும் இறுதியில் சாதனையாக மாற்றுவீர்கள்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்களுடைய முன்கோபத்தை குறைத்து எதிலும் பொறுமையை கடைபிடியுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் கை இருப்பை கரைக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கூட அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பயணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடுவது பிறருக்கு அறிவுரை கூறுவது போன்றவற்றை குறைத்துக் கொள்ளப்பாருங்கள். பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலுமே இறுதியில் சமாளித்து விடுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் போராடி லாபத்தை பெறுவீர்கள். முடிந்த வரையில் நல்ல வேலை ஆட்கள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்பட்டாலுமே இறுதியில் அதற்கான நல்ல பலன் உங்களை வந்து சேரும். அதனால் கவலை வேண்டாம். மொத்தத்தில், சுமாரான கால கட்டம் தான். எதிலும் எதிர்நீச்சல் போட்டு நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில், 'உடன் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!' என்கிற ஆதங்கம் இருக்கும். எனினும் முடிந்த வரையில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லப் பாருங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளப் பாருங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக நிதானத்தை கடைபிடிக்கப்பாருங்கள். சுப காரியங்கள் தாமதம் ஆனாலும் கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். பொருளாதார ரீதியாக சில ஏற்றத் தாழ்வுகள் இருந்து வரும். எனினும் நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். அவ்வப்போது கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டே நீங்கள் முன்னேறும்படியாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேர இடம் உண்டு. சிலர் நல்ல வேலைக்கு மாறுவார்கள். மொத்தத்தில் நன்மை, தீமை கலந்து நடக்கும் கால கட்டம் இது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
1,2,3,9,10,11,12,18
ராசியான நிறம்
வெள்ளை, சிவப்பு
ராசியான கிழமை
திங்கள், வியாழன்
ராசியான கல்
முத்து
ராசியான திசை
வடகிழக்கு
ராசியான தெய்வம்
வெங்கடாசலபதி
சனி பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
சிம்மம்
(மகம், பூரம், உத்தரம் 1 ஆம் பாதம்)
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர்களே திருக்கணிதப்படி வரும் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (அதாவது வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) உங்களது ஜென்ம ராசிக்கு 7 ஆம் இடத்தில் சனி பகவான் வர இருக்கிறார். இதனால் இனி வரும் காலங்களில் நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பயணங்களை திட்டமிட்டு செய்யுங்கள். உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக திருட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நெருங்கியவர்களுடன் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு எல்லாம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் அவிப்பிராய பேதங்கள் ஏற்பட இடம் உண்டு. வெகு நாள் பழகிய நண்பர்களுடன் கூட மனத்தாங்கல் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். வீடு, வாகனம் தொடர்பாக செலவுகள் ஏற்பட இடம் உண்டு. நெருங்கிய ரத்த பந்தங்களை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டே முன்னுக்கு வரும் படியாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் கூட கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் வேலை பளு அதிகம் இருக்கும் தான். எனினும் சமாளித்து விடுவீர்கள். முடிந்த வரையில் உடன் வேலை செய்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லப் பாருங்கள்.
எனினும், சனி பகவான் 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலத்தில் 22.4.2023 முதல் 1.5.2024 வரையில் குரு பகவான் 9 ஆம் இடம் என்று சொல்லப்படும் பாக்கிஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது அபரிவிதமான நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கூட இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு நன்மை தரும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். 30.10.2023 வரையில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3 இல் இருப்பது மன தைரியத்தை அதிகரிக்க உதவும். ராகு 9 இல் இருப்பதால் தந்தை உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். 30.10.2023 முதல் 18.5.2025 வரையில் 2 இல் கேது 8 ஆம் இடத்தில் ராகு சஞ்சரிக்க உள்ளதால் பேச்சில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். பயணங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி, வாகனங்களை ஓட்டும் போது கூட அதிக எச்சரிக்கை தேவை.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போக இடம் உண்டு. அலைச்சல் காரணமாக பல விதங்களில் இடையூறுகள், சோர்வு ஏற்படும். முடிந்த வரையில் தேவை இல்லாத அலைச்சல் அல்லது பயணங்களை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். நெருங்கியவர்கள் செயலால் உங்களது மனம் பாதிக்கப்பட்டு அதன் மூலமாகவும் வீண் மருத்துவ செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
குடும்பம், பொருளாதார நிலை:
பொருளாதார ரீதியாக ஏற்றத் தாழ்வுகள் அதிகம் காணப்படும். எனினும், பணத்தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். சிலருக்கு வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் ஏற்பட்டு அதன் மூலமாக நல்ல கடன் ஏற்பட இடம் உண்டு. சிலர் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அதன் மூலமாக சில சுப விரயங்களுக்கு இடம் உண்டு. கணவன்-மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். உற்றார், உறவினர்களுடன் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது.
கொடுக்கல்-வாங்கல்:
பணப்பரிமாற்ற விஷயங்கள் பெரும்பாலும் நல்ல படியாக நடந்தேறும். முடிந்த வரையில் யாருக்கும் பணம் கடனாகக் கொடுக்காதீர்கள். அதிக முதலீடுகளை மேற்கொள்ளும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் சமயத்தில் அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். அவ்வப்போது வீண் செலவுகளும், திடீர் விரயங்களும் தவிர்க்க முடியாது தான்.
தொழில், வியாபாரம்
தொழில் அல்லது வியாபாரத்தில் உங்களது செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். நேர்முக, மறைமுகப் போட்டிகளை மிகவும் திறமையுடன் சமாளிப்பீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக சில ஆதாயங்கள் ஏற்படும். சில சமயங்களில் வேலை ஆட்களுடன் வீண் விவாதங்கள் வந்து போக இடம் உண்டு. சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து முற்றிலும் விலக நேரிடலாம்.
உத்யோகம்:
வேலை பளு சற்று அதிகமாகத் தான் காணப்படும். உடன் வேலை செய்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். எடுத்த பணியை போராடி முடிப்பீர்கள். உடல் ரீதியாக அடிக்கடி சோர்வு அசதி தென்படும். அதிகாரிகள் அவ்வப்போது அனுசரணையாக இருப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்க சற்று தாமதம் ஆகலாம்.
அரசியல்
மக்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு நன்மை தரும். எனினும், செலவுகளை முறைப்படுத்தி திட்டமிட்டு செய்யுங்கள். சில சமயங்களில் கட்சிப் பணிக்காக உங்கள் சொந்தக் காசை போட வேண்டி வரும். உடன் இருப்பவர்களை மட்டும் உணர்ச்சி வசப்பட்டு கோபத்தில் பேசி விடாதீர்கள். அது பிற்காலத்தில் உங்களுக்கு சங்கடத்தை தந்து விடும். சில சமயங்கள் திடீர் பிரயாணங்கள் அலைச்சலையும், சோர்வையும் தரலாம்.
விவசாயிகள்
விவசாயம் சிறக்க சற்று கூடுதலாக உழைக்க வேண்டி வரலாம். எனினும், உங்களது உழைப்பு இறுதியில் வீண் போகாது. அரசு உதவிகள் சீக்கிரம் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்து கொள்வது கூட நல்லது. மற்றபடி, பணவரவு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட பொருளாதார நிலையை போராடிச் சமாளித்து விடுவீர்கள்.
பெண்கள்
குடும்ப உறுப்பினர்களிடம் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. எனினும், சுய தொழில் செய்யும் பெண்களுக்கு சில நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் கூடுதலாக உழைக்க வேண்டி வரலாம். சில பெண்கள், 'வேலையை விட்டு விடலாமா?!..' என்று கூட நினைக்கலாம். எனினும் அது போன்ற தவறான முடிவுகளை இந்தச் சமயத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது. பொருளாதாரம் ஏற்ற - இறக்கமாகவே இருந்தாலும் கூட, எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். அதன் மூலம் தேவைகளை ஓரளவு சமாளிப்பீர்கள். பெற்றோர் வீட்டில் இருந்து கூட சிலருக்கு உதவிகள் கிடைக்கப்பெறலாம். சிலருக்குச் சகோதர வகையில் கூட நன்மை உண்டு. எனினும், சில பெண்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். இன்னும் சில பெண்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களைப் பெற சில தடைகள் ஏற்படலாம். எனினும், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கிடைக்கும் சிறு, சிறு வாய்ப்புகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சமயத்தில், ஒப்பந்தங்களை நன்கு படித்துப் பார்த்து கையெழுத்திடவும். போதுமான வருமானத்தை போராடிப் பெற்று விடுவீர்கள். எனினும், செலவுகள் துரத்தும். சிலருக்குப் புதிய கடன்கள் கூட உண்டாகலாம். அதனால், செலவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும்.
மாணவச் செல்வங்கள்
மாணவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்திலும் கூட அதிக கவனம் தேவை. எனினும், முயற்சி செய்து படித்தால் நல்ல மதிப்பெண்ணைப் பெறலாம். விளையாட்டுப் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும். எனினும், சில மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் பெறவும் வாய்ப்பு உண்டு. தேவைற்ற பழக்க வழக்கங்களையும், தவறான நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூர் சென்று படிக்க நேரிடலாம்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உடல் ஆரோக்கியம் சம்மந்தமாக சின்னச், சின்ன மருத்துவ செலவுகள் வந்து போகலாம். பேச்சை மூலதனமாகக் கொண்டு பிழைக்கும் மேடைப் பேச்சாளர்கள், ஆசிரியர்கள், தரகர்கள், மார்க்கெட்டிங் தொழில் செய்பவர்கள் ஆகியோர்களுக்கு ஒரு சில நன்மைகள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்குத் தாயாருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் குறையும். தாயாரின் உடல் நிலை படிப்படியாக முன்னேற்றம் அடையும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூட கிடைக்க இடம் உண்டு. இன்னும் சிலர் இருக்கின்ற வீட்டை நன்றாகக் கட்டி அமைப்பார்கள். வீடு, வாகனம் தொடர்பாக உங்களது பல நாள் கனவு கூட நல்ல படியாக நிறைவேறும். சிலருக்கு வீடு, வாகனம் தொடர்பாகப் புதிய கடன்கள் கூட ஏற்பட இடம் உண்டு. மற்றபடி, குடும்பத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. எனினும், ஒற்றுமை பெரிய அளவில் பாதிக்க இடம் இல்லை. சிலர் குடும்பத்தை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று பணி புரியும் நிலை கூட ஏற்படலாம். மற்றபடி, பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட, அதனை நீங்கள் ஓரளவு சமாளித்து விடுவீர்கள். உத்யோக ரீதியாக சிலருக்கு சலிப்பு, கவலை ஏற்பட்டு காணப்படும். 'வேலையை விட்டு விடலாமா?!..' என்று கூட சிலர் யோசிக்க இடம் உண்டு. எனினும், நீங்கள் வேலையை விட்டால் இப்போதைக்கு வேறு வேலை தேடுவது கடினமாக இருக்கும். காரணம் நீங்கள் எங்கு சென்றாலும் கிரக சாரத்தால் சில பிரச்சனைகளை சந்தித்தே ஆக வேண்டிய நிலை காணப்படுகிறது. அது மட்டும் அல்லாமல், புதிய வேலை தேடுபவர்கள் கூட இப்போதைக்கு கிடைக்கும் வேலையை பார்த்துக் கொள்வது நல்லது. முடிந்த வரையில் மேலதிகாரிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். உத்யோகத்தில் உங்களை நம்பி கொடுக்கப்பட்ட வேலையை சக ஊழியர்களிடத்தில் தராமல் நீங்களே பொறுப்புடன் அதனைச் செய்து முடிக்கப் பாருங்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கூட இந்தக் கால கட்டத்தில் அதிக போட்டிகளையும், நேர்முக - மறைமுக எதிர்ப்புகளைக் கடந்தும் லாபம் பார்க்க வேண்டி இருக்கும். அதை விட வாடிக்கையாளர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சில வியாபாரிகள் பொருட் தேக்கத்தை சமாளிக்கப் புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டி வரலாம். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக சில தரகர்கள் அதிக கமிஷனுக்கு ஆசைப்பட்டு உங்களைத் தேவை இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய அறிவுரை கூறலாம். அதனால் தரகர்களிடம் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலர் பங்குச் சந்தை, ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட தொகையை இழக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால் மேற்கண்ட விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அரசியல் வாதிகளுக்கு இந்தக் கால கட்டம் மிகவும் சவாலான கால கட்டமாக இருக்கும். மக்கள் இடையே செல்வாக்கு குறைந்து காணப்படலாம். தலைமையுடன் சின்னச், சின்ன கருத்து வேற்றுமைகள் ஏற்பட இடம் உண்டு. விவசாயிகள் கூட எதிர்பார்க்கும் லாபத்தை ஓரளவு போராடியே பெற வேண்டி இருக்கும். கலைஞர்கள் இப்போதைக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிலர், 'கலைத் துறையில் இருந்து விலகி விடலாமா?!..' என்று யோசிக்கவும் இடம் உண்டு. எனினும், இந்த நிலையும் பிற்காலத்தில் நல்ல படியாக மாறும். அதனால் கவலை வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகளுடன் அவ்வப்போது பனிப்போர் வந்து நீங்கும். அதே போல, புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் அதிக கவனத்துடன் இருந்து கொள்ளவும். வெளி இடங்களுக்குச் செல்லும் சமயத்தில் உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் - மனைவி இடையே வரும் கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் சற்று தாமதம் ஆகி நடக்க இடம் உண்டு. மாணவ - மாணவியர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். அதை விட வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்திலும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும் சமயத்திலும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுதல் அவசியம். மற்றபடி, சிலருக்குப் பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன கவலைகள் வந்து போகவும் இடம் உண்டு. இந்த ராசியில் பிறந்த பெற்றோர், பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உணர்ச்சி வசப்படாமல் மிகவும் நிதானத்துடன் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். 22.4.2023 முதல் வாழ்க்கையில் சில நல்ல திருப்பங்கள் ஏற்படும். 7 ஆம் இடத்து சனியின் தாக்கம் குறையும். இதனால் சிலருக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். உடல் ஆரோக்கியம் படிப்படியாகத் தேறும். மருத்துவ செலவுகள் குறையும். மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் எல்லாம் வாழ்க்கையில் நடந்தேறும். வியாபாரத்தில் கூட்டாளிகளை கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். அவ்வாறு அனுசரித்துச் செல்லும் பட்சத்தில் எதிர்பார்த்த நன்மைகளை நீங்கள் பெறலாம். உத்யோகத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறும். முடிந்த வரையில் அதனைப் பயன்படுத்தி நீங்கள் முன்னேறப் பாருங்கள். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பங்காளிகளுடன் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். தேவை இல்லாத வழக்கு அல்லது வியாஜ்யங்களில் ஈடுபட வேண்டாம்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் நெருக்கடிகள் குறைந்து சில ஏற்றமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக சில ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும். இதனால் உங்களது தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாக குணமாகும். சில விஷயங்களில் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு நன்மை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் சிறப்பான பலன்கள் ஏற்படும். சிலருக்கு பழைய கடன் அடைபடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறைந்து ஏற்றம் தரும். விரும்பிய மாற்றங்கள் சிலருக்கு ஏற்படும். மொத்தத்தில் பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை நல்ல விதத்தில் அடைவீர்கள். உடன் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் வந்து போக இடம் உண்டு. செலவுகள் அவ்வப்போது அதிகரித்தாலும் உங்களது பணத் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். உணவு விஷயத்தில் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருங்கள். நெருங்கிய உறவினர்கள் உங்கள் மன அமைதியை கெடுக்கலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் கூட்டாளிகளை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர் பணியில் குறுக்கிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினீர்கள் என்றால் கண்டிப்பாக பணியில் நல்ல மாற்றங்களை காணுவீர்கள். மற்றபடி, உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதம் ஆனாலும் கூட இறுதியில் எல்லாம் கிடைக்கப்பெறும். அதனால் கவலை வேண்டாம்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
குடும்பத்தில் உள்ளவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். நெருங்கியவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்பட இடம் உண்டு. சகோதர வகையில் எதிர்ப்புகள் அதிகரித்துக் காணப்படும். எனினும் பண வரவு உங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தான் இருக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு தடைபட்டு வந்த சுப காரியங்கள் நடந்தேறும் வாய்ப்பு உண்டு. இதனால் சில சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு. உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றம், சலுகைகள் எல்லாம் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலுமே இறுதியில் போராடி சாதிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் இடத்தில் வாக்கு வாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சிலர் கூட்டுத் தொழிலை விட்டு விலக நேரிடலாம். இறுதியில் அனைத்துத் தரப்பினருக்குமே சிறு, சிறு சோதனைகள் ஏற்பட்டாலுமே கூட அதையும் தாண்டி சாதனை படைப்பீர்கள்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் நீங்கள் பொறுமையுடன் இருந்து கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் அதிக ஜாக்கிரதையுடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு இருப்பிட மாற்றமே கூட ஏற்பட இடம் உண்டு. முடிந்த வரையில் சிக்கனமாக இருந்து கொள்ளுங்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். திடீர் செலவுகள் எல்லாம் கூட இந்தக் காலத்தில் ஏற்படும். பிறருக்கு ஓடிச் சென்று உதவுவது. முன் ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை காரணமாக அசதி ஏற்படலாம். உத்யோகஸ்தர்கள் முடிந்த வரையில் உங்கள் பணியில் மட்டும் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பதே நல்லது. சிலருக்கு உதவி செய்து கெட்ட பெயர் ஏற்படவும் இடம் உண்டு. மொத்தத்தில் பொறுமையுடன் இருந்து, கோபத்தை குறைத்து காரியங்களை சாதிக்க வேண்டிய நேரம் இது.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகத் தான் இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்துமே நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை போராடி காப்பீர்கள். எனினும் அவ்வப்போது திடீர் செலவுகளும் உங்களை திக்கு முக்காட வைக்கும் என்பதால் முடிந்த வரையில் சிக்கனமாக செலவு செய்யப் பாருங்கள். வீண் ஆடம்பர செலவுகளை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் ஓரளவு குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு ஆறுதல் தரும். கடந்த கால பிரச்சனைகள் சிலருக்கு குறையும். உத்யோகம் அல்லது வேலை செய்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கணவன்-மனைவி இடையே சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போக இடம் உண்டு. ஆரோக்கிய ரீதியாக சிலருக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் வரலாம். முடிந்த வரையில் வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் சென்று வாருங்கள். மாணவர்கள் வண்டி-வாகனங்களில் செல்லும் சமயத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தேவை இல்லாத வித்தைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஓரளவு ஏற்றங்களை பெறும் வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரித்துக் காணப்பட்டாலும் கூட உங்களது பொருளாதார நிலை நல்ல விதத்தில் மேம்படும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் அவசரம் காட்ட வேண்டாம். தொழில் அல்லது வியாபாரத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் அலைச்சல் இருக்கும் தான். எனினும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் நன்மை தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. குடும்பத்தாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பெண்கள் குறிப்பாக குடும்ப விஷயங்களை அந்நிய நபர்களிடத்தில் பகிர வேண்டாம். அதே போல, இந்தக் கால கட்டத்தில் மட்டும் புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்களிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மொத்தத்தில் சோதனைகளை கடந்து சாதிப்பீர்கள்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் பல விதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் கூட வெற்றிகரமாக அதை எல்லாம் சமாளித்து நீங்கள் ஏற்றம் பெறுவீர்கள். எனினும் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பணப் பரிமாற்ற விஷயங்களில் சொற்ப ஆதாயங்கள் ஏற்பட இடம் உண்டு. செலவுகள் அதிகரித்தாலுமே, தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களால் மன அமைதி குறைய வாய்ப்பு உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதம் ஆகலாம். அதேபோல, தொழில் ரீதியாக நிறைய அலைச்சல் இருக்கும் தான். ஆனாலும் கூட அதை எல்லாம் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். போராடி வெல்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்பட்டு விலகும். பங்காளிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பிள்ளைகள் வழியில் சிறு, சிறு கவலைகள் ஏற்பட இடம் உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு பணிச்சுமை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்கும். சிலர் பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். கோபத்தை குறைத்து உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருக்க வேண்டிய கால கட்டம் இந்தக் கால கட்டம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
1,2,3,9,10,11,12,18
ராசியான நிறம்
வெள்ளை, சிவப்பு
ராசியான கிழமை
ஞாயிறு, திங்கள்
ராசியான கல்
மாணிக்கம்
ராசியான திசை
கிழக்கு
ராசியான தெய்வம்
சிவன்
சனி பெயர்ச்சி பலன்கள் - கன்னி
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
கன்னி
(உத்தரம் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2 ஆம் பாதம்)
புதனின் ஆதிக்கத்தில் பிறந்த கன்னி ராசி அன்பர்களே.. திருக்கணிதப்படி வரும் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (அதாவது வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) சனி பகவான் உங்களது ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். உண்மையில் இது அற்புதமான அமைப்பு என்றே சொல்ல வேண்டும். இதனால் உங்களுக்கு சகல விதங்களிலும் ஏற்றம் மிகுந்த பலன்கள் எல்லாம் ஏற்படும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். இது நாள் வரையில் உடல் ரீதியாக இருந்து வந்த மருத்துவ செலவுகள் இனி வரும் காலங்களில் குறையும். பொருளாதாரம் நல்ல விதத்தில் மேம்படும். பயணங்கள் வெற்றியைத் தரும். பெரும்பாலும் உங்கள் முயற்சி வீண் போகாது. எண்ணியது எண்ணியபடி நடந்தேறும். நல்ல திருப்பங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கக் கூடிய யோகம் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். கணவன்- மனைவி இடையே இது நாள் வரையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகள் வழியில் கூட மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும். சிலருக்குப் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சமூகத்தில் சில பெரிய மனிதர்களின் அறிமுகம் எல்லாம் கிடைக்கப்பெறும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்கள் எல்லாம் ஏற்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணைவார்கள். பொருளாதாரம் சகல விதங்களிலும் மேம்படும். 22.4.2023 வரையில் குரு பகவான் 7 ஆம் வீட்டில் இருப்பது நன்மை தரும். கூடுதல் வெற்றி வாய்ப்பை தரும். அதேபோல, 1.5.24 முதல் 14.5.25 வரையில் குரு பகவான் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சுப காரிய பேச்சு வார்த்தைகளை வெற்றி ஆக்கும். பொருளாதார நிலை மேலும் இதனால் சிறப்பு பெறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும். அதே சமயத்தில் 30.10.2023 வரையில் 2 இல் கேது, 8 இல் ராகு சஞ்சாரம் செய்வதால் உணவு விஷயத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் மித வேகம் மிக நன்று. மொத்தத்தில் சிறு, சிறு விபத்துக்களுக்கு உங்களை அறியாமல் இடம் கொடுத்து விடாதீர்கள். 30.10.2023 முதல் 18.5.2025 வரையில் ஜென்ம ராசியில் கேது 7 ஆம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் நெருங்கியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அதே போல பேச்சில் அதிக நிதானத்தை மேற்கொள்ளுங்கள். எனினும் மேற்படி தவிர, இந்த சனிப் பெயர்ச்சி பலன்கள் உங்களுக்குப் பெருமளவில் நன்மையைத் தான் செய்யும்.
உடல் ஆரோக்கியம்
உங்களது உடல் ஆரோக்கியம் இனி வரும் காலங்களில் சிறப்பாகத் தான் இருக்கும். நெடு நாள் நோயாளிகளுக்குக் கூட மருத்துவ செலவுகள் குறையும். பிரயாணங்களை திட்டமிட்டு செய்து தேவை இல்லாத உடல் சோர்வு மற்றும் அலைச்சலை தவிர்ப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் கூட பெரும்பாலும் நன்மை தரும்.
குடும்பம், பொருளாதார நிலை:
பொருளாதார நிலை திருப்தி தரும் விதத்தில் தான் பெரும்பாலும் இருக்கும். எனினும், அவ்வப்போது திடீர் செலவுகள் வந்து போக இடம் உண்டு. ஆனாலும் அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு பழைய கடன் அடைபடும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவீர்கள். கணவன்- மனைவி இடையே சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் கூட அதனை சமாளித்து விடுவீர்கள். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
கொடுக்கல்-வாங்கல்:
பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். கொடுத்த கடன் சிலருக்கு நல்ல விதங்களில் வசூல் ஆகும். பெரிய முதலீடுகளை நல்ல முறையில் செய்து லாபத்தை ஈட்டுவீர்கள். வழக்குகள் சிலருக்கு சாதகம் ஆகும். வெளி வட்டார பழக்க வழக்கங்கள் பெரும்பாலும் நன்மை தரும். சிலர் பழைய கடனை அடைப்பீர்கள். மொத்தத்தில் கொடுக்கல்-வாங்கல் சம்மந்தமாக நல்ல பலன்களே ஏற்படும்.
தொழில், வியாபாரம்
கடந்த கால மனக்கவலைகள் எல்லாம் விலகி வளமான வாழ்க்கை அமையப்பெறும். தொழில் அல்லது வியாபாரத்தில் நவீன யுத்திகளை புகுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் போட்டிகள் குறையும். வேலை ஆட்கள் சிலருக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவார்கள். புதிய கிளைகளை சிலர் துவங்குவீர்கள். மொத்தத்தில் தொழில் அல்லது வியாபார ரீதியாக நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
உத்யோகம்:
உத்யோக ரீதியாக எதிர்பார்க்கும் நன்மைகள் வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல வேலை கூட கிடைக்கப்பெறும். மேலதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் ஒரு முடிவுக்கு வரும். உடன் இருப்பவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பார்கள். இப்படியாக உத்யோக ரீதியாக பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
அரசியல்
நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கௌரவப் பதவிகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். உங்களுக்கு இது நாள் வரையில் இருந்து வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் உங்களது புகழ், கௌரவம் உயரும். மக்கள் மத்தியில் உங்களுடைய பெயர், புகழ் செல்வாக்கு என எல்லாம் உயரும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். சந்தையில் உங்களது பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கப்பெறும். சிலர் நவீன பொருள்களைக் கொண்டு விவசாயத்தில் புதுமைகளை செய்வீர்கள். மகசூல் அதிகரிக்கும். அரசு வகையில் கூட சிலருக்கு ஆதரவு கிடைக்கப்பெறும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் சிலருக்கு நன்மை உண்டு. பழைய கடன் சிலருக்கு அடைபடும். கடந்த கால வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறும்.
பெண்கள்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் மகிழ்ச்சி தரும். நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வேலை கூட கிடைக்கப்பெறும். அரசு வகையில் கூட சிலருக்கு நன்மைகள் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உத்யோக ரீதியாக நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
கலைஞர்கள்
நீங்கள் வெகு காலமாக காத்திருந்த சிறப்பான வாய்ப்புகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கப்பெறும். உங்களது திறமைகளை திறம்பட வெளிக்காட்டுவீர்கள். கடந்த காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் தற்போது நல்ல விடிவு காலம் பிறக்க இருக்கிறது. போட்டி, பொறாமைகள் விலகும். உங்களது திறமைக்கு தக்க சன்மானம் கிடைக்கப்பெறும். சிலருக்கு விருதுகள் கூட கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் பாக்கியம் கூட கிடைக்கப்பெறும்.
மாணவச் செல்வங்கள்
கல்வியில் சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை வெல்வீர்கள். பெற்றோர், ஆசிரியர் ஆதரவு சிறப்பாக இருக்கும். சிலர் வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்கு கூட சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். மொத்தத்தில் படிப்பில் சாதனைகள் பல புரிவீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் நடந்தேறும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். வழக்குகள் சாதகம் ஆகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்களது பலம் அதிகரிக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் நல்ல முறையில் கிடைக்கப்பெறும். சிலருக்கு விரும்பிய படி இடமாற்றங்கள் எல்லாம் கூட ஏற்படும். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் எல்லாம் ஏற்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நவீனகரமான பொருள்களை வாங்குவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்து நல்ல லாபத்தை காணுவீர்கள். புதிய முதலீடுகளை செய்வீர்கள். அதன் மூலமும் சிலருக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் ஏற்படும். சிலர் திறமையான வேலை ஆட்களை பணியில் அமர்த்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பயணங்களில் அதிக நிதானத்தை கடைபிடியுங்கள். மற்றபடி பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டி இருக்கும். குரு பகவான் 8 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்வது நல்லது. பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட அதனை நீங்கள் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். வீடு, வாகனங்கள் மூலமாக சிலருக்கு சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு. பெரிய முதலீடுகளை நன்கு திட்டமிட்டு செய்யுங்கள். உத்யோகஸ்தர்கள் உங்களது பணியில் மட்டுமே முழு கவனம் செலுத்துவது நல்லது. உடன் வேலை செய்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருந்து கொள்ளுங்கள். இந்தக் கால கட்டத்தில் பொறுமையை கடை பிடித்தீர்கள் என்றால் வெற்றி உண்டு.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். பணவரவுகள் கூட உங்களது தேவைக்கு ஏற்றபடி சாதகமாகத் தான் இருக்கும். அதனால் உங்களது தேவைகள் அனைத்துமே பெரும்பாலும் நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். சிலர் நவீன ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்னும் சிலருக்கு வீடு, வாகனம் வாங்கக் கூடிய யோகம் கிடைக்கும். வெகு நாட்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகளின் உடல் நிலை கூட படிப்படியாக குணமாகும். இதனால் மருத்துவ செலவுகளில் இருந்து விடுபடுவீர்கள். தசா புத்தி மோசமாகவே இருந்தாலும் கூட மருத்துவ செலவுகள் குறையும். மொத்தத்தில் நன்மை உண்டு. எடுக்கும் முயற்சிகள் சற்று அலைச்சல் தந்தாலுமே கூட இறுதியில் எல்லாமே நல்ல படியாக நடந்தேறும். தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் சிலரைத் தேடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் கூட ஒரு முடிவுக்கு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த இட மாற்றங்கள் கூட சிலருக்கு கிடைக்கப்பெறும். நன்மைகள் மேலோங்கும் காலம் என்றாலுமே கூட, கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். மற்றபடி, அனைத்துத் தரப்பினருக்கும் பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பொருளாதார நிலை திருப்தியாக இருக்கும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு, வாகனம் சம்மந்தமாக சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகளை கடந்து சாதிப்பீர்கள். மொத்தத்தில் எதிர்பார்த்த லாபம் உங்களுக்கு உண்டு. வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும். சிலர் வேலையை விட்டு சொந்தத் தொழிலை ஆரம்பிப்பீர்கள். உத்யோகத்தில் கூட நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு உணவு சம்மந்தமாக ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட இடம் உண்டு. பயணங்களில் மட்டும் இக்கால கட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சில பயணங்கள் உங்களுக்கு அலைச்சலை தரலாம். அதனால் பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய கிளையை ஆரம்பிப்பார்கள். அரசு வழியில் கூட எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உங்கள் மீது இருந்து வந்த பழிச் சொற்கள் குறையும். கணவன்-மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் சகல விதங்களிலும் அனுகூலமான பலன்கள் தான் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் படிப்படியாகக் குறையும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காணுவீர்கள். தேவைகள் நல்ல படியாக பூர்த்தி ஆகும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். 1.5.24 முதல் குரு பகவான் உங்களது ராசிக்கு 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். உங்களது தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் கூட நல்ல படியாகக் கைகூடும். வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் பாக்கியம் சிலருக்கு ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். சிலர் நல்ல முதலீட்டை மேற்கொண்டு தொழிலை விரிவு படுத்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஒரு உயர்வான நிலையை இந்தக் கால கட்டத்தில் பெறுவார்கள். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நெருங்கியவர்களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. முன்கோபத்தை குறைத்து ஏற்றத்தை பெற முயற்சி செய்யுங்கள். பிறர் பேச்சுக்கள் கூட உங்களை கோபம் கொள்ளச் செய்யும் படியாக இருக்கும். முடிந்த வரையில் அதனை பொருட்படுத்தாதீர்கள். உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நிதானமாக முடிவு எடுக்கப் பாருங்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களை அணுகும் காலம் என்பதால் எதிலும் நீங்கள் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். பெரிய முதலீடுகளை ஒரு முறைக்குப் பல முறை நன்கு யோசித்து திட்டமிட்டுச் செய்யுங்கள். செலவுகள் அதிகரித்தாலும் கூட பணவரவு உங்களது தேவைக்கு ஏற்றபடி இருக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலை தந்தாலும் கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். அந்த வகையில் கூட சிலருக்கு கடன் ஏற்பட இடம் உண்டு. சிலர் தொழில் அல்லது வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய கடன் வாங்கலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய கிளைகளை துறக்கும் வாய்ப்பு கூட ஏற்படும். அரசு வகையில் சிலருக்கு ஆதாயங்கள் உண்டு. பணப் பரிமாற்ற விஷயங்களில் ஓரளவு நன்மை உண்டு. பிள்ளைகள் வழியில் கூட மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் கூட அதனை திறமையாக முடித்து எதிர்பார்த்த சலுகைகளை பெறுவீர்கள். பெண்கள் நகை போன்ற ஆடம்பர பொருள்களை வாங்குவீர்கள். அதன் வழியில் சில சுப செலவுகள் ஏற்பட இடம் உண்டு.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். பெரும்பாலும் எல்லா வகையிலும் ஏற்றமான பலன்களை பெறுவீர்கள். செல்வம், செல்வாக்கு புகழ் பெருமை எல்லாம் உங்களைத் தேடி வரும். பணவரவு உங்களது தேவைக்கு ஏற்றபடி இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்துமே நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். நெருங்கியவர்களுடன் மட்டும் கூடிய வரையில் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். காரணம் ராகு 7 இல் இருப்பதால் கூட்டாளிகள் மற்றும் நெருங்கியவர்கள் உங்களை காயப்படுத்தலாம். கணவன்- மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் சிலரைத் தேடி வரும். அரசு வழியில் கூட எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீனப் பொருள்களை வாங்குவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகள் நல்ல படியாகக் கிடைக்கப்பெறும். சிலர் நல்ல வேலைக்கு மாறுவீர்கள். பெண்களுக்கு சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். அதே சமயத்தில் அவ்வப்போது ராகுவின் சஞ்சாரத்தால் சிறு, சிறு சோதனைகள் வந்தாலும் கூட இறுதியில் அதனை எல்லாம் நீங்கள் சாதனையாக மாற்றுவீர்கள்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்களது வாழ்வில் மிகவும் அனுகூலமான பலன்கள் எல்லாம் ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றங்கள் உண்டு. சிலருக்கு தொழிலை விரிவு படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கப்பெறும். சிலருக்கு உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். இதனால் உங்களது தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலருக்கு வீடு, மனை வாங்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கப்பெறும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். சில அலைச்சல்கள் ஏற்பட்டாலுமே கூட உங்களது முயற்சி வீண் போகாது. பிள்ளைகளால் பெருமை உண்டு. வெளியூர் பயணங்கள் நன்மையை செய்யும். பெண்கள் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். இப்படியாகப் பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
5,14, 23
ராசியான நிறம்
நல்ல பச்சை
ராசியான கிழமை
புதன், வெள்ளி
ராசியான கல்
மரகதப் பச்சை
ராசியான திசை
வடக்கு
ராசியான தெய்வம்
மகா விஷ்ணு
சனி பெயர்ச்சி பலன்கள் - துலாம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
துலாம்
(சித்திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம்)
சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலா ராசி அன்பர்களே!.. உங்களது ராசிக்கு நட்பு கிரகமான சனி பகவான் இது நாள் வரையில் உங்களது ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து பல விதமான இன்னல்களை தந்திருப்பார். ஆனால், தற்போது திருக்கணிதப்படி 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (அதாவது வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) உங்களது ராசிக்கு பஞ்சம ஸ்தானம் என்னும் 5 ஆம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பது ஓரளவு நல்ல பலன்களை உங்களுக்கு தரும். இனி வரும் காலங்களில் நிம்மதியான சூழல் ஏற்படும். மருத்துவ செலவுகள் பலருக்கு குறையும். சிலருக்குப் பிள்ளைகள் வழியில் பெருமை உண்டு. திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். வழக்குகளில் கூட உங்களுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீடு நல்ல படியாக வசூல் ஆகும். அரசு வழியில் இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் கூடப் படிப்படியாகக் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் கூட படிப்படியாக ஒரு முடிவுக்கு வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இப்போது இருக்கும் வேலையை விட நல்ல உத்யோகம் கிடைக்கப்பெறும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் பல உங்களுக்கு சாதகம் தரும். அரசு வழியில் அனுகூலம் உண்டு. சிலருக்குப் பெரிய மனிதர்களின் அறிமுகம் மற்றும் அவர்கள் மூலமாக சில உதவிகள் கூட கிடைக்கப்பெறும். எனினும், தசா புத்தி மோசமாக இருக்கும் சிலருக்கு அஜீரணம் மற்றும் வயிறு சம்மந்தமான பாதிப்புகள் அடிக்கடி ஏற்பட இடம் உண்டு. தசா புத்தி நன்றாக இருக்கும் பட்சத்தில் இரட்டிப்பான நல்ல பலன்களை பலர் பெறுவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த இழுபறி நிலை ஒரு முடிவுக்கு வரும். பேச்சில் மட்டும் நிதானத்தை மேற்கொள்ளுங்கள். கணவன்- மனைவி இடையே சின்னச், சின்ன அவிப்பிராய பேதங்கள் அவ்வப்போது வந்து போக இடம் உண்டு. 22.4.23 முதல் 1.5.24 வரையில் குரு பகவான் உங்களது ராசிக்கு 7 இல் சஞ்சரிப்பதால் மேற்குறிப்பிட்ட காலத்தில் பலருக்கு நன்மைகள் மேலோங்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். மங்களகரமான நிகழ்ச்சிகள் எல்லாம் கூட நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கூடக் கிடைக்கப்பெறும். 30.10.2023 வரையில் ராகு/ கேதுக்களின் சஞ்சாரம் மட்டும் சுபமாக இல்லை. அதனால் பயணங்களை முடிந்தவரையில் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் நிதானத்தை மேற்கொள்ளுங்கள். மற்றபடி பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு இருந்த அலைச்சல்கள் எல்லாம் குறைந்து சுறுசுறுப்பு ஓங்கும். எதிலும் உற்சாகமாக இனி வரும் காலங்களில் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். நீண்ட நாள் நோயாளிகளுக்கு கூட இனி வரும் காலங்களில் மருத்துவ செலவுகள் படிப்படியாகக் குறையும். உணவு விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு அவ்வப்போது சிறு, சிறு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வந்து போகலாம். எனினும், மேற்படி விஷயம் தவிர பெரும்பாலும் உடல் ஆரோக்கியம் அனுகூலமாகத் தான் இருக்கும். ஆற்றலுடன் செயல்படுவீர்கள். அதனால் கவலை வேண்டாம்.
குடும்பம், பொருளாதார நிலை:
உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்களின் அனைத்துத் தேவைகளும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் கிடைக்கப்பெறும். நீண்ட நாட்களாகத் தடைபட்ட சுப காரியங்கள் நல்ல படியாக நடந்தேறும். மற்றபடி, பங்காளிகளால் தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க பேச்சில் மட்டும் அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் வந்தாலுமே கூட, இறுதியில் எல்லாம் சுமூகமாக முடியும்.
கொடுக்கல்-வாங்கல்:
பணம் சம்மந்தமான விஷயங்களில் அனுகூலம் உண்டு. கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். சிலருக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்கள் நல்ல படியாக முடியும். வராது என்று நினைத்த பணம் கூட சிலருக்கு வசூல் ஆகும். மொத்தத்தில், கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரும்பாலும் நல்ல பலனைத் தான் பெறுவீர்கள்.
தொழில், வியாபாரம்
தொழில் அல்லது வியாபாரத்தில் இருந்து வந்த தேவை இல்லாத நெருக்கடிகள் எல்லாம் விலகி ஏற்றம் ஏற்படும். போட்ட முதலீட்டை எடுப்பீர்கள். தொழிலை நல்ல முறையில் விரிவு படுத்துவீர்கள். வேலையாட்கள் வகையில் இருந்து வந்த தொந்தரவுகள் எல்லாம் மறையும். சிலருக்கு நல்ல வேலை ஆட்கள் அமைவார்கள். மொத்தத்தில் போட்டிகள் இருந்தாலுமே அதை எல்லாம் கடந்து நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்.
உத்யோகம்:
உத்யோகத்தில் கடந்த காலத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். உங்களது உழைப்பிற்கு ஏற்ற நல்ல ஊதியம் கிடைக்கப்பெறும். சிலருக்கு வேறு ஒரு நல்ல இடத்தில் அருமையான வேலை அமையும். வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் நீங்கள் சந்திப்பீர்கள். உத்யோகத்தில் வராது என்று நினைத்த சம்பள பாக்கி எல்லாம் கூட சிலருக்கு வசூல் ஆகும். உடன் வேலை செய்பவர்கள் ஒத்துழைப்பார்கள். அதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மொத்தத்தில் உத்யோக ரீதியாக எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கூட உங்களுக்கு நல்ல படியாகக் கிடைக்கப்பெறும்.
அரசியல்
உங்களது பெயர், புகழ் மேலோங்கும் காலம். வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு மற்றும் மரியாதை உயரும். தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும். பேச்சில் உங்களது சாமர்த்தியம் வெளிப்படும். உங்களது நீண்ட நாள் ஆசைகள் எல்லாம் கூட நிறைவேறும். சிலருக்கு கனவு நிஜம் பெறும். உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்கள். அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மை உண்டு.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். சந்தையில் எற்ற விலையும் கூட உங்களுக்கு கிடைக்கப்பெறும். பண வரவுகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நவீன கருவிகள் மற்றும் கால்நடைகளை வாங்குவீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் மட்டும் பொறுமை காக்கவும். பங்காளிகள் உங்களது கோபத்தை தூண்டலாம். முடிந்த வரையில் பூர்வீக நிலம் சம்மந்தமான பிரச்சனைகளை மட்டும் பொறுமையாகக் கையாளப் பாருங்கள். மற்றபடி பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
பெண்கள்
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் எல்லாம் ஏற்படும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியில் நல்ல மாற்றம் எல்லாம் ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாகக் கைகூடும். எனினும் அஜீரணம் மற்றும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்கள்
நல்ல வாய்ப்புகள் எல்லாம் உங்களைத் தேடி வரும். மிகவும் அற்புதமாக இருப்பீர்கள். பொருளாதார நிலையில் நல்ல மாற்றங்கள் எல்லாம் ஏற்படும். குறிப்பாக இசைத் துறையில் இருப்பவர்கள் சாதிப்பார்கள். உங்கள் கனவுகள் அனைத்துமே நல்ல படியாக நிறைவேறும். வீடு, வாகனம் மற்றும் வசதி வாய்ப்புகள் எல்லாம் பெருகும். மொத்தத்தில் அனைத்து வகையிலும் நல்ல பலன் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்.
மாணவ-மாணவியர்
கல்வியில் நல்ல நிலையை நீங்கள் எட்டுவீர்கள். இனி வரும் காலங்களில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு ஆறுதல் தரும். சிலர் படிக்க வெளிநாடு செல்வீர்கள். விரும்பிய பாடம் சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு பரிசுகள் கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில், அனைத்து வகையிலும் நல்ல பலன்கள் எல்லாம் உங்களுக்கு ஏற்படும்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் அலைச்சல், டென்ஷன் குறையும். இது வரையில் மன சஞ்சலம் தந்து கொண்டு இருந்த பெரிய பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். பண வரவு மட்டும் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாலும் உங்களது தேவைகள் தக்க சமயத்தில் நிறைவேறும். இந்தக் கால கட்டத்தில் குரு பகவான் 6 இல் இருப்பதால் தேவை இல்லாத கடன்கள் ஏற்படாமல் இருக்க முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை மட்டும் குறைத்துக் கொள்ளப்பாருங்கள். உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மற்றபடி மருத்துவ செலவுகள் இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே கூட எதிர்பார்க்கும் லாபத்தை பெறுவீர்கள். எனினும் சில சமயங்களில் சில அலைச்சல்கள் தொழில் ரீதியாக அதிகரிக்க இடம் உண்டு. ஆனாலும், உங்களது முயற்சி வீண் போகாது. உத்யோகஸ்தர்கள் உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். எனினும் மேலதிகாரி உங்களுக்கு சாதகமாக இருப்பார். சிலருக்கு கடன்கள் குறையும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சல் தந்தாலும் கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். சிலருக்கு உத்யோக ரீதியாக எதிர்பார்த்த பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கவும் இடம் உண்டு. மொத்தத்தில், பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு ஏற்படும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்திலும் கூட பெரும்பாலும் அனுகூலமான பலன்கள் தான் ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் கூட கிடைக்கப்பெறும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்கு வெற்றியைத் தரும். வழக்குகள் சாதகம் ஆகும். எதிர்ப்புகள் அடங்கும். குடும்பத் தேவைகள் அனைத்துமே நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். பிள்ளைகள் வழியில் கூட மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும். உற்றார்-உறவினர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகளை எல்லாம் கடந்து லாபம் பெறுவீர்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் எண்ணியபடி பூர்த்தி ஆகும். உத்யோகத்தில் நல்ல திருப்பங்கள் எல்லாம் ஏற்படும். சங்கடங்கள் எல்லாம் சாதகமாக மாறும் காலம் இது. மாணவர்கள் சிறு முயற்சி செய்தாலும் கூட கல்வியில் பெரிய நல்ல மாற்றத்தை காணுவார்கள். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை தரும் காலம் இது.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் பொறுமையுடன் இருந்தீர்கள் என்றால் ஏற்றமான பலன்களை காணுவீர்கள். முடிந்தவரையில் நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் கூட நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் மட்டும் அல்ல, சில சமயங்களில் எதிர்பாராத இடத்தில் இருந்து கூட உங்களுக்கு உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சுப காரியங்கள் அலைச்சலை தந்தாலுமே இறுதியில் எல்லாமே நல்ல படியாக நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் சிறு, சிறு நெருக்கடிகள் வந்தாலுமே கூட அதனை சமாளித்து விடுவீர்கள். தொழில் ரீதியாக வளர்ச்சி உண்டு. எனினும், தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களால் சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். உத்யோகஸ்தர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் வேலை பளு அதிகரித்து காணப்பட்டாலுமே கூட அதற்கான நல்ல பலன்களும் நாளடைவில் கிடைக்கப்பெறும். உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ளுங்கள். மற்றபடி, அலைச்சல் தந்தாலுமே கூட உங்களது முயற்சி வீண் போகாது. அந்தவகையில் வெற்றிநடை போடுவீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
பொருளாதார நிலை உயரும். உங்களது குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். எதையும் தைரியத்துடன் எதிர்கொண்டு வெற்றி நடை போடுவீர்கள். கொடுக்கல் - வாங்கல் போன்ற பணப்பரிமாற்றங்கள் பெரும்பாலும் நல்ல விதத்தில் தான் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் எல்லாம் நடந்தேறும். ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் குறையும். இதனால் பலருக்கு மருத்துவ செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மொத்தத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இனிய நிகழ்வுகள் சிலருக்கு ஏற்படும். பிள்ளைகள் வழியில் கூட மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். தொழில், வியாபாரத்தை சிலர் விரிவு படுத்துவீர்கள். சிலர் பழைய கடனை அடைப்பீர்கள். வராது என்று நினைத்த கடன் கூட நல்ல விதத்தில் வசூல் ஆகும். உத்யோகஸ்தர்கள் கனவு நிஜம் பெறும். உத்யோகத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் எல்லாம் இப்போது தேடி வரும். உங்களது திறமைகள் வெளிப்படும். அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றமான பலன்கள் ஏற்படும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாமே நல்ல படியாக நடந்தேறும். பணவரவு தேவைக்கு ஏற்றபடி இருக்கும். இதனால் உங்களது தேவைகள் அனைத்தும் நல்லபடியாகப் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகும். உடல் ரீதியாக இருந்து வந்த மருத்துவ செலவுகள் கூட படிப்படியாக குணமாகும். அனைத்து விதங்களிலும் நன்மைகள் மேலோங்கும். தொழில், வியாபாரம் கூட சிறப்பாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமணம் போன்ற விசேஷங்கள் கூட நல்ல படியாக நடந்தேறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூட நல்ல திருப்பங்களை காண்பார்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்து வந்த மனக்கசப்புகள் சிலருக்கு அகலும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை கூட குறையும். பெரும்பாலும் நல்லதே நடக்கும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்ல விதத்தில் அனுகூலம் பெறும். எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் கிடைக்கப்பெறும். பண வரவு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மன மகிழ்ச்சி ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் அதிகப்படியான லாபங்களை பெறுவீர்கள். கொடுக்கல் - வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சிலருக்கு நல்ல இடத்தில் கூட வேலை அமையும். சிலருக்கு உத்யோக ரீதியாக விரும்பிய இடமாற்றம், சம்பள உயர்வு எல்லாம் கூட கிடைக்கப்பெறும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெறும். மாணவர்கள் முயற்சி செய்தால் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். இப்படியாகப் பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் மட்டும் எதிலும் நிதானத்தோடு இருப்பது நல்லது. முடிந்த வரையில் பிறருக்கு உதவி செய்வதாக நினைத்து பிரச்சனைகளில் தேவை இல்லாமல் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிக கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. எனினும் உங்களது பொருளாதாரத் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். தொழில் அல்லது வியாபாரத்தில் சிறு, சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலுமே கூட அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்யோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். எனினும் எதிர்மறை விமர்சனங்கள் சக ஊழியர்கள் மூலமாக வரலாம். முடிந்த வரையில் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் முன்னேறப் பாருங்கள். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. மருந்தின் காலாவதி தேதி பார்த்து சாப்பிடுங்கள். நீங்களாக மருத்துவர் அறிவுரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் சற்று நிதானமாக சென்று வாருங்கள். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பொருளாதார நிலை சாதகமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலைத் தந்தாலுமே கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். கொடுத்த வாக்குறுதிகளை நல்ல படியாக நிறைவேற்றுவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறையும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் உங்களிடத்தில் திரும்பி வருவார்கள். அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கும் நன்மைகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு திடீர் வேலை மாற்றம் ஏற்படலாம். அது பிற்காலத்தில் நன்மை தரும் விதத்தில் இருக்கும். இப்படியாகப் பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்திலும் கூட பெரும்பாலும் நீங்கள் வளமான பலன்களைத் தான் பெறுவீர்கள். உங்களுடைய தேவைக்கேற்ப பொருளாதார நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். நல்ல நட்புகள் சிலருக்கு ஏற்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் உங்களது கை ஓங்கும். போட்டிகள் இருந்தாலுமே கூட எதிர்பார்த்த லாபத்தை அடைந்து விடுவீர்கள். சிலர் பழைய கடனை முற்றிலும் அடைப்பீர்கள். நல்ல திருப்பங்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களில் கூட நல்ல திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் மட்டும் சிறு, சிறு மனக்கவலைகள் வந்து போக இடம் உண்டு. மற்றபடி, அனைத்துத் தரப்பினருக்குமே பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
4,5,6,7,8
ராசியான நிறம்
வெள்ளை, பச்சை
ராசியான கிழமை
வெள்ளி, புதன்
ராசியான கல்
வைரம்
ராசியான திசை
தென் கிழக்கு
ராசியான தெய்வம்
லக்ஷ்மி
சனி பெயர்ச்சி பலன்கள் - தனுசு
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம்)
குரு பகவான் ஆட்சி பலம் பெறும் தனுசு ராசியில் பிறந்த அன்பர்களே!.. இது நாள் வரையில் ஏழரை சனியின் தாக்கத்தால் பல்வேறு இன்னல்களை நீங்கள் சந்தித்து வந்தீர்கள். ஆனால், தற்போது திருக்கணித அடிப்படையில் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி சொல்ல வேண்டும் எனில் 29.3.2023 முதல் 6.3.2026 வரை) சனி பகவான் உங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களது வாழ்க்கையில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்பட இருக்கிறது. உடல் ஆரோக்கியம் இனி வரும் காலங்களில் சிறப்பாக இருக்கும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். பொருளாதார ரீதியாக மிகவும் அனுகூலமான பலன்கள் எல்லாம் ஏற்படும். சிலருக்கு கடன்கள் கூட அடைபடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கப்பெறும். திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். கடந்த காலங்களில் சிலருக்கு ஏற்பட்டு இருந்த வழக்குகள் எல்லாம் கூட ஒரு முடிவுக்கு வரும். கௌரவமான நிலையினை வருங்காலத்தில் நீங்கள் அடைவீர்கள். சிலருக்கு வீடு, வாசல், பூமி, மனை போன்றவற்றை வாங்கக் கூடிய யோகம் கிடைக்கப்பெறும். தொழில் அல்லது வியாபாரம் சிறக்கும். உத்யோக ரீதியாக சிலருக்கு நல்ல மாற்றங்கள் எல்லாம் ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கூட கிடைக்கப்பெறும். உங்கள் கனவுகள் எல்லாம் நல்லபடியாக நிறைவேறும்.
உடல் ஆரோக்கியம்
உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தசா புத்தி மோசமாக இருக்கும் அன்பர்களுக்கு கூட வரும் காலங்களில் மருத்துவ செலவுகள் குறையும். இனி வரும் காலங்களில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் அலைச்சல்கள், கவலைகள் எல்லாமே ஒரு முடிவுக்கு வரும். உங்கள் ஜாதக பலன் காரணமாக உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் கூட மேம்படும் வாய்ப்பு உண்டு.
குடும்பம், பொருளாதார நிலை:
கடந்த கால பணப் பற்றாக்குறை எல்லாம் விலகும். கடன் பிரச்சனைகள் கூட இனி வரும் காலங்களில் படிப்படியாகக் குறையும். கணிசமான தொகையை சேமிக்கும் அளவிற்கு பண வரவு காணப்படும். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் பாக்கியம் கூட கிடைக்கப்பெறும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத வம்பு வழக்குகள் எல்லாமே ஒரு முடிவுக்கு வரும். பங்காளிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
கொடுக்கல்-வாங்கல்:
கொடுக்கல் வாங்கல் நல்ல முறையில் நடந்தேறும். நல்ல முதலீடுகளை சிலர் செய்து லாபம் பார்ப்பீர்கள். எந்த ஒரு செயலிலும் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். வராது என்று நினைத்த பணம் கூட வந்து சேரும். இப்படியாக வராக் கடன் சிலருக்கு வசூல் ஆகும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். மொத்தத்தில் கொடுக்கல்-வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டு என நம்பலாம்.
தொழில், வியாபாரம்
தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கப்பெறும். சமூகத்தில் உங்களது மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய பொருள்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கப்பெறும். போட்டிகளை திறமையாக சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். சிலர் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகி ஏற்றம் ஏற்படும். அரசு வழியில் கூட ஆதாயம் உண்டு. மொத்தத்தில் பெரும்பாலும் நல்ல பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
உத்யோகம்:
கடந்த காலங்களில் நீங்கள் பட்ட அவமானங்கள் எல்லாம் விலகி பணி புரியும் இடத்தில் உங்களது மதிப்பு மற்றும் மரியாதை கூடும். உங்கள் உழைப்பிற்கான நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எல்லாம் கூட கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல வேலை கூட கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்கள் சிலருக்கு ஏற்படும். உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் விலகும். உத்யோக ரீதியாக பெரும்பாலும் ஏற்றம் மிகுந்த பலன்களை பெறுவீர்கள்.
அரசியல்
கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வாழ்வில் நல்ல மாற்றங்கள் எல்லாம் ஏற்படும். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். மக்கள் மத்தியில் உங்களது மதிப்பு மரியாதை உயரும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி ஏற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலமாக அரசியலில் உங்களது செல்வாக்கு மேலும் உயரும். சிலர் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். மொத்தத்தில் பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் ஏற்படும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். அத்துடன் சந்தையில் நல்ல விலை போகும். அரசு உதவிகள் கூட உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நவீன யுக்திகளை பயன்படுத்தி விளைச்சலை அதிகப் படுத்துவீர்கள். பங்காளிகளுடன் இருந்த வந்த பகைமை சிலருக்கு முடிவு பெறும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். புதிய விளை நிலங்களை வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும்.
பெண்கள்
தேக ஆரோக்கியம் படிப்படியாக நன்மை பெறும். அதனால் மருத்துவ செலவுகள் இனி வரும் காலங்களில் குறையும். சில பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்பெறும். குடும்பத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தில் மிக முக்கிய நபராக நீங்கள் கருதப்படுவீர்கள். மிகவும் சுறுசுறுப்புடன் நீங்கள் செயல்படுவீர்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். பணம் சேரும். பழைய கடன்கள் அடைபடும். நல்ல திருப்பங்கள் எல்லாம் வாழ்வில் ஏற்படும். சுப காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த மனக் கசப்புக்கள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் அமையும்.
கலைஞர்கள்
உங்கள் திறமைகளை அற்புதமாக வெளிக்காட்டுவீர்கள். அரசின் விருதுகள் எல்லாம் கூட சிலருக்கு கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் நல்ல விதத்தில் சிலருக்கு கையெழுத்தாகும். கலைத்துறையில் ஒரு முக்கிய நக்ஷத்திரமாக சிலர் ஜொலிப்பீர்கள். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிஜம் பெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு.
மாணவ-மாணவியர்
படிப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு பரிசுகளை வெல்லக் கூடிய வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். மேற்படிப்புக்காக நீங்கள் செய்யும் முயற்சிகள் கூடப் பெரும்பாலும் அனுகூலமான பலனைத் தான் தரும். கடந்த கால உடல் சோர்வுகள் விலகி எதிலும் நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்களது வாழ்வில் மிகப் பெரிய மறுமலர்ச்சி ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது தேவைகள் அனைத்தும் நல்ல விதத்தில் பூர்த்தி ஆகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குணமாகும். எதிலும் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கப்பெறும். அவர்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் எல்லாம் ஏற்படும். புதிய பூமி, வீடு, வாகனம் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இது நாள் வரையில் இருந்த சுணக்கங்கள் மறையும். உத்வேகமாக செயல்பட்டு புதிய பயன் தரும் திட்டங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை மீண்டும் கவருவீர்கள். எப்போதோ நீங்கள் போட்ட முதலீடு கூட இப்போது உங்களுக்கு பயன் தரும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். சிலர் தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய கிளைகளை திறப்பீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் கிடைக்கப்பெறும். பெண்கள் நகை அல்லது ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இக்கால கட்டத்தில் உங்கள் சேமிப்பு உயரும் வாய்ப்பும் உண்டு. மொத்தத்தில் தசா புத்தி மோசமாக இருக்கும் அன்பர்களுக்கு கூட இந்தக் காலம் பெரும்பாலும் நன்மையைத் தான் செய்யும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்திலும் கூட பெரும்பாலும் அற்புதமான பலன்கள் தான் உங்களுக்கு ஏற்படும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி, பூரிப்பு ஏற்படும். பிள்ளைகள் வழியில் இருந்து வந்த கவலைகள் கூட சிலருக்கு முடிவு பெறும். நல்லதே நடந்தேறும். மாணவர்கள் படிப்பில் சாதிப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கூட எதிர்பார்த்த நன்மைகள் உண்டு. அரசு வழியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் இப்போது விடிவு காலம் வந்து விட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது. வேலை தேடிக் கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு கூட தகுதியான நல்ல வேலை கிடைக்கப்பெறும். சிலருக்கு நவீனப் பொருள்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கப்பெறும்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் மட்டும் சிறு அளவில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருந்தாலுமே கூட உங்கள் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். செலவுகள் அதிகம் இருக்கும் தான். எனினும், பணவரவும் இந்தக் காலத்தில் உங்களுக்கு ஆறுதல் தரும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வந்து போக இடம் உண்டு. உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாடுகள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பங்காளிகளுடன் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் பேசுங்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் மிகவும் சிந்தித்து பக்குவமாக செயல்படுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்து காணப்பட்டாலுமே, அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது. மேலதிகாரியின் தயவு உங்களுக்கு கிடைக்கப்பெறும். எனினும், சக ஊழியர்களுடன் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் வருவதற்கு இடம் உண்டு. கைப்பேசியில் அவர்களுடன் உரையாடும் போதும் கூட மேலதிகாரிகள் பற்றி எதுவும் விமர்சனம் செய்து விடாதீர்கள். சில சமயங்களில் உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் எதையும் எதிர்கொண்டு நீங்கள் லாபத்தை அடைவீர்கள். எனினும், மேற்படி இந்தக் கால கட்டத்தில் நல்ல ஊழியர்கள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். சில சமயங்களில் தொழில் போட்டி காரணமாக சில சலுகைகளை நீங்கள் அறிவிக்க வேண்டி வரலாம். அதனால் லாபம் சற்றே குறையலாம். எனினும், போராடி எதிர்நீச்சல் போட்டு இறுதியில் மகத்தான வெற்றி வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். அதனால் கவலை வேண்டாம்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் மீண்டும் உங்கள் போராட்டம் தணிந்து வாழ்க்கையில் மேன்மையான நல்ல பலன்கள் எல்லாம் ஏற்படும். உங்களுடைய நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். வெற்றி மேல் வெற்றி கிட்டும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி உங்களுக்கு லாபத்தை தரும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் சூழ்நிலைகளை சாதகம் ஆக்கி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் சற்று அலைச்சலைத் தந்தாலுமே இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். திடீர் சுப செலவுகள் சிலருக்கு ஏற்படும். எனினும், பண வரவும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு இருந்து வரும். சிலருக்கு பழைய கடன்கள் கூட அடைபடும். பூர்வீக சொத்து பிரச்சனைகள் சிலருக்கு சாதகம் ஆகும். பெண்கள் புதிய ஆடம்பர பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கணவன்- மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாகக் குறையும். எனினும் உங்களது பிரச்சனைகளை உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரம் சம்மந்தமாக சிலர் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை வரலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எனினும் அதற்கான நல்ல பலனை நாளடைவில் நீங்கள் பார்ப்பீர்கள். அதனால் மிகவும் உற்சாகமாக இருங்கள். கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும். உங்களது தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். மொத்தத்தில் ஒரு சில சமயங்களில் அலைச்சல் இருந்தாலுமே கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். உத்யோகஸ்தர்களுக்கு கூட வெற்றி வாய்ப்புகள் நல்ல படியாகத் தேடி வரும். வெகு நாளாக நல்ல வேலை தேடி காத்துக் கொண்டு இருந்த அன்பர்களுக்குக் கூட மகத்தான நல்ல வேலை கிடைக்க இடம் உண்டு. வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவார்கள். குடும்பத்தை கவனிக்கும் வீட்டில் இருக்கும் மற்ற பெண்மணிகள் அதிகம் மதிக்கப்படுவார்கள். குடும்பத்தின் அச்சாணியாக உங்களை குடும்ப உறுப்பினர்கள் புருவம் உயர்த்தி கௌரவத்துடன் பார்ப்பார்கள். மொத்தத்தில் நல்லதே நடக்கும். நல்லதாகவே எல்லாம் முடியும். அதனால் உற்சாகமாக இருங்கள்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்திலும் கூட உங்களது வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். திருமணம் போன்ற சுப காரியங்கள் எல்லாம் கைகூடி சிலருக்கு மகிழ்ச்சி தரும். பொருளாதாரம் ஏற்றம் பெறும். பங்காளிகளுடன் இருந்து வந்த சொத்துப் பிரச்சனைகள் நல்ல விதத்தில் முடியும். கொடுத்து வராது என்று நினைத்த கடன் கூட சிலருக்கு வசூலாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு கூட படிப்படியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் கூட சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சமூகத்தில் உயர்வான நிலையை நீங்கள் அடைவீர்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். பெண்கள் நகை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழில் அல்லது வியாபாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு நல்ல வேலை ஆட்கள் இந்தக் கால கட்டத்தில் அமைவார்கள். வெகு காலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும். மாணவர்கள் கல்வியில் சாதிப்பார்கள். கலைத்துறையினருக்கு இனிய வாய்ப்புகள் தேடி வரும். மொத்தத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் நல்ல பலன்களே ஏற்படும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்திலும் கூட நீங்கள் வளமான பலன்களை பார்ப்பீர்கள். எந்த முயற்சியில் நீங்கள் ஈடுபட்டாலும் அது பெரும்பாலும் வெற்றியைத் தரும். உடல் ஆரோக்கியம் பலருக்கு பலப்படும். இதனால் இந்தக் கால கட்டத்தில் தேவை இல்லாத மருத்துவ செலவுகள் குறையும் அல்லது தசா புத்தியும் சொந்த ஜாதகத்தில் நன்றாக இருக்கும் பட்சத்தில் மருத்துவ செலவுகள் யாவும் கூட முற்றிலும் நீங்கும். எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் கிடைக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் சாதகமான பலன்கள் ஏற்படும். எனினும் முடிந்த வரையில் செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடியுங்கள். காரணம் சிலர் தொழில் வளர்ச்சிக்காக நல்ல கடன்களை வாங்க நேரிடலாம். பொருளாதாரம் மற்ற கிரகங்களையும் வைத்துப் பார்க்கும் போது சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலுமே நீங்கள் அதனை எல்லாம் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து கூட சிலருக்கு தக்க உதவிகள் கிடைக்கப்பெறும். அந்த உதவி மிகவும் ஆறுதலாக இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கூட நீங்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி நல்ல விதத்தில் முன்னேறுவீர்கள். மொத்தத்தில், உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபத்தில் எந்தக் குறையும் உங்களுக்கு இருக்காது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். பெரும்பாலும் நல்ல பலன்கள் தான் உங்களுக்கு ஏற்படும். மொத்தத்தில் போராடி வெல்வீர்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் மட்டும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. அலைச்சல் சற்று அதிகம் காணப்படும் தான். எந்த ஒரு செயலையும் விநாயகரை கும்பிட்டு ஆரம்பியுங்கள். அப்போது அந்த செயல் அவர் அருளால் சீக்கிரம் முடியும். குல தெய்வ வழிபாடு கூட அவசியம் தேவைப்படும் காலம் இது. எதிலும் சற்று இழுபறி நிலை நீடிக்க இடம் உண்டு. உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் அறிவுரை இல்லாமல் நீங்களாக பிறர் சொல்லக் கேட்டு புது மருந்துகளை முயற்சி செய்யாதீர்கள். திடீர் என்று மருத்துவ முறையை மாற்றி விடும் நேரம் இதுவல்ல. காரணம் சிலருக்கு ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அது மருந்து அல்லது உணவின் மூலமாக ஏற்பட இடம் உண்டு. சுப காரிய பேச்சு வார்த்தைகள் சிலருக்குத் தாமதம் ஆகி அதன் பின்னர் நடந்தேறலாம். முடிந்த வரையில் பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனமாக இருக்கப் பாருங்கள். கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் பொறுமையைக் கடைபிடியுங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே அதை எல்லாம் சமாளித்து லாபம் காணுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் காணப்படலாம். எனினும் சமாளித்து விடுவீர்கள். அதே சமயத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் தாமதம் ஆக இடம் உண்டு. நெருங்கியவர்கள் அல்லது உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. பொறுமையை கடைபிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டம் முன் போல போராட்டமாக இல்லாமல் மிகவும் நன்மை தரும் விதத்தில் இருக்கும். பணவரவு மகிழ்ச்சி தரும். உங்களது பொருளாதார நிலைமை சீராகும். சகல சௌபாக்கியங்களையும் அடைவீர்கள். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வம்பு, வழக்குகளில் கூட தீர்ப்பு உங்களுக்கு சாதகம் ஆகும். தொழில் அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி தரும். வேலை ஆட்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைக் கூட நீங்கள் திறம்பட முடிப்பீர்கள். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு கூட கிடைக்கப்பெறும். மொத்தத்தில் இந்தக் கால கட்டத்தில் சோதனைகளை வென்று சாதிப்பீர்கள்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்களுக்கு இந்தக் கால கட்டத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கப்பெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்திற்குத் தேவையான நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உற்றார்-உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். இதனால் சமூகத்தில் உங்களது மதிப்பு உயரும். தொழில் ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் சாதகம் ஆகும். எந்தப் போட்டிகளையும் எதிர்கொண்டு உயர்வான நிலையை அடைவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். சிலருக்கு இப்போது இருக்கும் நிறுவனத்தை விட, நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். கலைத்துறையில் இருப்பவர்களுக்குக் கூட புதிய வாய்ப்புகள் தேடி வரும். மொத்தத்தில் பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும். அதனால் கவலை வேண்டாம்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
1,2,3,9,10,11,12
ராசியான நிறம்
மஞ்சள், பச்சை
ராசியான கிழமை
வியாழன், திங்கள்
ராசியான கல்
புஷ்ப ராகம்
ராசியான திசை
வடகிழக்கு
ராசியான தெய்வம்
தட்சிணா மூர்த்தி
சனி பெயர்ச்சி பலன்கள் - மகரம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
மகரம்
(உத்திராடம் 2,3,4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ஆம் பாதம்)
ஸ்ரீ சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்த மகர ராசி அன்பர்களே!.. தற்போது 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) சனி பகவான் உங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதாவது ஏழரை சனியில் இது பாதச் சனி. இயற்கையிலேயே சனி பகவான் உங்களது ராசி அதிபதி. ஆனாலுமே, உங்கள் கர்ம வினைக்கான பலன்களை அவர் தராமல் இருக்க மாட்டார். காரணம் சனி பகவான் நியாயாதிபதி. நீங்கள் வேண்டும் என்றால் சனிப் ப்ரீதி செய்து வேண்டிக் கொள்ள இடம் உண்டு. சரி, இப்போது உங்களுக்கான பலன்களை பார்ப்போம் வாருங்கள்..
உடல் ஆரோக்கியத்தில் இது நாள் வரையில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குணமாகும். இதனால் மருத்துவ செலவுகள் சிலருக்கு குறையும். முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பணப் பரிமாற்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். பணம் கையிருப்பை வெளியில் சொல்லாதீர்கள். சில சொந்த பந்தங்கள் பணம் கேட்டு உங்களை நச்சரிக்க இடம் உண்டு. கணவன்- மனைவி இடையே முன்பை விட அதிகம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. காரணம் 2 ஆம் இடம் என்பது குடும்பஸ்தானம். மற்றவர்களுக்கு உதவி செய்தாலுமே உங்களுக்கு நல்ல பெயர் வரும் என்று சொல்வதற்கு இல்லை. அதனால் முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் அந்நிய நபர்கள் தலையீட்டை தவிருங்கள். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் காணப்பட்டாலுமே, எதிர்பார்த்த லாபத்தை போராடி வெல்வீர்கள். முடிந்த வரையில் பெரிய முதலீடுகளை திட்டமிட்டு செய்யப்பாருங்கள். அனைத்திலும் யோசித்து செயல்படுங்கள். தொழில் கூட்டாளிகளுடன் சிறு, சிறு பிரச்சனைகள் வந்து போகலாம். அதனால் தேவை இல்லாத வாக்கு வாதங்களுக்கு இடம் அளிக்காதீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதம் ஆனாலும், இறுதியில் கிடைக்கப் பெறும். எனினும், வேலை பளு சற்று அதிகரித்தே காணப்படும். பெரும்பாலும் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அதனால் கோபத்தை குறைத்து மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் முடிந்த வரையில் சாதுர்யமாக இருந்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் மனதில் பட்டதை எல்லாம் வெளியில் பேசிக் கொண்டு இருக்காதீர்கள். உங்கள் பேச்சே உங்களுக்கு விரோதம் ஆகலாம். கைப்பேசியில் உரையாடும் சமயத்தில் கூட கூடுதல் கவனம் தேவை. எனினும், எப்படிப் பார்த்தாலும் ஓய்வு நேரம் குறைய இடம் உண்டு. அதனால் உடல் அளவில் அசதி, ஆயாசம் ஏற்படலாம். முடிந்த வரையில் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தப் பாருங்கள். புதிதாக வேலை தேடும் அன்பர்களுக்கு வேலை கிடைக்கும் எனினும் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். குரு பகவான் 1.5.2024 முதல் 14.5.2025 வரையில் உங்களது ராசிக்கு 5 ஆம் இடத்தில் இருப்பார். அந்தக் கால கட்டத்தில் சில நல்ல பலன்கள் உங்களுக்கு ஏற்பட இடம் உண்டு. அந்தக் காலத்தை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். குடும்பத்தில் மங்களம் தரும் சுப காரியங்கள் எல்லாம் மேற்படி காலத்தில் நல்ல படியாக நடந்தேறும். மற்றபடி, மேற்படி காலம் வரையில் அலைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். ஒரு வேலையை முடிக்க பல முறை அலைய வேண்டிய சூழ்நிலை கூட வரலாம். பொறுமையுடன் இருந்து வெற்றி பெற வேண்டிய கால கட்டம் இது. வீண் டென்ஷன் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தசா புத்தி மோசமாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் திருட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 30.10.23 முதல் 18.5.25 வரையில் ராகு பகவான் உங்களது ராசிக்கு 3 இல் இருப்பது உங்களுக்கு அவ்வப்போது மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை தரும். எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்து அவ்வப்போது நீங்கள் ஆறுதல் அடைவீர்கள். எனினும், இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் எதையும் சுமூகமாக முடிக்கப் பாருங்கள். கோபத்தை குறைத்து பொறுமையை கடைபிடியுங்கள். குல தெய்வ வழிபாட்டை மறக்காதீர்கள். இறை வழிபாடு மற்றும் தன்னபிக்கையே உங்களை காப்பாற்றி வெற்றியின் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும்.
உடல் ஆரோக்கியம்
முன் போல இல்லாமல் உங்களது தேக ஆரோக்கியம் ஓரளவு நன்மை தரும். இதனால் இனி வரும் நாட்களில் மருத்துவ செலவுகள் படிப்படியாகக் குறையும். உணவு விஷயத்தில் மட்டும் சற்று கூடுதல் கட்டுப்பாடு எடுத்துக் கொள்ளுங்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். இதனால், கோபம், டென்ஷன் காரணமாக சிலருக்கு ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் தேவை இல்லாமல் எதிர்காலத்தை பற்றி சிந்தனை செய்து பயம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். தேவை அற்ற அலைச்சல் காரணமாக சிலருக்கு சோர்வு, அசதி ஏற்பட இடம் உண்டு. நெருங்கிய ரத்த உறவுகளை மிகவும் கவனமாக இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
குடும்பம், பொருளாதார நிலை:
பேச்சில் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். முடிந்த வரையில் குடும்பத்தில் ஏற்படும் தேவை இல்லாத கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளப்பாருங்கள். பண வரவுகள் பெரும்பாலும் உங்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். அலைச்சல் அதிகம் காணப்பட்டாலுமே கூட, உங்களது அனைத்துத் தேவைகளும் பெரும்பாலும் நல்ல படியாகத் தான் பூர்த்தி ஆகும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இழுபறி நிலை நீடித்தாலுமே, இறுதியில் எல்லாம் நல்ல படியாக முடிந்தேறும். அதனால் கவலை வேண்டாம்.
கொடுக்கல்-வாங்கல்:
பணப் பரிமாற்ற விஷயங்களில் முன்பு இருந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும். எனினும் கூடுமான வரையில் பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். காரணம், கொடுக்கல்-வாங்கலில் நீங்கள் மிகவும் நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்படவும். தொழில், வியாபாரத்தில் கூட பெரிய தொகையை கையாளும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். பங்குச் சந்தை, யூக வணிகங்களில் யோசித்து ஈடுபடுங்கள். கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைக்க வேண்டிய கால கட்டம் இது.
தொழில், வியாபாரம்
தொழில், வியாபாரத்தில் முன் போல இல்லாமல் நெருக்கடிகள் சற்றே தணியும். எனினும் போட்டிகள் அதிகம் காணப்படும் தான். ஓயாமல் கடுமையாக உழைக்க வேண்டிய கால கட்டம் இது. தொழில் வளர்ச்சிக்காக சிலர் கடன் வாங்கவும் கூட நேரிடலாம். வெளி நபர்கள் மூலமாக தொழில் ரீதியாக சிறு, சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். உங்கள் பேச்சில் அதிகப் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய கால கட்டம் இது. கால நேரம் பார்க்காமல் கடினமாக உழைத்தால் கண்டிப்பாக உங்கள் முயற்சி வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம்.
உத்யோகம்:
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலுமே, முன் போல இல்லாமல், சிற்சில சலுகைகள் கிடைக்கப்பெறும். உங்கள் மீது இருந்த வீண் பழிச் சொற்கள் விலகும். எதிர்பார்க்கின்ற பதவி உயர்வுகள் தாமதம் ஆனாலுமே, இறுதியில் உங்களுக்கு வந்து சேரும். எனினும் உங்களது ஓய்வு நேரத்தில் கூட அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். முடிந்த வரையில் மேலதிகாரிகள் கோபப் படுத்தினாலும் அமைதியாக இருங்கள். தேவை இல்லாத இடமாற்றங்களை அப்போது தவிர்க்கலாம். சிலர் வேலை அல்லது உத்யோகம் காரணமாக குடும்பத்தை விட்டு இந்த சனிப் பெயர்ச்சி காலத்தில் வெளியூர் அல்லது வெளிநாடு கூட செல்ல வேண்டி வரலாம்.
அரசியல்
உங்களுக்கு இருந்த கடந்த கால சோதனைகள் குறையும். எனினும், மேடைப் பேச்சுகளில் மட்டும் நிதானத்தை கடைபிடியுங்கள். முடிந்த வரையில் எதையும் யோசித்துப் பேசுவது நல்லது. முக்கிய விவகாரங்களில் முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதில் சில இடையூறுகள் சிலருக்கு ஏற்படலாம். எனினும் அதனை எல்லாம் சமாளித்து விடுவீர்கள். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்கவும். முடிந்த வரையில் மேலிடத்தின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் முன் போல இல்லாமல் ஓரளவு உங்களுக்கு சாதகமாக இருந்தாலுமே, கேட்ட விலை கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். சிலருக்கு அரசு உதவிகள் மிகவும் தாமதம் ஆகி கிடைக்கலாம். பராமரிப்பு செலவுகள் அதிகரித்து காணப்படும். அதனால் போட்ட முதலீட்டை புத்திசாலித்தனமாக சற்று பாடுபட்டே எடுக்க வேண்டி இருக்கும். கூலியாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. முடிந்த வரையில் தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். பங்காளிகளிடம் பார்த்துப் பேசுங்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பெண்கள்
குடும்பத்தில் பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலுமே சமாளித்து விடுவீர்கள். சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து கூட உதவிகள் கிடைக்கப்பெறும். அவ்வப்போது சிறு, சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட இடம் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் சில கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டி இருக்கும். முடிந்த வரையில் வேலை பளு இருந்தாலுமே கூட நேரத்திற்கு உண்டு, உறங்க முயற்சி செய்யுங்கள். புதிதாக அறிமுகம் ஆகும் அந்நிய நபர்களிடத்தில் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்த்திடுங்கள். பிறருக்கு வாக்குறுதி கொடுத்தீர்கள் என்றால் அதனை காப்பாற்றுவதற்குள் போதும், போதும் என்றாகி விடலாம். அதனால் வாக்குறுதிகளை யோசித்துக் கொடுங்கள்.
கலைஞர்கள்
உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். எனினும் தொழில் போட்டி காரணமாக ஒரு சில தேவை இல்லாத இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு ஓரளவே சாதகமாக இருக்கும். பட வாய்ப்பு காரணமாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அலைச்சல் காரணமாக உடல் ரீதியாக அசதி ஏற்பட இடம் உண்டு. திறமையாக செயல்பட்டு, கடுமையாக உழைத்தும் கூட கேட்ட சம்பளம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு.
மாணவ-மாணவியர்
சற்று கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எனினும் உங்களது உழைப்பு வீண் போகாது. தேவை இல்லாத நட்புகளை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். முடிந்த வரையில் தேவை இல்லாத விவகாரங்களில் தலையிட்டு பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க குல தெய்வத்தை வேண்டிப் புறப்படுங்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் தேவை இல்லாத சாகசங்களில் ஈடுபட வேண்டாம். பெற்றோர், ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். உடன் இருக்கும் மாணவர்களுடன் வீண் விவாதம் வேண்டாமே.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
பேச்சில் அதிகப் பொறுமையுடன் இருக்க வேண்டிய கால கட்டம். கோபத்தில் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அலைச்சல் அதிகம் இருக்கும் கால கட்டம் தான். பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். அப்போது அலைச்சல் குறைய இடம் உண்டு. நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். பணப் பரிமாற்ற விஷயங்களில் அதிகம் நீங்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. சுப காரிய முயற்சிகள் சற்று அலைச்சலைத் தந்தாலுமே இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும் வாய்ப்பு உண்டு. அந்த வகையிலும் கூட சிலருக்கு சுப செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையலாம். அதனால், பண விஷயங்களில் சிக்கனமாக இருந்து கொள்ளுங்கள். பணம் வரப்போகிறது என நினைத்து எந்த ஒரு செயலிலும் ஈடுபட வேண்டாம். பணம் கைக்கு வந்த பிறகு வேண்டும் என்றால், வீடு, வாகனம் குறித்த பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ளவும். காரணம் வர வேண்டிய பணம் சிலருக்கு தாமதம் ஆக இடம் உண்டு. கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக போட்டிகள் இருந்தாலுமே கூட நீங்கள் அதனை இறுதியில் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகரித்தே காணப்படும். எனினும் மேலதிகாரி உங்களைப் புரிந்து கொள்வார். சக ஊழியர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். அப்போது உத்யோகத்தில் மேன்மை அடைவீர்கள்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்களது முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம் இது. பேச்சில் கூட அதிக நிதானத்தை மேற்கொள்ளுங்கள். நெருங்கியவர்களிடம் கூட அதிக பொறுமையை கடைபிடிக்க வேண்டி இருக்கும். யாரும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் அவ்வப்போது வந்து போக இடம் உண்டு. சிலருக்கு காதல் கசக்கும். பெண்கள் விஷயத்தில் குறிப்பாக இந்த ராசியில் பிறந்த இளைஞர்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் கவலைகள் ஏற்பட இடம் உண்டு. எனினும், 22.4.2023 முதல் குரு பகவான் உங்களது ராசிக்கு 4 ஆம் இடத்தில் வருவது ஒரு சில ஆறுதலான பலன்களை தர இடம் உண்டு. மேற்படி தேதிக்குப் பிறகு தொழில் அல்லது வியாபாரத்தில் சில நல்ல மாற்றங்கள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு புதிய வேலை கிடைக்க இடம் உண்டு. உத்யோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும். எனினும், கடும் வேலை பளு தவிர்க்க முடியாது. தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வேலை ஆட்கள் கிடைப்பார்கள். பெண்கள் புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் நெருக்கடிகள் ஓரளவு குறைந்து ஏற்றமான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாகக் குறையும். எதிர்பாராத பண வரவுகள் சிலருக்கு உதவியாக இருக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். அதே சமயத்தில் செலவுகளை தவிர்க்க முடியாது தான். எனினும், பொருளாதாரம் ஏற்ற-இறக்கமாகவே இருந்தாலும் கூட நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள். அதனால் கவலை வேண்டாம். சில முயற்சிகள் கடும் அலைச்சலுக்குப் பிறகே வெற்றி தரும். முடிந்த வரையில் அலைச்சலை குறைக்க பயணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளவும். கணவன்-மனைவி இடையே சிறு, சிறு அவிப்பிராய பேதங்கள் வந்து போகலாம். தொழில், வியாபாரத்தில் ஒரு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் ஆதரவு ஒரு சிலருக்கு மட்டுமே நன்மை தரும். முடிந்த வரையில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்துக் காணப்பட்டாலுமே அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்களது திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறும். சிலருக்கு மேலதிகாரியின் பாராட்டு நன்மை தரும். எனினும், எதிர்பார்த்த சலுகைகள் மட்டும் சற்று தாமதமாகக் கிடைக்கப்பெறும். ஆனால், கிடைக்காமல் இருக்காது. மொத்தத்தில், உங்களது உழைப்பு வீண் போகாது.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்க்கும் போது சிலருக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் அதனை தைரியத்துடன் சமாளித்து நீங்கள் முன்னேறுவீர்கள். உங்களின் கடின உழைப்பால் சமூகத்தில் உன்னத நிலையை அடைவீர்கள். சோதனைகள் பல வந்தாலுமே எடுக்கும் வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். குரு பகவான் இந்தக் கால கட்டத்தில் வக்கிர கதியில் இருப்பதால், செலவுகள் அதிகரித்தாலுமே, நீங்கள் அதனை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து கூட உதவிகள் கிடைக்கப்பெறும். ராகு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை இந்தக் கால கட்டத்தில் அதிகரிக்கும். இல்லத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் இந்தக் கால கட்டத்தில் கைகூடும். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி நீங்கள் ஓரளவு லாபம் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்துக் காணப்பட்டாலுமே, இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த உயர்வுகள் வந்து சேரும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். எனினும், அந்த இடமாற்றம் பிற்காலத்தில் உங்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் இருக்கும். பெண்களுக்கு உடல் உழைப்பு அதிகரித்துக் காணப்படலாம். அதனால் அவ்வப்போது அசதி, சோர்வு வந்து போக இடம் உண்டு. எனினும், அதையும் கூட சமாளித்து குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் நீங்கள் நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். மொத்தத்தில், நன்மை-தீமை கலந்து நடக்கும் காலம். நன்மைகள் மேலோங்க சனிப் ப்ரீத்தி செய்து கொள்ளுங்கள்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் அவ்வப்போது மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும். சிலருக்கு கேட்ட இடத்தில் இருந்து கூட உதவிகள் கிடைக்கப்பெறும். நெருக்கடிகள் இருந்தாலுமே எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். அலைச்சல்கள் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. பொருளாதாரம் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் கூட உங்களது தேவைகள் தக்க சமயத்தில் பூர்த்தி ஆகும். சிலருக்கு நெருக்கடியான கால கட்டத்தில் எதிர்பாராத இடத்தில் இருந்து கூட உதவிகள் இறை அருளால் கிடைக்கப்பெறும். இதனால் சிலருக்கு இந்தக் கால கட்டத்தில் இறை நம்பிக்கை மேலோங்கவும் செய்யும். பிள்ளைகள் வழியில் சின்னச், சின்ன கவலைகள் வந்து போக இடம் உண்டு. பெரிய மனிதர்களின் ஆதரவு சிலருக்கு ஏற்படும். அதன் மூலமாக எதிர்காலத்தில் சில நன்மைகளை அடைவீர்கள். வழக்குகள் சிலருக்கு சாதகம் ஆகும். பூர்வீக சொத்து விஷயங்களில் பங்காளிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளுக்கு ஒரு நல்ல முடிவு அல்லது தீர்வு எட்டப்படும். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலுமே கூட, இறுதியில் எதிர்பார்த்த லாபத்தை போராடிப் பெற்று விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிலருக்கு புதிய அனுபவங்கள் ஏற்படும் காலம் இது. அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு நன்மை தரும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரித்தாலுமே, உடன் வேலை செய்பவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு உதவ முற்படுவார்கள். சிலருக்கு அதிகாரிகளின் தயவு கிடைத்து காரியங்கள் மிகவும் வேகமாக நல்ல படியாக நடந்தேறும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் மட்டும் தாமதம் ஆகலாம். எனினும், இறுதியில் கண்டிப்பாக இரட்டிப்பாக எல்லாம் கிடைக்கப்பெறும். முன்பு இல்லாத மன நிம்மதி இப்போது இந்த ராசியில் பிறந்த பலருக்கு ஏற்படும். அதே சமயத்தில் தேவை இல்லாத பயணங்களை மட்டும் இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். பண விஷயங்களில் குறிப்பாக பிறருக்கு வாக்குறுதி தராதீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் மட்டும் கூடுதல் நிதானம் தேவைப் படும் காலம். மொத்தத்தில் தீமைகள் குறைந்து ஓரளவு நன்மைகள் ஏற்படும் காலம் இந்தக் காலம்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
உங்களுக்கான பிரச்சனைகள் எல்லாம் இந்தக் கால கட்டத்தில் படிப்படியாகக் குறைந்து ஏற்றம் ஏற்படும். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். முடிந்த வரையில் கோபம் கொண்டாலுமே, பேச்சில் அதிக நிதானத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் ராசிக்கு தொடர்ந்து 3 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு கண்டிப்பாக பல விதங்களில் உதவுவார். ராகுவின் சஞ்சாரத்தால் மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும். துணிச்சலான சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். 1.5.2024 முதல் குரு பகவான் 5 ஆம் இடத்திற்கு செல்வது என்பது உங்களுக்குப் பல விதங்களிலும் நன்மை அளிக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக் கூடிய பாக்கியத்தை மேற்படி தேதிக்குப் பிறகான கிரகச்சாரம் தரும். மேற்படி தேதிக்கு பிறகு மாணவர்கள் கூட நல்ல முன்னேற்றம் அடைவார்கள். சிலருக்கு வாங்கிய பழைய கடன் அடைபடும். பிள்ளைகள் வழியில் சுப விசேஷங்கள் எல்லாம் நடந்தேறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேற்படி தேதிக்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கப்பெறும். மேற்படி குரு பெயர்ச்சிக்குப் பிறகு சிலருக்கு நல்ல வேலை கூட கிடைக்கப்பெறும். உங்கள் மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் அகலும். அதனால் மன நிம்மதி உண்டாகும். பிரிந்த குடும்பங்கள் கூட மீண்டும் ஒன்று இணையும் வாய்ப்பு உண்டு. முடிந்த வரையில் கால் முடியாத ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் முயன்ற உதவிகளை செய்யுங்கள். அப்போது சனி பகவானின் பூரண கிருபை உங்களுக்கு நன்மை தரும்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் பெரும்பாலும் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும். உங்களது வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் காலம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. பண வரவுகள் உங்களது தேவைக்கு ஏற்றபடியே இருக்கும். அதனால் செலவுகளை சமாளித்து முன்னேறுவீர்கள். சிறு, சிறு அலைச்சல்கள் வந்து போனாலுமே கூட உங்களது முயற்சி வீண் போகாது. திருமணம் ஆகாத அன்பர்களுக்கு ஏற்ற இடத்தில் வரன் அமையும். அந்த வகையிலும் கூட சிலருக்கு சுப செலவுகள் ஏற்படும் என்பதால், முடிந்த வரையில் பணம் வந்தாலுமே சிக்கனமாக செலவு செய்து வளம் பெறுங்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் கூட அனுகூலமான பலன்கள் வந்து சேரும். தொழில் அல்லது வியாபாரத்தில் சிலருக்கு நல்ல வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கப் பெறும். தொழில் போட்டிகள் காரணமாக இருந்து வந்த தடைகள் அகலும். எதிர்பார்த்த லாபத்தை இறுதியில் நீங்கள் பெறுவீர்கள். வேலை தேடும் அன்பர்களுக்கு தகுதிக்கு ஏற்ப நல்ல வேலை கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்குப் பழைய கடன் கூட அடைபடும். உத்யோக ரீதியாக எதிர்பார்த்த உயர்வுகள் உண்டு. வேலையில் பலருக்கு நல்ல மாற்றங்கள் எதிர்பார்க்கலாம். மொத்தத்தில் அனைத்து வகையிலும், அனைத்துத் தரப்பினருக்கும் நன்மைக்கு ஏதுவான காலம் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் நிதானமாக இருந்து கொள்ளுங்கள். சில கிரக பெயர்ச்சிகள் உங்களுக்கு சாதகமாக இல்லை. நீங்கள் நல்லதை பேசினாலுமே கூட சிலர் அதனைத் தவறாக எடுத்துக் கொள்ள இடம் உண்டு. எனினும், செலவுகள் அதிகரித்துக் காணப்பட்டாலுமே கூட உங்களது பொருளாதாரத் தேவைகள் நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கப்பெறும். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி நல்ல பலனைத் தரும் தான். எனினும், தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்க பிரயாணங்களை திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும் தான். அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் என்றாலுமே, கண்டிப்பாக உங்கள் உழைப்பு வீண் போகாது. தொழில், வியாபாரத்தில் சிறப்பான திட்டங்களை வகுத்து முன்னேறுவீர்கள். எனினும், உங்களது ஓய்வு நேரத்தில் கூட நீங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கும். அதே சமயத்தில் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு திறமையான வேலை ஆட்கள் கிடைக்கவும் இடம் உண்டு. தொழிலை அபிவிருத்தி செய்ய பெரிய முதலீடுகளை சிலர் மேற்கொள்ள வேண்டி வரலாம். உங்களது முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கப்பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுத்த பணிகளை சிறப்பாக முடிப்பீர்கள். உடன் வேலை செய்பவர்களின் உதவி சிலருக்கு ஆறுதல் தரும். மொத்தத்தில் நன்மை-தீமை கலந்து நடக்கும் காலம் என்றாலுமே தீமைகள் விலக விநாயகரை அதிகம் அருகம்புல் சாற்றி வழிபட்டு வரவும். அப்போது உங்களுக்கு வரும் தீமைகள் கூட இறுதியில் நன்மைகள் ஆகும்.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் யாவும் படிப்படியாகக் குறையும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும். குரு பகவானின் 5 ஆம் இடத்து சஞ்சாரத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் எல்லாம் ஏற்படும். பொருளாதார ரீதியாக சிறப்பான பண வரவுகள் எல்லாம் ஏற்படும். அதன் மூலம் உங்களது தேவைகள் அனைத்துமே நல்ல படியாகப் பூர்த்தி ஆகும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் சாதிப்பார்கள். பெண்கள் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை கூட படிப்படியாக மாறும். இதனால் மருத்துவ செலவுகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று கடுமையான போட்டிகள் இருந்தாலுமே கூட, நீங்கள் நினைத்ததை இறுதியில் சாதித்து முன்னேறுவீர்கள். வெற்றியின் பாதையில் கம்பீர நடை போடுவீர்கள். உங்கள் அனைத்து விதமான கஷ்டங்களுக்கும் விடிவு காலம் பிறந்து விட்டது என்று சொன்னால் அது மிகை ஆகாது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உத்யோக ரீதியாக நிம்மதியான நிலை காணப்படும். சிலருக்கு நல்ல அதிகாரிகளின் சகாயம் கிடைக்கப்பெறும். சிலர் நல்ல வேலை கூட மாறுவார்கள். இன்னும் சிலர் உத்தியோகத்தை விட்டு சொந்தத் தொழிலில் கூட இறங்கி சாதிப்பார்கள். இப்படியாக, இந்த ராசியில் பிறந்த அநேகமான அன்பர்களுக்கு நல்ல பலன்கள் தான் ஏற்படும். தேய்பிறை அஷ்டமி நாளில் எட்டு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி பைரவரை கும்பிட்டு வாருங்கள். உங்கள் சாதனைகள் அனைத்தும் அப்போது சரித்திரமாகும். அத்துடன் தீமைகளும் ஒழிந்து போகும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
8, 5, 6,17,14,15
ராசியான நிறம்
நீலம், பச்சை
ராசியான கிழமை
சனி, புதன்
ராசியான கல்
நீலக்கல்
ராசியான திசை
மேற்கு
ராசியான தெய்வம்
ஐயப்பன்
சனி பெயர்ச்சி பலன்கள் - கும்பம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
கும்பம்
(அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம்)
சனிபகவானின் ஆதிக்கத்தில் பிறந்த கும்ப ராசி அன்பர்களே!.. இது நாள் வரையில் உங்களது ராசிக்கு 12 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான். திருக்கணித அடிப்படையில் வருகிற 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கியப்படி 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) உங்களது ராசியிலேயே சஞ்சாரம் செய்ய உள்ளார். இது உங்களுக்கு ஜென்மச் சனியின் காலம். அதனால் சற்று கடுமையாகத் தான் இருக்கும். நீங்கள் எதிலும் மிகுந்த கவனத்தோடும், நிதானத்தோடும் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம், சிலருக்கு அறுவை சிகிச்சைகள் எல்லாம் கூட நடந்தேற இடம் உண்டு. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் கூட அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. தகுந்த இடைவேளையில் மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். நீங்கள் கவனமாக இல்லாவிட்டால், மருத்துவ செலவுகள் உங்களது கையிருப்பை வெகுவாகக் குறைக்க இடம் உண்டு.
அதிகப்படியான பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் காலம் இது. அதனால் எதிலும் நீங்கள் சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சிலருக்கு புதிய கடன்கள் கூட ஏற்பட இடம் உண்டு. உங்களது சொத்துக்களை கூட கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. நீங்கள் நல்லதாகவே பேசினாலும் கூட, அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ள இடம் உண்டு. ஒவ்வொரு செயலிலும் அதிக கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். ரத்த சம்மந்தமான உறவுகளை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சிலருக்கு தேவை இல்லாத வழக்குகள் கூட ஏற்பட இடம் உண்டு. நீங்கள் நல்லதாகப் பேசினாலுமே மற்றவர்கள் அதனைத் தவறாக நினைத்துக் கொள்ள இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே போட்ட முதலீட்டை நீங்கள் எடுக்க இயலும். உங்களது பொருள்களுக்கு சந்தையில் நஷ்டம் இல்லாத நல்ல விலை கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். சிலருக்கு சகோதர வகையில் பிரச்சனைகள் வரலாம். பங்காளிகளுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க இடம் உண்டு. புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் குறிப்பாகப் பெண்கள் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பயணங்களின் சமயத்தில் உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்களுக்கு அரசு வகையில் தேவை இல்லாத நெருக்கடிகள் எல்லாம் ஏற்படும் காலம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்தி விடுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு முன்பை விட சற்று அதிகரித்துக் காணப்படும். எந்த சூழ்நிலையிலும், முடிந்த வரையில் வேலையை மட்டும் விட்டு விடாதீர்கள். கவனமாக உங்களது வேலைகளை காத்துக் கொள்ளுங்கள். புதிய வேலை தேடுபவர்கள் முடிந்த வரையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். விதி உங்களை அதிகம் சோதிக்கும் காலம். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் மற்றும் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் கூட உங்களுக்கு ஏற்படும். குரு பகவான் வரும் 22.4.2023 வரையில் உங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் மட்டுமே உங்களுக்கு நன்மையை செய்யும். ஜென்மச் சனி நடக்கும் இக்கால கட்டத்தில் மேற்படி தேதிக்குப் பிறகு (அதாவது 22.4.2023 க்குப் பிறகு) குரு பகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் அடுத்த ஒரு வருடம் கழித்து 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வார். இந்த இரண்டு இடங்களுமே குரு பகவானுக்கு ஏற்ற இடங்கள் இல்லை. அதனால் இந்த சனிப் பெயர்ச்சி முடியும் காலம் வரையில் பெரும்பாலான கிரகங்களின் சஞ்சாரம் கூட ஏற்ற-இறக்கம் கொண்டு அதிகம் காணப்படுவதால் அடுத்த இரண்டரை ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை தான். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் தாமதம் ஆகலாம் அல்லது உங்கள் சொந்த பந்தங்களே உங்களுக்கு ஏற்பட இருக்கும் சுப காரியங்களுக்கு தடைகளை ஏற்படுத்திப் பார்க்கலாம். அதிக எதிர்மறை விமர்சனங்களை எல்லாம் கடந்து முன்னேற வேண்டி இருக்கும். எனினும், ராகு பகவான் 30.10.2023 வரையில் உங்களது ராசிக்கு 3 இல் சஞ்சரிப்பது என்பது ஒரு சில நன்மைகளை செய்தாலுமே, அதன் பின் மேற்படி ராகு பகவானின் சஞ்சாரமும் அவ்வளவு சாதகம் தரும் நிலையில் இல்லை என்பதால் எதிலும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் எதிர் நீச்சல் போட்டு தான் நீங்கள் முன்னேறும் படியாக இருக்கும். அக்டோபர் 2023 க்கு பிறகு நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருந்து கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியம்
இந்தக் கால கட்டத்தில் உங்களது ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டி இருக்கும். சிலருக்கு அதிக அலைச்சல் காரணமாக அசதி, சோர்வு வந்து போக இடம் உண்டு. சிலருக்கு மருத்துவ செலவுகள் முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரிக்க இடம் உண்டு. சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. உணவு விஷயத்தில் சிலருக்கு ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு ரத்த கொதிப்பு அதிகரிக்க இடம் உண்டு. அதே போல நீரிழிவு நோயாளிகள் சற்று அதிக கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். முடிந்தால் உங்களது கோபத்தை குறைத்துக் கொண்டு தியானம் போன்றவற்றை செய்யுங்கள். எதிலும் பொறுமையுடன் இருந்து கொள்ளுங்கள்.
குடும்பம், பொருளாதார நிலை:
கணவன் மனைவி இடையே தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் வந்து போகலாம். சிலர் பிரச்சனைகளை தூண்டி விட்டு உங்களை பிரிக்கக் கூட முயற்சி செய்யலாம். அதனால், உங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை வெளியில் சொல்லாமல் நான்கு சுவற்றிற்குள் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பேச்சில் கவனமாக இருங்கள். பெரியோர்களை புண்படுத்தி சாபம் தரும் வார்த்தைகளை இக்காலத்தில் பெற்று விடாதீர்கள். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். அதனால் எதிர்காலம் குறித்த பயம் சிலருக்கு வந்து போகும். பொருளாதார பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் சிலர் கடன் கூட வாங்க நேரிடலாம். முடிந்த வரையில் அதிக சிக்கனமாக இருந்து கொள்ளுங்கள். சுப காரியங்கள் அதிக அலைச்சலுக்குப் பிறகே கைகூடும்.
கொடுக்கல்-வாங்கல்:
இந்தக் கால கட்டத்தில் பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். முடிந்த வரையில் எதிலும் நீங்கள் சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் அதிகம் சிந்தித்து செயல்படுங்கள். கொடுத்த கடன் திரும்பி வர இறைவனை அதிகம் வேண்டிக் கொள்ளுங்கள். பண விஷயமாக சிலருடன் வீண் மனஸ்தாபங்கள் வந்து போக இடம் உண்டு. முடிந்த வரையில் பணம் சம்மந்தமாக பிறருக்கு வாக்குறுதி தர வேண்டாம். அதிக தொகையை கையாளும் சமயத்தில் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரம்
தொழில் அல்லது வியாபாரத்தில் அதிக எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். அப்போது தான் அடைய வேண்டிய இலக்கை ஓரளவேனும் உங்களால் அடைய முடியும். அலைச்சல் சற்று அதிகமாகத் தான் இருக்கும். எனினும் உங்களது முயற்சி வீண் போகாது. அதனால் கவலை வேண்டாம். போட்டிகள் அதிகரித்துக் காணப்படும். அதனால் எதிர்பார்க்கும் லாபத்தை அடைய போராட வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பெரிய முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டு செய்யவும். புதிய கிளைகளை திறக்க இது ஏற்ற நேரம் இல்லை. இருப்பதை காப்பதே சற்று போராட்டமாக இருக்கும். வேலையாட்கள் ஒத்துழைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மொத்தத்தில், நீங்கள் செய்யும் பணியில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
உத்யோகம்:
உத்யோகஸ்தர்களுக்கு பணியில் அதிகப்படியான அலைச்சல் காணப்படலாம். மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டிய சூழ்நிலை வரலாம். உத்யோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேர இடம் உண்டு. இதனால் வேலைபளு அதிகரிக்கலாம். அதன் காரணமாக நேரத்திற்கு உண்டு, உறங்க முடியாத நிலை காணப்படலாம். அத்துடன் நீங்கள் ஆரோக்கியத்திலும் கூட அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. சிலருக்கு உடல் உபாதை காரணமாக சரியாக அலுவலகப் பணியை பார்க்க முடியாமல் போகலாம். இதனால் அதிகமான விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். முடிந்த வரையில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வேலையில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வேறு வேலை மாறுவதற்கு இது ஏற்ற நேரம் இல்லை.
அரசியல்
உங்களுக்கு தேவை இல்லாத நெருக்கடிகள் ஏற்படலாம். மேடை பேச்சுகளில் அதிக நிதானத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கும். பிறர் செய்யும் தவறுகளால் மக்கள் மத்தியில் நீங்கள் தேவையற்ற அவப் பெயர்களை எதிர்கொள்ள நேரிடலாம். மக்களின் ஆதரவைப் பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிய நேரமாகும். கட்சிப் பணிகளுக்காக வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு அதிகாரிகளுடன் தேவை அற்ற வாக்குவாதங்கள் வந்து போக இடம் உண்டு. முடிந்த வரையில் கோபத்தை குறைத்து நிதானத்தை மேற்கொண்டால் வாழ்க்கையில் வளம் உண்டு.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். பராமரிப்பு செலவு அதிகரிக்க இடம் உண்டு. நல்ல வேலை ஆட்கள் அமைய இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். போட்ட முதலீட்டை எடுக்க அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். அரசு உதவிகள் நேரத்திற்கு கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். பங்காளிகளுடன் சிலருக்கு சொத்துப் பிரச்சனைகள் கூட தலை தூக்கலாம். ஒவ்வொரு செயலிலும் நீங்களே நேரடியாக தலையிட்டால் தான் வேலை நடக்கும் என்கிற நிலை காணப்படும். இதனால் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். சிலருக்கு புதிய கடன் கூட ஏற்பட இடம் உண்டு என்பதால் முடிந்த வரையில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குறிப்பாக கால் நடை வளர்ப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
பெண்கள்
தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய கால கட்டம் இது. சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அதனால் உணவு விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் வழியில் சிலருக்கு அதிக மனக்கவலைகள் ஏற்படலாம். அசையும், அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்கு கடன்கள் அதிகரிக்க இடம் உண்டு. அதனால் எதிலும் நீங்கள் நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
கலைஞர்கள்
நீங்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே நல்ல புகழை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதிக போட்டிகள் காரணமாக கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கூட கடைசி நேரத்தில் தடைபட இடம் உண்டு. அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். அந்த வகையில் வீண் செலவுகள் ஏற்படலாம். பயணங்கள் பல அலைச்சலை கொடுத்தாலுமே அவை அனுகூலத்தை கொடுக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை கோபப் படுத்தினாலுமே கூட நீங்கள் அதிக நிதானத்தை கைக்கொள்ளுங்கள். பொருளாதாரம் திருப்தியாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
மாணவ-மாணவியர்
கல்வியில் மந்த நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை அடைய கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். முடிந்த வரையில் தேவை இல்லாத வீண் சகவாசத்தை விட்டு முன்னேறும் வழியைப் பாருங்கள். பெற்றோர், ஆசிரியரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு ஒவ்வொரு செயலிலும் யோசித்து செயல்படுவது நல்லது.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்களது தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் கூட அதிக இழுபறியை தரும். மனைவி மற்றும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூட கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பணவரவுக்கு எந்த விதத்திலும் குறைவு இருக்காது. பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் போராடிக் காப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் அதிகப் பொறுமையுடன் இருக்க வேண்டிய காலம் இது. கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகை என்கிற நிலை காணப்படும். கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடும். தொழில், வியாபாரத்தில் நல்ல வேலை ஆட்கள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். சிலருக்கு வேலை ஆட்கள் நஷ்டத்தை ஏற்படுத்த இடம் உண்டு. புதிய கிளைகளை திறக்க இது ஏற்ற நேரம் இல்லை. மாறாக, அனைத்திலும் பொறுமையுடன் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நேரம் இது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்துக் காணப்படலாம். பிறர் வேலையை சேர்த்தும் நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மற்றபடி, பொருளாதார ஏற்ற-இறக்கமாகவே இருந்தாலும் கூட நீங்கள் அதனை சமாளித்து விடுவீர்கள்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உணர்ச்சிவசப்படாமல் எதிலும் நீங்கள் பொறுமையுடன் இருந்து கொள்ளப் பாருங்கள். 22.4.2023 வரையில் குரு பகவான் உங்களது ராசிக்கு 2 இல் இருப்பது உங்களுக்கு சில நன்மைகளை செய்யும். பணம் அதிக அளவில் செலவானாலும், தேவைகள் தக்க சமயத்தில் நிறைவேற குரு பகவான் திருவருள் புரிவார். எனினும், பல்வேறு நெருக்கடிகள் இருக்கும் கால கட்டம் தான். இருந்தாலும் அவற்றை எல்லாம் துணிச்சலாக சமாளித்து நீங்கள் முன்னேறுவீர்கள். முடிந்த வரையில் பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருந்து கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வேலை ஆட்கள் கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கம் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உடன் வேலை செய்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். நீங்கள் நல்லதே சொன்னாலும், அதனை பலர் கெட்டதாகத் தான் பார்ப்பார்கள். யாருமே உங்களை புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஏக்கம் சிலருக்கு இருக்கும். வாழ்க்கை பலவித அனுபவங்களை தரும் காலம் இது. 'நல்லவர்கள் யார்?!.. உங்கள் வாழ்க்கையில் நல்லவர்கள் போலவே இருக்கும் கெட்டவர்கள் யார்?!.' என்பதை சனி பகவான் தோல் உரித்துக் காட்டுவார். உலக ஞானங்கள் எல்லாம் அனுபவமாக ஒருசேர கிடைக்கும் கால கட்டம் இது. எனினும், போராட்டங்கள் அதிகரித்துக் காணப்பட்டாலுமே இறுதியில் உங்களது தனித்திறமையினால் நீங்கள் சாதிப்பீர்கள். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்கள் போராட்டங்கள் ஓரளவே குறையும். எதையும் எதிர்கொண்டு நீங்கள் ஏற்றமான பலன்களை ஓரளவே பெறுவீர்கள். அலைச்சல் இருந்தாலுமே உங்களது முயற்சி வீண் போகாது. ராகுவின் சஞ்சாரம் ஓரளவு சாதகமாக இருப்பதால் மனதில் அவ்வப்போது நிலைமையை சமாளித்து விடலாம் என்கிற தைரியம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படும். உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு இருக்கும். அலைச்சலை தவிர்க்க முடியாது தான். எனினும், உங்களது முயற்சி வீண் போகாது. தொழில் அல்லது வியாபாரத்தில் போட்டிகள் அதிகம் இருக்கும் தான். வேலை ஆட்கள் ஒத்துழைக்க மறுப்பது சிலருக்கு கவலை அளிக்கும் தான். எனினும் இறுதியில் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை நீங்கள் பெற்று விடுவீர்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை போராடிக் காப்பீர்கள். செலவுகள் மட்டும் அதிகரித்துக் காணப்படும். முடிந்த வரையில் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். சிலருக்குப் புதிய கடன்கள் ஏற்பட இடம் உண்டு. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவு ஓரளவே இருக்கும். எனினும், சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விலக நேரிடலாம். வேலைக்குச் செல்பவர்கள் உங்களது பணியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்களுடன் ஒத்துழைக்க வில்லையே என்கிற ஏக்கம் சிலருக்கு காணப்படும். எனினும், இறுதியில் அனைத்தையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் தேவை இல்லாத நெருக்கடிகள் எல்லாம் ஏற்படும். உடல் ரீதியாக அசதி, சோர்வு தென்பட இடம் கொடுக்காதீர்கள். எளிதில் முடிக்க வேண்டிய காரியங்கள் கூட அலைச்சலைத் தரலாம். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். நெருங்கியவர்களே நிம்மதிக் குறைவை ஏற்படுத்த இடம் உண்டு. நீங்கள் நல்லதாகப் பேசினாலுமே மற்றவர்கள் அதனை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு, உங்களது வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். நீங்கள் நல்லதாகவே நல்ல நோக்கத்தில் கருத்துக்களை சொன்னாலுமே பிறர் அதனை தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். நியாயப் படி கிடைக்க வேண்டிய பண வரவுகள் சரியான நேரத்தில் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே கூட அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எதிலும் பொறுமையை கடைப்பிடித்து முன்னேறப் பாருங்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய எதிர்ப்புகளைக் கடந்தே முன்னேறுபடியாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு முறைக்குப் பல முறை நன்கு யோசித்து செயல்படுங்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட இடம் உண்டு. இதனால் அவ்வப்போது உடலில் அசதி, ஆயாசம் தென்படலாம். குல தெய்வ பிரார்த்தனை உங்களுக்கு அமைதி தரும்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். சிலர் உங்களை அதிகம் கோபப் படுத்திப் பார்க்கலாம். முடிந்த வரையில் பொறுமையை கடைபிடியுங்கள். கணவன்-மனைவி இடையே இந்தக் கால கட்டத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வர வேண்டிய பணம் கைக்கு வர இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் பிறருக்கு கடன் கொடுக்காதீர்கள். பொருளாதாரம் ரொம்பவே ஏற்ற-இறக்கமாகத் தான் இருக்கும். எனினும், நீங்கள் அதனை ஒருவாறு சமாளித்து விடுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டி இருக்கும். கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் தேவை இல்லாத பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரையில் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுக்க அதிகம் பாடு பட வேண்டி இருக்கும். உங்களது பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் தரப்படலாம். இதனால் வேலை பளு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துக் காணப்படலாம். வேலையை விடுவதற்கு இது ஏற்ற நேரம் இல்லை. நிறைய தெய்வ அருளைப் பெற வேண்டிய கால கட்டம் இது. இறை வழிபாடு மட்டுமே உங்களுக்கு அமைதியைத் தரும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் அதிகம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. கோபத்தை குறைத்து நிதானமாக செயல்படப் பாருங்கள். முடிந்த வரையில், பிறருக்கு உதவி செய்வதாக நினைத்து உங்களுக்கு நீங்களே உபத்திரவத்தை தேடிக் கொள்ளாதீர்கள். குடும்ப விஷயங்களை தேவை இல்லாமல் பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்கள் குடும்ப கஷ்டங்களை கேட்டு மனதிற்குள் மகிழ்ச்சி அடையும் நபர்கள் தான் உங்களை சுற்றி இருப்பார்கள். நிறைய நம்பிக்கை துரோகங்கள் ஏற்படும் கால கட்டம் இது. நீங்கள் மிகவும் அரண் போல நம்பியவர்களே உங்களை புண்படுத்தி தனிமையில் விட்டு, விட்டுச் சென்று விடலாம். தொழில் அல்லது வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் அதிக கண்ணும், கருத்துமாக இருந்தால் மட்டுமே, உங்களால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலை ஆட்களையும், கூட்டாளிகளையும் கூட அதிகம் அனுசரித்துச் செல்லுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் எங்கு வேலை மாற நினைத்தாலுமே உங்கள் விதி உங்களை விடாது. அதனால், பொறுமையுடன் சகித்துக் கொண்டு சூழ்நிலையை சமாளியுங்கள். 1.5.2024 முதல் குரு பகவான் உங்களது ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளதால், உங்களுக்குள்ள பொருளாதார நெருக்கடிகள் சற்றே குறைய இடம் உண்டு. முடிந்த வரையில் பேச்சில் அதிக நிதானத்தை மேற்கொண்டு முன்னேறப் பாருங்கள்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் காலத்தில் உங்களுக்குள்ள பிரச்சனைகள் சற்றே குறைய இடம் உண்டு. எதிர்பாராத இடத்தில் இருந்து சில உதவிகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொய்வு நிலை படிப்படியாக குணம் ஆகும். செலவுகள் அதிகரித்தாலுமே, உங்களது தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரித்தாலுமே எதிர்பார்த்த நன்மைகளை இறுதியில் போராடிப் பெறுவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதம் ஆனாலும் இறுதியில் நல்ல படியாகக் கிடைக்கப் பெறும். கொடுக்கல்-வாங்கலில் தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு எல்லாம் கூட தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து விஷயங்களில் கூட ஒரு சில நல்ல மாற்றங்கள் ஏற்பட இடம் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் இருக்கும் தேக்க நிலை படிப்படியாக மாறும். அதிகாரிகள் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் ஆறுதல் தரும். எனினும், திடீர் பயணங்கள் சிலருக்கு ஏற்படும். அது அதிக அலைச்சலையும், உடல் சோர்வையும் தரும். வெளி இடங்களுக்கு செல்லும் சமயத்தில் உணவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் நீங்கள் அதிக கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் பேச்சினால் சின்னச், சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. பண விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். கோபத்தை குறைத்து பேச்சில் பொறுமையை கடைபிடியுங்கள். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிராகத் திரும்பலாம். அதனால் கைப்பேசியில் பங்காளிகளுடன் பேசும் சமயத்தில் கூட உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை விட்டு விடாதீர்கள். பண வரவு ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்பத் தேவைகள் ஓரளவு பூர்த்தி ஆகும். முடிந்த வரையில் தேவை இல்லாத ஆடம்பர செலவுகளை இனம் கண்டு தவிர்க்கப் பாருங்கள். ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல் பட்டால் அப்போது அடைய வேண்டிய இலக்கை ஓரளவு நீங்கள் போராடி அடைவீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் சின்னச், சின்ன பிரச்சனைகள் அடிக்கடி தோன்றி மறையும். கூட்டாளிகளுடன் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். உத்தியோகஸ்தர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். முடிந்த வரையில் அதிகாரிகளுடன் தேவை இல்லாத வாக்கு வாதங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். புதிய வேலை தேடுபவர்கள் கூட இப்போதைக்கு கிடைக்கும் வேலையை பார்ப்பது நல்லது. பெண்கள் நகை, ஆபரணங்கள் போன்ற உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் பொறுமையுடன் இருந்து சோதனைகளை சாதனையாக மாற்ற வேண்டிய கால கட்டம் இது என்று சொன்னால் அது மிகை ஆகாது.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் சோதனைகள் அதிகரித்து காணப்பட்டாலுமே எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் உங்களுக்கு கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நேரத்திற்கு உண்டு, உறங்க முயற்சி செய்யுங்கள். சிலருக்கு திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். மருத்துவ செலவுகளே இருக்காது என்று சொல்ல இயலாது எனினும் மருத்துவ செலவுகள் உங்களுக்கு குறைய வழி பிறக்கும். கணவன்-மனைவி இடையே மட்டும் முடிந்த வரையில் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பேச்சில் அதிக பொறுமையை கடைபிடியுங்கள். அந்நிய நபர்களை குடும்ப விஷயங்களில் தலையிட அனுமதிக்காதீர்கள். உங்களது குடும்பப் பிரச்சனைகளை வெளி நபர்களிடத்தில் பகிர்வதால் உங்களுக்குத் தொல்லைகள் தான் ஏற்படும். தொழில், வியாபாரம் சற்று ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். உங்களது உழைப்பிற்கான பலனை அடைய உடன் இருப்பவர்களே தடையாக இருப்பார்கள். வேலை ஆட்களையும், கூட்டாளிகளையும் அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். வேலைக்கு செல்பவர்கள் உங்களது பணியில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். சக ஊழியர்களுக்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். இறை வழிபாடு மட்டுமே இந்த சமயத்தில் உங்களுக்கு ஆறுதல் மற்றும் தேறுதல் தரும்.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
5,6,8,14,15,17
ராசியான நிறம்
வெள்ளை, நீலம்
ராசியான கிழமை
வெள்ளி, சனி
ராசியான கல்
நீலக்கல்
ராசியான திசை
மேற்கு
ராசியான தெய்வம்
ஐயப்பன்
சனி பெயர்ச்சி பலன்கள் - மீனம்
திருக்கணித சித்தாந்தப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 3 ஆம் தேதி அதாவது 17.1.2023 செவ்வாய் கிழமை மாலை 06.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதலாகி 29.3.2025 இரவு 9.45 மணி வரையில் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
வாக்கிய பஞ்சாங்கப்படி நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி 29.3.2023 புதன் கிழமை பகல் 12.51 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுதல் ஆகிறார். கும்ப ராசிக்கு செல்லும் சனி பகவான் 24.8.2023 இல் பின்னோக்கி மகர ராசிக்குச் சென்று 20.12.2023 இல் கும்ப ராசிக்குச் சென்று 6.3.2026 காலை 8.24 மணி வரை கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் திருக்கணிதப்படி..
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 14.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 14.5.2025 முதல் 2.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு-கேது திருக்கணிதப்படி
ராகு மேஷ ராசியில், கேது-துலாம் ராசியில் 12.4.2022 முதல் 30.10.2023 வரை
ராகு மீன ராசியில், கேது கன்னி ராசியில் 30.10.2023 முதல் 18.5.2025 வரை
ராகு கும்ப ராசியில் கேது சிம்ம ராசியில் 18.5.2025 முதல் 5.12.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஆண்டுக் கோளான குரு பகவான் வாக்கியப்படி
குரு பகவான் மீன ராசியில் 13.4.2022 முதல் 22.4.2023 வரை
குரு பகவான் மேஷ ராசியில் 22.4.2023 முதல் 1.5.2024 வரை
குரு பகவான் ரிஷப ராசியில் 1.5.2024 முதல் 11.5.2025 வரை
குரு பகவான் மிதுன ராசியில் 11.5.2025 முதல் 10.6.2026 வரை
சனி கும்பத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ராகு- கேது வாக்கியப்படி
ராகு மேஷ ராசியில், கேது துலாம் ராசியில் 21.3.2022 முதல் 8.10.2023 வரை
ராகு மீன ராசியில் கேது கன்னி ராசியில் 8.10.2023 முதல் 26.4.2025 வரை
ராகு கும்ப ராசியில், கேது சிம்ம ராசியில் வரும் 26.4.2025 முதல் 13.11.2026 வரையில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனி கும்பத்தில் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ரிஷப ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் சனியும், கடக ராசிக்கு அஷ்டம சனியும், சிம்ம ராசிக்கு கண்டச் சனியும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியும், மகர ராசிக்கு ஏழரைச் சனியில் பாதச் சனியும், கும்ப ராசியில் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியும், மீன ராசிக்கு ஏழரைச் சனியில் விரயச் சனியும் நடைபெறவுள்ளது. இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் மேஷம், கன்னி, தனுசு ராசி நேயர்களுக்கு அற்புதமான அனுகூல பலன்கள் உண்டாகும். மிதுனம், துலா ராசி நேயர்களுக்கு மத்திமமான பலன்களும் ஏற்படும். வாருங்கள் 12 ராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்களை விரிவாகக் காணலாம்.
மீனம்
(பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஸ்ரீ குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த மீனம் ராசி அன்பர்களே!.. இது நாள் வரையில் சனி பகவான் உங்களது ராசிக்கு 11 ஆம் இடத்தில் சஞ்சரித்தார். இதனால் சில நல்ல பலன்களை நீங்கள் கண்டீர்கள். ஆனால், தற்போது இனி வரும் காலங்களில் நிலைமையே சற்று தலைகீழாக இருக்கலாம். இப்படி சொல்லக் காரணம் திருக்கணிதப்படி வரும் 17.1.2023 முதல் 29.3.2025 வரையில் (வாக்கிய அடிப்படையில் 29.3.2023 முதல் 6.3.2026 வரையில்) சனி பகவான் உங்களது ராசிக்கு விரய ஸ்தானம் என்னும் 12 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். இது முதல் உங்களுக்கு ஏழரை சனியின் காலம் ஆகும். அதனால் நீங்கள் எதிலும் கூடுதல் பொறுமையுடன் இருக்க வேண்டிய கால கட்டம் இது. கடினமாக உழைத்தால் மட்டுமே நீங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. எந்த ஒரு செயலிலும் நீங்கள் எதிர்நீச்சல் போட்டுத் தான் முன்னேறும் படியாக இருக்கும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் சிலருக்கு ஏற்பட இடம் உண்டு. பண விஷயத்தில் மிக, மிக சிக்கனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. அதிக முதலீடுகளை நன்கு யோசித்து திட்டமிட்டு செய்யப் பாருங்கள். ஏமாற்றுப் பேர்வழிகள் பலர் உங்களை ஏமாற்றி பணம் பறிக்க நினைப்பார்கள். மனிதர்களில் நல்லவர்கள் யார்?!.. தீயவர்கள் யார்?!.. என்பதை சனி பகவான் தோல் உரித்துக் காட்டுவார்.
ஆரோக்கியத்தில் கூட கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படுவதில் இடையூறுகள் ஏற்படும். கடினமான வேலை பளு காரணமாக சிலருக்கு ஓய்வு நேரம் குறைய இடம் உண்டு. கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. தொழில் அல்லது வியாபாரத்தில் தேவை இல்லாத நெருக்கடிகள் இருந்தாலுமே உங்களின் தனித்திறமையினால் எதையும் சமாளித்து ஓரளவு போராடி வெல்வீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களின் தொல்லை காரணமாக சில திடீர் நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். முடிந்த வரையில் நல்ல வேலை ஆட்கள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். தொழில் போட்டிகள் காரணமாக புதிய சலுகைகளை அறிவிக்க வேண்டி இருக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய கிளைகளை திறக்க இது ஏற்ற நேரம் இல்லை. குடும்ப உறுப்பினர்களிடம் கூட சில வாக்குவாதங்கள் அடிக்கடி வந்து போக இடம் உண்டு. அதனால் முடிந்த வரையில் பொறுமையை கடைபிடிக்கப் பாருங்கள்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய கால கட்டம் இது. உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். முடிந்த வரையில் உங்களிடம் கொடுத்த பணியை நீங்களே பாருங்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகளுடன் பேசும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் இந்தக் கால கட்டத்தில் தாமதம் ஆனாலுமே பிற்காலத்தில் உங்களுக்கு கிடைக்கப்பெறும். அதனால் கவலை வேண்டாம்.
சனி பகவான் 12 ஆம் இடத்தில் இருக்கக் கூடிய இந்தக் கால கட்டத்தில், 22.4.2023 முதல் 1.5.2024 வரையில் குரு பகவான் உங்களது ராசிக்கு 2 ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இந்தக் காலம் மட்டும் உங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். அட மழையில் குடை போல இந்த குரு பெயர்ச்சி உங்களை காப்பாற்றும். மேற்படி கால கட்டத்தில் உங்களுடைய பொருளாதார நிலை ஓரளவு திருப்தி தரும். உங்களது பெரும்பாலான நெருக்கடிகள் இந்தக் கால கட்டத்தில் குறையும். சுப காரியங்கள் சிலருக்கு நடந்தேறும். அது சம்மந்தமான சுப செலவுகள் ஏற்படவும் இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் சிலருக்கு மகிழ்ச்சி ஏற்படும். உத்யோக ரீதியாகக் கூட நல்ல பலன்களை நீங்கள் காணுவீர்கள். கணவன்- மனைவி இடையே மட்டும் அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய கால கட்டம் ஆகும். ராகு/ கேதுவின் சஞ்சாரம் இந்தக் காலத்தில் சாதகமாக இல்லை என்பதால் ஒவ்வாமை சார்ந்த பிரச்சனைகள் சிலருக்கு வந்து போகலாம். அதனால் உணவு விஷயத்தில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். பேச்சில் மிகவும் பொறுமையுடன் இருந்து நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். தேவை இல்லாத வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். மற்றபடி, குல தெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.
உடல் ஆரோக்கியம்
உங்களுக்கு தேவை இல்லாத அலைச்சல்கள் ஏற்பட இடம் உண்டு. அதன் காரணமாக உடல் அசதி, சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத படி இடைஞ்சல்கள் ஏற்படலாம். சிலருக்கு திடீர், திடீர் என்று மருத்துவ செலவுகள் அவ்வப்போது ஏற்பட்டு உங்களது கையிருப்பை குறைக்க இடம் உண்டு. உடல் நலத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்து கொள்ள வேண்டிய தருணம் இது. முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளை ஓரளவு சமாளிக்கலாம்.
குடும்பம், பொருளாதார நிலை:
பேச்சில் அதிகப் பொறுமையுடன் இருக்க வேண்டிய கால கட்டம் இது. உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். பணப் பரிமாற்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். அவ்வப்போது வீண் செலவுகள் ஏற்பட இடம் உண்டு. சிலருக்குப் புதிய கடன்கள் கூட ஏற்படலாம். முடிந்த வரையில் செலவை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது. குடும்ப விஷயங்களை முடிந்த வரையில் தேவை இல்லாத நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கொடுக்கல்-வாங்கல்:
பொருளாதார ரீதியாக தேவை இல்லாத நெருக்கடிகள் சிலருக்கு ஏற்படலாம். கொடுக்கல், வாங்கல் போன்ற விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளவும். பூர்வீக சொத்து விஷயங்களில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். முடிந்த வரையில் உங்கள் கையிருப்பை வெளியில் சொல்லாதீர்கள். சொந்த-பந்தங்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். ஒரு விஷயத்தில் பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் அதிக நிதானத்துடன் இருந்து கொள்ளுங்கள். புதிதாக அறிமுகம் ஆகும் சில இடைத்தரகர்களை சோதித்து நம்புங்கள். கொடுத்த கடன் திரும்பி வர இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். தேவை இல்லாத வழக்குகள் சிலருக்கு ஏற்பட இடம் கொடுக்காதீர்கள். மன ரீதியாக சில சஞ்சலங்கள் தவிர்க்க முடியாது தான். எனினும் குல தெய்வ வழிபாட்டை அவ்வப்போது செய்து வந்தீர்கள் என்றால், அது உங்களுக்கு ஆறுதல் மற்றும் தேறுதல் தரும்.
தொழில், வியாபாரம்
பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்யவும். எந்திரங்கள் பழுதாகி சிலருக்கு பெரிய தொகையை செலவு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல வேலை ஆட்கள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். அதிக முதலீடுகளை செய்யும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். மொத்தத்தில், தொழில் அல்லது வியாபார ரீதியாக மிகவும் சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் மட்டுமே உங்களால் போட்ட முதலீட்டை எடுக்க இயலும்.
உத்யோகம்:
உத்யோகத்தில் வேலை பளு சற்று அதிகரித்தே காணப்படும். உடன் இருப்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு மற்றும் சூழ்நிலை காரணமாக பணியில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலை காணப்படலாம். உத்யோக ரீதியாக திடீர் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்நிலையில், வெளியூர் பயணங்களை திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். சில நேரங்களில் உடன் வேலை செய்பவர்கள் செய்யும் தவறுகளுக்குக் கூட நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். புதிய வேலை தேடுபவர்கள் இப்போதைக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். பெரிய சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க கோபத்தை குறைத்து மிகவும் நிதானமாக செயல்படுங்கள்.
அரசியல்
சமூகத்தில் உங்களுடைய பெயரை காப்பாற்றிக் கொள்ள தீவிரமாக செயல் பட வேண்டிய நேரம் இது. உங்களது கைக் காசை போட்டு சில சமயங்களில் கட்சிப் பணிகளை நீங்கள் செய்ய வேண்டி இருக்கும். பேச்சில் நிதானமாக இருந்து கொள்ளுங்கள். கைப்பேசியில் உடன் இருப்பவர்களுடன் பேசும் சமயத்தில் கூட கவனமாகப் பேசுங்கள். தேவை இல்லாமல் கட்சித் தலைமையை விமர்சிக்க வேண்டாம். சிலருக்கு தலைமை இடத்தில் இருந்து ஏமாற்றங்கள் ஏற்பட இடம் உண்டு. அரசு அதிகாரிகள் உங்களுடன் ஒத்துழைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் ஓரளவு சிறப்பாக இருந்தாலுமே, கேட்ட விலை கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். அரசு உதவி தக்க சமயத்தில் கிடைக்க பாடு படும் படி இருக்கும். கூலி ஆட்கள் ஒத்துழைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு செயலையும் மகா கணபதியை அருகம்புல் சாற்றி கும்பிட்டு ஆரம்பியுங்கள். தடைகள் எங்கும், எதிலும் காணப்படுகிறது. அதனால் கணபதி வழிபாட்டை அதிகம் செய்யுங்கள். சிலருக்கு புதிய கடன் ஏற்படலாம். சிலருக்கு பங்காளிகளுடன் திடீர் மோதல்கள் ஏற்பட இடம் உண்டு. கோபத்தை குறைத்து, பொறுமையை கடைப்பிடித்து எங்கும், எதிலும் அதிக நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணம் இது.
பெண்கள்
திடீர் என்று எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். பேச்சில் சற்று நிதானத்துடன் இருந்தீர்கள் என்றால், குடும்பத்தில் ஏற்பட இருக்கும் பெரிய, பெரிய பிரச்சனைகளை உங்களால் எளிதில் தவிர்க்க இயலும். நேரத்திற்கு, உண்டு-உறங்க முடியாத நிலை சிலருக்கு காணப்படலாம். சுப காரியங்கள் சற்று அலைச்சலைத் தந்தாலுமே இறுதியில் நன்மை தரும். அதனால், அது பற்றி கவலைப் பட வேண்டாம். வெளி இடங்களுக்கு செல்லும் சமயத்தில் உங்களது உடமைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைஞர்கள்
உங்கள் திறமைக்கு ஏற்ற சிறப்பான வாய்ப்புகள் கிடைக்க இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். அப்படியே தசா புத்தி சொந்த ஜாதகத்தில் நன்றாக இருந்து, நல்ல வாய்ப்பு ஒருவேளை கிடைத்தாலுமே, அதில் எதிர்பார்த்த பணம் அல்லது சம்பளம் வர சாதுர்யமாகப் பேச வேண்டி இருக்கும். எப்போதுமே பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அதே சமயத்தில், சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம். ஆனால், வீண் செலவுகள் தவிர்க்க முடியாது தான். முடிந்த வரையில் சிக்கனமாக இருக்கப் பாருங்கள். மற்றவர்களுக்கு தேவை இல்லாத வாக்குறுதிகளை தர வேண்டாம். பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சமயத்தில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள்.
மாணவ-மாணவியர்
படிப்பில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். அதே சமயத்தில் உங்கள் இலக்கை அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எனினும், உங்களது உழைப்பு வீண் போகாது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். வண்டி, வாகனங்களில் செல்லும் சமயத்தில் அதிக கவனத்துடன் சென்று வாருங்கள். முடிந்த வரையில் ஆபத்தான சாகசப் பயணங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள். சில தேவை இல்லாத நட்புகள் ஏற்பட்டு பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரையில், பெற்றோர் ஆசிரியர்களின் கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள். எதிலும் பொறுமையை கடைபிடியுங்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 17.1.2023 முதல் 14.3.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில், உங்களது சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பண விஷயத்தில் அதிக சிக்கனத்துடன் இருக்க வேண்டிய கால கட்டம் இது. எனினும், குடும்பத்தில் சுப காரிய பேச்சு வார்த்தைகள் அலைச்சலை தந்தாலுமே இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். அதனால் கவலை வேண்டாம். பிள்ளைகள் வழியில் சிலருக்கு அனுகூலம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் சிலருக்கு ஆதாயம் ஏற்பட இடம் உண்டு. எனினும், இந்தக் கால கட்டத்தில் பங்காளிகளுடன் பேசும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் நீங்கள் இருந்து கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் தற்போது கிடைக்கும் சின்னச், சின்ன வாய்ப்புகளைக் கூட தவற விடாமல் பிடித்துக் கொண்டு முன்னேறப் பாருங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரிக்க இடம் உண்டு. முடிந்த வரையில் பணிகளை தக்க சமயத்தில் முடிக்க முயற்சியை மேற்கொள்ளுங்கள். மேலதிகாரிகளுடன் அதிருப்தி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 15.3.2023 முதல் 17.6.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் நீங்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தேவை இல்லாத அலைச்சல் சற்று அதிகரித்துக் காணப்படும். வீண் குழப்பங்கள் ஏற்பட்டு மன நிம்மதி குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம், இந்தக் கால கட்டம். கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். எனினும், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் 22.4.2023 முதல் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் செல்வது என்பது மேற்படி பிரச்சனைகளை குறைக்க உதவும். மேற்படி தேதிக்குப் பிறகு உங்களது பொருளாதார நிலை படிப்படியாக உயரும். சிலருக்குப் பழைய கடனை அடைக்க வழி பிறக்கும். திடீர் பண வரவுகள் உங்களது தேவைகளை நல்ல படியாகப் பூர்த்தி செய்யும். வாழ்க்கையில் குரு அருளால் ஒரு பிடிப்பு, தன்னம்பிக்கை ஏற்படும். சனி கெடுத்தாலும், குரு உங்களுக்கு கொடுப்பார். இதனால் சுப காரிய பேச்சு வார்த்தைகள் சற்று அலைச்சலை தந்தாலுமே, இறுதியில் எல்லாமே நல்ல படியாக நடந்தேறும். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் முனைப்புடன் செயல்படும் பட்சத்தில் போட்ட முதலீட்டை எடுத்து விடலாம். உத்யோகஸ்தர்களுக்கு அதிகாரிகள் மூலமாக சில அழுத்தங்கள் ஏற்பட்டாலுமே நீங்கள் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயரை வாங்குவீர்கள். சிலருக்கு உத்யோக ரீதியாக மேற்படி தேதிக்குப் பிறகு நல்ல மாற்றம் கூட ஏற்பட இடம் உண்டு. இப்படியாக மேற்படி குரு பெயர்ச்சிக்குப் பிறகு சனி பகவானின் பாதிப்புகள் உங்களுக்கு ஓரளவு குறையும். அதனால் கவலை வேண்டாம்.
சனி பகவான் வக்ர கதியில் 18.6.2023 முதல் 4.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் குறைந்து ஏற்றம் மிகுந்த பலன்களை பெரும்பாலும் பெறுவீர்கள். செலவுகள் காணப்பட்டாலுமே, திடீர் என்று எதிர்பாராத பண வரவு உங்களுக்கு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் இருந்து வந்த நிம்மதி அற்ற நிலை மறைந்து திடீர் ஏற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் குரு அருளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் எல்லாம் கூட நல்ல படியாக நடந்தேறும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளை போராடியாவது நிறைவேற்றுவீர்கள். இதனால் சமூகத்தில் உங்கள் மீது நம்பிக்கை, மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் அதிக அலைச்சல் இருந்தாலுமே கூட நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உங்களது முயற்சி வீண் போகாது. அத்துடன் சிலர் புதிய கிளைகளை திறப்பீர்கள். சிலர் நிறுவனத்திற்குத் தேவையான முக்கிய உபகரணங்களை வாங்கிப் போடுவீர்கள். சிலருக்கு தொழில் அல்லது வியாபாரத்தில் நல்ல வேலை ஆட்கள் கிடைக்கப்பெறுவார்கள். உத்யோகத்தில் படிப்படியாக பணிச்சுமை குறைந்து சில ஏற்றமான பலன்களை இந்தக் காலத்தில் காண்பீர்கள். சிலருக்கு இப்போது பார்க்கும் வேலையைக் காட்டிலும் ஒரு அற்புதமான நல்ல வேலை கூட கிடைக்கப்பெறும். அனைத்துத் தரப்பினருமே ஏற்றமான பலன்களை பார்ப்பீர்கள். இறுதியில் நல்ல விதத்தில் சாதிப்பீர்கள்.
சனி பகவான் அவிட்ட நக்ஷத்திரத்தில் 5.11.2023 முதல் 23.11.2023 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிலும் அதிக சிக்கனத்துடன் இருந்து கொள்ளுங்கள். செலவுகள் அதிகரிக்கும் காலம் என்றே சொல்ல வேண்டும். எனினும், குரு அருளால் அன்றாடப் பணிகளில் தெம்புடன் இறங்குவீர்கள். ராகு/ கேது சஞ்சாரமும் கூட இந்தக் காலத்தில் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால், முன் கோபத்தை மட்டும் முடிந்த வரையில் குறைத்துக் கொள்ளப் பாருங்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். கணவன்-மனைவி இடையே தேவை இல்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட இடம் உண்டு. அதனால், கூடுமான வரையில் பிரச்சனைகளை வெளி நபர்கள் தலையீடு இல்லாமல் தம்பதிகள் உங்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். தொழில், வியாபாரத்தில் அதிக அலைச்சல்கள் ஏற்பட்டாலுமே இறுதியில் உங்களது உழைப்பிற்கான நல்ல பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது. எனினும், சிலர் தொழில் முன்னேற்றத்திற்காக கடன் வாங்க நேரிடலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் தான். எனினும், உங்களது திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும். அதன் மூலமாக இறுதியில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் சற்று தாமதம் ஆனாலுமே, இறுதியில் அது உங்களுக்கு கிடைக்கப்பெறும். அதனால் மொத்தத்தில் நீங்கள் போராடி வெல்வீர்கள். கவலை வேண்டாம்.
சனி பகவான் சதய நக்ஷத்திரத்தில் 24.11.2023 முதல் 6.4.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றே சொல்ல வேண்டி உள்ளது. அதனால், எதிலும் சற்று பொறுமையுடன் இருந்து கொள்ளுங்கள். உடல் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். உற்றார்-உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளில் அதிக நிதானம் தேவைப்படும் காலம். பேச்சினால் பலர் விரோதி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பண விவகாரங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள். எனினும், சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. சிலர் வீட்டை நல்ல விதத்தில் பராமரிப்பீர்கள். அந்த வகையில் வீடு, வாகனம் சம்மந்தமாக சில தேவையான செலவுகளும் கூட இக்காலத்தில் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். எதிர்பார்த்த பதவி உயர்வும் சிலரைத் தேடி வரும். அதன் மூலமாக பல புதிய பொறுப்புகளை நீங்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வேலை தேடிக் கொண்டு இருக்கும் நபர்களுக்கு நல்ல வேலை இந்தக் கால கட்டத்தில் கிடைக்கப்பெறும்.
சனி பகவான் பூரட்டாதி நக்ஷத்திரத்தில் 7.4.2024 முதல் 29.6.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் சற்று பொறுமையோடு இருக்க வேண்டிய கால கட்டம் இது. சிலருக்கு வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்பட இடம் உண்டு. வேலை பளு சற்று அதிகரித்து காணப்படும். எனினும், போராடி சமாளித்து விடுவீர்கள். முடிந்த வரையில் உடல் ஆரோக்கியம் கருதி நேரத்திற்கு, உண்டு உறங்க முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் சிறு, சிறு வாக்குவாதங்கள் தவிர்க்க முடியாது தான். முடிந்த வரையில் கணவன்-மனைவி இடையே அதிகம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. இந்தக் கால கட்டத்தில் உங்களது ராசிக்கு 1.5.2024 வரையில் குரு பகவான் 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால், பண வரவுகள் சற்று சாதகமாகத் தான் இருக்கும். எனினும் மேற்படி தேதிக்குப் பிறகு எதிலும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் வேலை ஆட்களை அதிகம் மேற்பார்வை செய்ய வேண்டி இருக்கும். 1.5.2024 க்குப் பிறகு செலவுகளை குறைக்க போராட வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களது பணியில் மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப் பாருங்கள். உடன் வேலை செய்பவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். மொத்தத்தில், நீங்கள் எதிலும் பொறுமை காக்கவும்.
சனி பகவான் வக்ர கதியில் 30.6.2024 முதல் 15.11.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் எதிர்பார்த்த உதவிகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். திடீர், திடீர் என்று உணர்ச்சிவசப்பட்டு வார்த்தையை மட்டும் விட்டு விடாதீர்கள். முன்கோபத்தை அதிகம் குறைத்துக் கொள்ள வேண்டிய கால கட்டம் இந்தக் கால கட்டம். கொடுக்கல்-வாங்கல் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் பணம் யாருக்காவது கடனாகக் கொடுத்தால் அது திரும்பி வர இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சின்னச், சின்ன வாக்குவாதங்கள் வந்து போகலாம். முடிந்த வரையில் அம்மாதிரியான வாக்குவாதங்களுக்கு இடம் தராதீர்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் முழு ஈடுபாட்டுடன் இறங்கினால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க உங்களால் இயலும். எனினும் தொழில் போட்டிகள் தவிர்க்க முடியாது தான். ஆனாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்தக் கால கட்டத்தில் ஒரு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். எனினும் வேலை பளு தவிர்க்க முடியாது. சில சமயங்களில் உடன் வேலை செய்பவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும். பணி நிமித்தமாக தேவை இல்லாத பயணங்களை சிலர் மேற்கொள்ள வேண்டி வரலாம். இதனால் அலைச்சல் அதிகரிக்கலாம். முடிந்த வரையில் பிரயாணங்களை திட்டமிட்டு செய்யப்பாருங்கள். மற்றபடி, நன்மை-தீமைகள் கலந்து நடக்கும் காலம் இந்தக் காலம்.
சனி பகவான் சதய நட்சத்திரத்தில் 16.11.2024 முதல் 27.12.2024 வரையில் தரக்கூடிய பலன்கள்:
இந்தக் கால கட்டத்தில் நீங்கள் எதிலும் எதிர் நீச்சல் போட்டுத் தான் முன்னேறும் படியாக இருக்கும். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இந்தக் கால கட்டம். நெருக்கடிகள் அதிகம் காணப்பட்டாலுமே, குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் சிலருக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து கூட உதவிகள் கிடைக்கப்பெறும். அதனால் உங்களது தேவைகளை நல்ல படியாகப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். முடிந்த வரையில் பிறர் விஷயங்களில் தலையிடாமல் நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். தொழில் அல்லது வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். போட்டிகள் காரணமாக சிலர் புதிய சலுகைகளை அறிவித்தே வாடிக்கையாளர்களை கவர வேண்டிய நிலை ஏற்படும். இதனால் சிலருக்கு லாபம் குறைய இடம் உண்டு. பெரிய முதலீடுகளை மட்டும் நன்கு சிந்தித்து செய்யவும். காரணம், செலவுகள் எங்கிருந்து, எப்போது வரும் என்று தெரியாத படி கையிருப்பு கரையும் காலம் இது. தொழில் கூட்டாளிகளைக் கூட அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்தே காணப்படும். முடிந்த வரையில் அதிகாரிகளுடன் தேவை இல்லாத வாக்குவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். எதிலும் நீங்கள் நிதானத்தை மேற்கொள்ள வேண்டிய கால கட்டம் இது.
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் 28.12.2024 முதல் 29.3.2025 வரையில் தரக்கூடிய பலன்கள்:
நீங்கள் எதிலும் சற்று பொறுமையுடன் இருக்க வேண்டிய கால கட்டம் இது. முடிந்த வரையில் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கும். திடீர் மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படலாம். பேச்சில் மிகவும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். நெருங்கியவர்களை அதிகம் அனுசரித்துச் செல்ல வேண்டிய கால கட்டம் இது. எடுக்கும் முயற்சிகளில் தேவை இல்லாத இடையூறுகள் ஏற்படாமல் இருக்க, மகாகணபதியை கும்பிட்டு அதன் பின்னர் எந்த ஒரு நல்ல செயலையும் செய்யத் துவங்குங்கள். சிலருக்கு பிள்ளைகள் வழியில் கவலைகள் வந்து போகலாம். சுப காரிய பேச்சு வார்த்தைகள் தாமதம் ஆனாலுமே கூட இறுதியில் எல்லாம் நல்ல படியாக நடந்தேறும். அதனால், கவலை வேண்டாம். தொழில், அல்லது வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்யும் சமயத்தில் மட்டும் கூடுதல் கவனத்துடன் இருந்து கொள்ளுங்கள். வேலை ஆட்கள் ஒத்துழைப்பு ஓரளவே உங்களுக்கு நன்மை செய்யும். வேலைக்கு செல்பவர்கள் பிறர் பேச்சை கேட்டுக் கொண்டு அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை செய்யாதீர்கள். முடிந்த வரையில் உங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ளப் பாருங்கள். அதிகாரிகளுடன் யோசித்துப் பேசுங்கள். முடிந்த வரையில் முன் கோபத்தை குறைத்துக் கொள்ளப் பாருங்கள். உங்கள் பணியில் முழு கவனத்துடன் செயல்பட வேண்டிய கால கட்டம் இது. மொத்தத்தில், கோபத்தை குறைத்துப் பொறுமையாக இருந்தீர்கள் என்றால் எதிர்பார்த்த நன்மைகள் உங்களுக்கு உண்டு.
அதிர்ஷ்டம் அளிப்பவை
ராசியான எண்
3,12,21
ராசியான நிறம்
மஞ்சள்
ராசியான கிழமை
திங்கள், வியாழன்
ராசியான கல்
கனகபுஷ்பராகம்
ராசியான திசை
வடகிழக்கு
ராசியான தெய்வம்
தக்ஷிணாமூர்த்தி